மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்: முதுமையில் கூலான வாழ்க்கை, மாதம் ரூ.20,500 வருமானம்

Senior Citizen Savings Scheme: மூத்த குடிமக்கள், தங்கள் ஓய்வூதியப் பணத்தை நல்ல வருமானம் கிடைக்கும் இடத்தில் முதலீடு செய்ய விரும்பினால், இந்தத் திட்டம் அவர்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 2, 2025, 04:15 PM IST
  • தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்.
  • குறைந்தபட்ச மற்றும் அதிகப்பட்ச முதலீடு எவ்வளவு?
  • மாத வருமானம் எவ்வளவு கிடைக்கும்?
மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்: முதுமையில் கூலான வாழ்க்கை, மாதம் ரூ.20,500 வருமானம்

Senior Citizen Savings Scheme: நம் அனைவருக்கும் பணத்திற்கான தேவை உள்ளது, வயது அதிகரிக்கும்போது இந்த தேவை அதிகரிக்கின்றது. வயதான காலத்தில் நம்மால் இளமையில் இருந்ததுபோல ஓடி ஆடி பணம் ஈட்ட முடியாது. ஆகையால் முதுமையில் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருக்க சரியான திட்டமிடல் மிக அவசியமாகும்.

Add Zee News as a Preferred Source

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

நமது நாட்டில் மூத்த குடிமக்களுக்கான பல வித திட்டங்கள் உள்ளன. அவற்றில் மிக பிரபலமான ஒன்று, தபால் நிலைய மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம். ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள், தங்கள் ஓய்வூதியப் பணத்தை நல்ல வருமானம் கிடைக்கும் இடத்தில் முதலீடு செய்ய விரும்பினால், இந்தத் திட்டம் அவர்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இந்த திட்டம் நாட்டில் மிகவும் பிரபலமானதாக இருப்பதோடு மிகவும் பாதுகாப்பானதாகவும் உள்ளது. 

Senior Citizens: மூத்த குடிமக்களுக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு 8.2 சதவீத வட்டி கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடிமக்களும் பல சிறந்த நன்மைகளைப் பெறுகிறார்கள். தபால் நிலையத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதன் நன்மைகள் என்ன? இதன் தனித்துவமான பயன்கள் என்ன? இந்த கணக்கை எப்படி திறப்பது? இந்த அனைத்து தகவல்கலையும் இங்கே காணலாம்.

தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 

முதலீட்டாளர்கள் தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் மொத்தம் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இருப்பினும், 5 ஆண்டுகள் முதலீடு செய்த பிறகு, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.

குறைந்தபட்ச மற்றும் அதிகப்பட்ச முதலீடு

இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறிப்பாக மூத்த குடிமக்களுக்காக நடத்தப்படுகிறது. இந்தக் காரணத்தினால், 60 வயதுக்கு மேற்பட்ட நாட்டின் குடிமக்கள் மட்டுமே இதில் முதலீடு செய்ய முடியும்.

கணக்கு வகைகள்

நீங்கள் தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் தனியாகவும் கூட்டாகவும் கணக்கைத் திறக்கலாம். இந்தத் திட்டத்தில், நீங்கள் ரூ.1 லட்சம் வரை ரொக்கமாக டெபாசிட் செய்யலாம்.

ரூ.1 லட்சத்திற்கு மேல் உள்ள தொகைகள் காசோலை மூலம் டெபாசிட் செய்யப்பட வேண்டும். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரி விலக்கும் பெறலாம். இந்தத் திட்டம் முதலீட்டைப் பொறுத்தவரை முற்றிலும் பாதுகாப்பானதாக கருதப்படுகின்றது. இதில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் எந்தவிதமான சந்தை அபாயங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படாது.

மாத வருமானம் எவ்வளவு கிடைக்கும்?

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில், ஒவ்வொரு காலாண்டிலும் (மூன்று மாதங்களுக்கு ஒரு முறை) முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாதாந்திர வருமானத்திகான ஏற்பாட்டை செய்ய விரும்பினால், உங்கள் தேவைக்கேற்ப வட்டியை நிர்வகிக்கலாம்.

ரூ.30 லட்சம் முதலீடு செய்தால் வருமானம் எவ்வளவு கிடைக்கும்?

- முதலீட்டு தொகை: ரூ.30 லட்சம்
- ஆண்டு வட்டி விகிதம்: 8.2%
- காலாண்டு வட்டித் தொகை: ரூ.60,150
- மாத வருமானம்: ரூ.20,050

இந்த கணக்கின் படி, ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் வட்டியாக மட்டும் மொத்தம் ரூ.12.03 லட்சம் கிடைக்கும். 

(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ தளங்களை காணவும். எந்தவொரு பரிவர்த்தனைகளையும் செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க பரிந்துரைக்கப்படுகின்றது. )

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: 40-50% அடிப்படை ஊதிய உயர்வு, குஷியில் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள்

மேலும் படிக்க | ரேஷன் கார்டில் பெயர் நீக்கமா? வீட்டில் இருந்தபடியே செய்யலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News