E-Shram Card: இந்திய அரசு, அமைப்புசாரா துறையில் பணிபுரியும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஒரு சிறந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள அனைத்து தொழிலாளிக்கும் 60 வயதுக்குப் பிறகு, மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் நன்மைகளைப் பெற, பயனாளிகள் இ-ஷ்ரம் யோஜனாவின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும்.
E-Shram Card Pension Yojna: இ-ஷ்ரம் கார்டு ஓய்வூதிய திட்டம்
மத்திய அரசு மூலம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தால் தொழிலாளர்களுக்கு பல விதமான நன்மைகள் கிடைக்கின்றன. இதில் சிறந்த விஷயம் என்னவென்றால், இ-ஷ்ரம் அட்டையை உருவாக்க எங்கும் சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் இதைப் பெறலாம். இதில், ஓய்வூதியத்துடன் தொழிலாளர்கள் பல அரசு திட்டங்களின் நன்மைகளையும் பெற முடியும்.
இ-ஷ்ரம் அட்டை என்றால் என்ன? இதை யாரெல்லாம் பெற முடியும்? இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? இந்த தகவல்களை இங்கே காணலாம்.
Unorganised Sector Employees: அமைப்புசாரா துறை ஊழியர்களுக்கான பிரத்யேகத் திட்டம்
அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களை அடையாளம் கண்டு, காப்பீட்டுத் திட்டத்துடன் கூடிய மாதாந்திர ஓய்வூதிய வசதியை வழங்குவதற்காக இ-ஷ்ரம் கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு தனித்துவமான டிஜிட்டல் அட்டை வழங்கப்படுகிறது. அதில் அவரது அடையாளம் மற்றும் தொழில் தொடர்பான தகவல்கள் இருக்கும். இந்த அட்டை தொழிலாளர்கள் அரசாங்கத் திட்டங்களின் நன்மைகளைப் பெற உதவுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பையும் வழங்குகிறது.
E Shram Card
16 முதல் 59 வயது வரையிலான அனைத்து கடின உழைப்பாளிக்கும் இந்த கார்ட் ஒரு பொன்னான வாய்ப்பாக பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் இ-ஷ்ரம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்திற்கான வயது வரம்பு 16 முதல் 59 வயது வரை ஆகும். இந்தத் திட்டம் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கானது. இதன் கீழ் தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஓலா, ஊபர், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களின் தளத் தொழிலாளர்களும் இதில் அடங்குவர். தினசரி கூலி வேலை செய்பவர்கள், ஒழுங்கமைக்கப்படாத துறையில் பணிபுரிபவர்கள் என அனைவருக்கும் இந்த திட்டம் கிடைக்கும்.
இ-ஷ்ரம் கார்டை பெறுவது எப்படி?
இ-ஆஷ்ரம் கார்டுகளை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் உருவாக்கலாம். ஆன்லைன் மூலம் இ-ஷ்ரம் கார்டை உருவாக்குவதற்கான எளிதான செயல்முறையை இங்கே காணலாம்.
இ-ஷ்ரம் கார்டைப் பெறுவதற்கான ஆன்லைன் செயல்முறை
- முதலில் இ-ஷ்ரம் போர்ட்டலுக்குச் செல்லவும் (https://eshram.gov.in/).
- முகப்புப் பக்கத்தில் உள்ள “இ-ஷ்ரமில் பதிவு செய்” என்பதை கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கும்.
- அங்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.
- EPFO, ESIC இன் செயலில் உள்ள உறுப்பினர்களின் தகவல்களில் ஆம் அல்லது இல்லை என்று பதிலளிக்கவும்.
- இதற்குப் பிறகு OTP சரிபார்ப்பு செயல்முறை முடிக்கப்பட வேண்டும்.
- பின்னர் உங்கள் முகவரி மற்றும் கல்வி தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும்.
- உங்கள் திறன் பெயர், வணிக வகை மற்றும் வேலை வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
- வங்கி விவரங்களை உள்ளிட்டு சுய அறிவிப்பு விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
- இதற்குப் பிறகு ‘சமர்ப்பி’ பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். OTP ஐ உள்ளிட்டு ‘சரிபார்க்கவும்’ பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு, e-Shram அட்டை உருவாக்கப்படும்.
- அதைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இ-ஷ்ரம் அட்டை பெற தேவையான ஆவணங்கள்
இ-ஷ்ரம் அட்டை பெற பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்:
- மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஆதார் அட்டை
- செல்லுபடியாகும் வங்கிக் கணக்கு எண்
ஓய்வூதியத்துடன் காப்பீட்டுப் பாதுகாப்பு
இ-ஷ்ரம் அட்டைதாரர்கள் பின்வரும் சலுகைகளைப் பெறுவார்கள்:
- Pradhan Mantri Mandhan Yojana: பிரதான் மந்திரி மான்தன் யோஜனாவின் கீழ் 60 வயதிற்குப் பிறகு மாதத்திற்கு ரூ.3,000 ஓய்வூதியம்.
- பகுதியளவு ஊனமுற்றால் ரூ.1,00,000 நிதி உதவி.
- பயனாளி இறந்தால் ரூ.2,00,000 இறப்பு காப்பீடு.
- இது தவிர, பிற அரசு திட்டங்களின் சலுகைகளையும் பெறலாம்.
இ-ஷ்ரம் அட்டையை யார் பெற முடியும்?
தினக்கூலி தொழிலாளர்கல், விற்பனையாளர்கள், உதவியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட பல வகையான தொழிலாளர்கள் இ-ஷ்ரம் அட்டைகளைப் பெறலாம். மேலும் தகவலுக்கு, https://findmycsc.nic.in/csc/ என்ற தளத்தை சென்று பார்வையிடலாம். இந்தத் திட்டம், தனது எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்பும் அமைப்புசாரா துறையில் உள்ள அனைத்து கடின உழைப்பாளிக்கும் உதவியாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









