மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்: மாதா மாதம் ரூ.20,500 வருமானம், பாதுகாப்பான முதலீடு

Senior Citizen Saving Scheme: தபால் அலுவலகம் மூலம் நடத்தப்படும் பாதுக்காப்பான, நல்ல வருமானம் ஈட்டக்கூடிய திட்டங்களில்  மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் முக்கியமான ஒரு திட்டமாக உள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 21, 2025, 12:37 PM IST
  • மூத்த குடிமக்களுக்கு திட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?
  • இதில் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
  • எஸ்சிஎஸ்எஸ் கணக்கை எங்கே திறப்பது?
மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்: மாதா மாதம் ரூ.20,500 வருமானம், பாதுகாப்பான முதலீடு

Senior Citizen Saving Scheme: மனிதர்களாகிய நமக்கு பணத்தை சேர்த்து வைப்பது மிக அவசியமாகும். பணம் சம்பாதிப்பது எவ்வளவு அவசியமோ அதே அளவு அதை சேமிப்பதும் அவசியமாகும். பணத்தை பல வழிகளில் சேமிக்கலாம், முதலீடு செய்து பெருக்கலாம். இதற்கு பல வித திட்டங்கள் உள்ளன. 

Add Zee News as a Preferred Source

சிலர் பாதுகாப்பான வழியில் பணத்தை முதலீடு செய்ய நினைக்கிறார்கள். ஆனால், சிலரோ ரிஸ்க் எடுத்து அதிக லாபம் காண ஆசைப்படுகிறார்கள். பாதுகாப்பான வழியில் நல்ல வருமானம் அளிக்கும் பல திட்டங்களும் உள்ளன. இவற்றுக்கு அரசாங்கத்தின் உத்தரவாதமும் கிடைக்கும் என்பது இன்னும் சிறப்பு. மக்கள் ஓய்வு பெறும் வயதை நோக்கி நகரும்போது, ​​அவர்கள் தங்கள் சேமிப்பின் மூலம் பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று எண்ணுகிறார்கள். மூத்த குடிமக்களின் இந்தத் தேவைகளை மனதில் கொண்டு, அரசாங்கம் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை (SCSS) நடத்தி வருகிறது. 

தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 

தபால் அலுவலகம் மூலம் நடத்தப்படும் பாதுக்காப்பான, நல்ல வருமானம் ஈட்டக்கூடிய திட்டங்களில்  மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் முக்கியமான ஒரு திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாதா மாதம் ரூ.20,500 ஓய்வூதியமாக பெறலாம். இந்த ஐந்து ஆண்டுகளுக்கு மாதம் ரூ.20,500 கிடைக்கும். 

குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000

தபால் அலுவலக மூத்த குடிமக்கள் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இதில் குறைந்தபட்சம் வெறும் ரூ.1,000 உடன் முதலீடு செய்யத் தொடங்கலாம். ஓய்வு பெற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தை விரும்பும் மூத்த குடிமக்களுக்கு இந்தத் திட்டம் சரியான திட்டமாக இருக்கும். இதில் முதலீடு செய்வதால், ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி கிடைக்கும். இது உங்கள் மாதாந்திர செலவுகளை ஈடுகட்ட உதவும். 

SCSS: இந்த திட்டத்தில் யார் சேர முடியும்?

- இந்தத் திட்டம் 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கானது. 
- இது தவிர, 55 முதல் 60 வயது வரையிலான தன்னார்வ ஓய்வூதியம் (VRS) பெற்றவர்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 
- பாதுகாப்புத் துறைகளில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களும் 50 வயதில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். 
- இதன் சிறப்பு என்னவென்றால், இந்தக் கணக்கை ஒரு நபர் தனது வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து கூட்டுக் கணக்காகவும் திறக்கலாம்.
- இதனால் இருவரும் இந்தத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள்.

SCSS: எஸ்சிஎஸ்எஸ் கணக்கை எங்கே திறப்பது?

மூத்த குடிமக்கள் வங்கிகள் அல்லது தபால் நிலையத்திற்கு சென்று தங்கள் SCSS கணக்கைத் திறக்கலாம். ஒரு கணக்கைத் திறக்க, குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை டெபாசிட் செய்ய வேண்டும். இதில், நீங்கள் ரூ.1,000 இன் மடங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.30 லட்சத்தை தாண்டக்கூடாது. 

Interest Rate: இதில் எவ்வளவு வட்டி கிடைக்கும்?

இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது மற்ற சேமிப்புத் திட்டங்களை விட மிக அதிகமாகும். இந்தத் திட்டத்தில் ஒருவர் ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், அவருக்கு ஆண்டுக்கு ரூ.2.46 லட்சம் வட்டி கிடைக்கும். இது மாதத்திற்கு சுமார் ரூ.20,500 ஆகும். இது வழக்கமான வருமானத்திற்கான வலுவான ஆதாரமாக மாறும், ஓய்வுக்குப் பிறகும் நிதி ரீதியாக உதவும்.

Senior Citizens: மூத்த குடிமக்களுக்கு திட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?

ஓய்வுக்குப் பிறகு பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீட்டிற்கு தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஒரு சிறந்த வழியாக இருக்கும். இந்தத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் பணத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. அகையால், ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்தைப் பெற விரும்பும் நபர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதைப் பரிசீலிக்கலாம்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு : கேட்டது என்ன, கிடைத்தது என்ன? மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்!

மேலும் படிக்க | 7 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் மாத ஓய்வூதியம்: 8 நாட்களில் வரும் EPFO குட் நியூஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News