இந்திய மக்கள் அனைவருக்கும் இனி பென்ஷன்: மத்திய அரசின் மெகா ஓய்வூதியத் திட்டம்

Universal Pension Scheme: மத்திய அரசு நாட்டு மக்களுக்காக ஒரு புத்தம் புதிய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவரவுள்ளது. அதன் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 12, 2025, 04:46 PM IST
  • யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
  • இது தன்னார்வ பங்களிப்பு திட்டமா?
  • யாரெல்லாம் இதில் சேர முடியும்?
இந்திய மக்கள் அனைவருக்கும் இனி பென்ஷன்: மத்திய அரசின் மெகா ஓய்வூதியத் திட்டம்

Universal Pension Scheme: மத்திய அரசு நாட்டு மக்களின் நலனுக்காக பல வித நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. மக்களின் தேவைக்கு ஏற்ப, பல வித பிரிவுகளை சார்ந்த மக்களுக்காக பிரத்யேகமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகள், விவசாயிகள், பெண்கள், மூத்த குடிமக்கள் என அனைவருக்கும் தனித் தனி நலத்திட்டங்கள் உள்ளன.

Add Zee News as a Preferred Source

Pension Scheme: ஓய்வூதியத் திட்டங்கள்

மத்திய அரசின் நலத்திட்டங்களின் பல வித ஓய்வுதியத் திட்டங்களும் உள்ளன. வயது மூப்பில் நிலையான வருமானம் அனவருக்கும் மிக அவசியமாகும். அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய அமைப்பின் (National Pension System) மூலமும், தனியார் துறை ஊழியர்களுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூலம் நடத்தப்படும் இபிஎஸ் கணக்கின் (EPS Account) மூலமும் ஓய்வூதியம் வழஙப்படுகின்றது. அமைப்புசாரா துறைகளை (Unorganised Sector) சார்ந்தவர்களுக்காக தற்போது, ​​அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana)மற்றும் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா (Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana) போன்ற திட்டங்களை அரசாங்கம் நடத்தி வருகின்றது. இந்தத் திட்டங்களின் கீழ், 60 வயதிற்குப் பிறகு ஓய்வூதியம் கிடைக்கிறது.

யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டம்

எனினும், அனைத்து ஓய்வூதியத் திட்டங்களும் துண்டு துண்டாக உள்ளன. அதாவது ஓய்வூதியத்திற்கான ஒரு பொதுவான தளத்தை உருவாக்க வேண்டும் என அரசு திட்டமிட்டுள்ளது. யூனிவர்சல் ஓய்வூதியத் திட்டம் அந்த ஒருங்கிணைந்த தளமாக இருக்கும். வயதான காலத்தில் குடிமக்கள் அனைவருக்கும் நிதிப் பாதுகாப்பை அளிப்பது இதன் நோக்கமாக இருக்கும். இந்தத் திட்டத்தின் வாயிலாக, சம்பளம் பெறும் ஊழியர்கள், அமைப்புசாராத் துறை தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள், கிக் தொழிலாளர்கள் என அனைவரும் ஓய்வூதியத்தின் பலனைப் பெற முடியும்.

Voluntary Scheme: தன்னார்வத் திட்டம்

அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள், கூலித் தொழிலாளிகள், அமைப்புசாரா துறைகளை சேர்ந்தவர்கள் என அனைவரும் இந்த உலகளாவிய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் ஊதியம் பெற முடியும். செய்யும் தொழில், வேலை எதையும் ஒரு காரணியாக கணக்கில் எடுக்காமல், அனைவருக்குமான ஓய்வூதியத் திட்டமாக இது செயல்படும். இது ஒரு தன்னார்வ பங்களிப்பு திட்டமாக இருக்கும். அதாவது, இதில் பயனாளிகள் தாமாக, தங்கள் தேவை மற்றும் பொருளாதார நிலைக்கு ஏற்ப ஓய்வூதியத்திற்காக பங்களிக்கலாம்.  மேலும் இதில் அரசாங்கம் அதன் தரப்பிலிருந்து எந்த பங்களிப்பையும் செய்யாது. 

இந்த திட்டம் NPS -க்கு மாற்றாக அமையுமா?

இந்த புதிய திட்டம் தற்போதுள்ள தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற்றாக அமையாது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தன்னார்வ பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆய்வுகளை தொழிலாளர் அமைச்சகம் தொடங்கியுள்ளது. அதன் பிறகு, திட்டம் குறித்து பங்குதாரர்களிடம் ஆலோசனை நடத்தப்படும். 

இந்த திட்டத்தில் யார் முதலீடு செய்ய முடியும்?

18-60 வயதுக்குட்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். தங்கள் விருப்பம் மற்றும் தேவைக்கு ஏற்ப இதில் பயனாணிகள் பணத்தை டெபாசிட் செய்யலாம். 60 வயதிற்குப் பிறகு ஓய்வூதியப் பலன்களைப் பெறலாம். 

மேலும் படிக்க | Post Office FD: வட்டியில் மட்டும் இரு மடங்கு வருமானம், இப்படி முதலீடு செய்தால் ஜாக்பாட்

மேலும் படிக்க | Mutual Fund: ரூ.10,000 முதலீட்டை ரூ.2 கோடியாக பெருக்க உதவும் டாப்-அப் SIP மந்திரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News