)
RBI New Cheque Clearing Rules: வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. காசோலை விதிகளில் இந்திய ரிசர்வ் வங்கி மாற்றங்களை செய்துள்ளது. இப்போதுள்ள நடைமுறையின் படி, ஒருவர் ஒரு காசோலையை டெபாசிட் செய்தால், அது கிளியர் ஆக அடுத்த இரண்டு வேலை நாட்கள் வரை காத்திருக்க வெண்டும். அதன் பிறகுதான் பணம் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
ஆனால் இப்போது விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் காசோலையை எங்கு டெபாசிட் செய்தாலும் பணம் கணக்கிற்கு மாற்றப்படும். இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) காசோலை க்ளெய்ம் விதிகளை மாற்ற முடிவு செய்துள்ளது. அக்டோபர் 4 முதல், காசோலை கிளெய்மிற்கான கால வரம்பு 2 வேலை நாட்களில் இருந்து சில மணிநேரங்களாகக் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cheque Clearance
செக் கிளியரன்சுக்கான புதிய விதி
- CTS எனப்படும் Cheque Truncation System -ஐ Continuous Clearing மற்றும் Settlement on Realisation -க்கு மாற்றுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
- இது வங்கியில் காசோலை கிளியரன்சுக்கு ஆகும் நேரத்தை இரண்டு நாட்களில் இருந்து சில மணிநேரங்களாகக் குறைக்கும்.
- காசோலை தீர்வு முறையை விரைவுபடுத்த மத்திய வங்கியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
RBI New Rule: அக்டோபர் 4 முதல் புதிய விதி அமல்படுத்தப்படும்
- ரிசர்வ் வங்கி வழங்கிய தகவலில், புதிய முறை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முதல் கட்டம் அக்டோபர் 4, 2025 முதல் ஜனவரி 3, 2026 வரை பொருந்தும், இரண்டாவது கட்டம் ஜனவரி 3 முதல் செயல்படுத்தப்படும்.
- புதிய அமைப்பின் செயல்பாடு குறித்த விரிவான தகவல்களை அளித்த ரிசர்வ் வங்கி, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை காசோலையை சமர்ப்பிக்க வேண்டிய ஒரு ப்ரெசன்டேஷன் அமர்வு இருக்கும் என்று கூறியது.
- இதன் கீழ், காசோலையைப் பெறும் வங்கி காசோலையை ஸ்கேன் செய்து தீர்வு மையத்திற்கு அனுப்ப வேண்டும்.
- இதன் பிறகு, தீர்வு மையம் அந்த காசோலையின் படத்தை தொகையை செலுத்தும் வங்கிக்கு அனுப்பும்.
- இதற்குப் பிறகு, உறுதிப்படுத்தல் அமர்வு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இருக்கும்.
- இதில், தொகையை செலுத்தும் வங்கி அந்த காசோலையில் நேர்மறை அல்லது எதிர்மறை உறுதிப்படுத்தலை வழங்க வேண்டும்.
இங்குள்ள பெரிய விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு காசோலைக்கும் ஒரு காலாவதி நேரம் (item expiry time) இருக்கும். அந்த நேரத்திற்குள் உறுதிப்படுத்தலை வழங்குவது அவசியம். Continuous Clearing மற்றும் Settlement on Realisation -இன் முதல் கட்டத்தில், அனைத்து வங்கிகளுக்கும் காசோலையை கிளியர் செய்வதற்கான காலாவதி நேரம் இரவு 7 மணியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இரண்டாவது கட்டத்தில், இது மூன்று மணி நேரமாகக் குறைக்கப்படும். இதன் பொருள் வங்கி காசோலையை வழங்கிய மூன்று மணி நேரத்திற்குள் அதை கிளியர் செய்ய வேண்டும். CTS வந்த பிறகு, காசோலை வழங்குவதற்கான எந்த பதிவும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ