EPFO Rule Change: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சிறப்பான செயல்பாட்டை ஏதுவாக்க சமீபத்தில் பல மாற்றங்களை செய்துள்ளது. EPFO முன்கூட்டியே பணம் எடுக்கும் கோரிக்கைகளில் 60% கோரிக்கைகளை ஆடோமேடிக் முறையில் தீர்த்து வைத்துள்ளது. இந்த வகையில், இந்த நிதியாண்டில் 2.16 கோடி க்ளெய்ம்கள் தீர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 89.52 லட்சம் க்ளெய்ம்கள் செட்டில் செய்யப்பட்டன. இந்தத் தகவலை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் ஷோபா கரந்த்லஜே மக்களவையில் தெரிவித்தார். முன்பணம் செலுத்தும் வரம்பும் ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இது EPFO சேவைகளை மக்கள் அணுகுவதை இன்னும் எளிதாக்கும்.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் வசதிகள்
EPFO தனது செயல்பாடுகளை இன்னும் எளிதாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இப்போது நோய், வீடு வாங்க / கட்ட, கல்வி மற்றும் திருமணம் போன்ற பிரிவுகளின் கீழ் உள்ள க்ளெய்ம்களும் கோரிக்கைகளும் தானாகவே, அதாவது ஆடோமேடிக் பயன்முறையில் தீர்க்கப்படுகின்றன. இந்த தானியங்கி முறை மூலம் க்ளெய்ம்கள் மூன்று நாட்களில் தீர்க்கப்படும் என்று தொழிலாளர் அமைச்சர் கூறியுள்ளார். 'இந்த நிதியாண்டில் மார்ச் 6, 2025 வரை EPFO 2.16 கோடி கோரிக்கைகளைத் தீர்த்துள்ளது. இது ஒரு சாதனை அளவு ஆகும். கடந்த 2023-24 நிதியாண்டில், 89.52 லட்சம் க்ளெய்ம்கள் செட்டில் செய்யப்பட்டன. இது EPFO தனது பணிகளை மேம்படுத்துவதிலும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.
தகவல்களைப் புதுப்பிப்பதற்கான செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது
உறுப்பினர் விவரங்களை சரிசெய்வதற்கான செயல்முறையையும் EPFO எளிதாக்கியுள்ளது. ஆதார் சரிபார்க்கப்பட்ட உறுப்பினர்கள் தங்கள் யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) தாங்களாகவே மாற்றிக் கொள்ளலாம். இப்போது இதில் EPFO தலையிட வேண்டிய அவசியமில்லை.
EPF Subscriber: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு சுலபமான செயல்முறைகள்
இப்போது கிட்டத்தட்ட 96% திருத்தங்கள் EPF அலுவலகத்திற்குச் செல்லாமலேயே செய்யப்படுகின்றன. 99% க்கும் மேற்பட்ட க்ளெய்ம்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்படுகின்றன. மார்ச் 2025 நிலவரப்படி, 7.14 கோடி க்ளெய்ம்கள் ஆன்லைனில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது EPFO டிஜிட்டல் முறையில் செயல்படுவதில் எவ்வளவு கவனம் செலுத்துகிறது என்பதைக் காட்டுகிறது.
முன்னதாக, பரிமாற்றக் கோரிக்கைக்கு, முதலாளி / நிறுவனம் ஆதார் சரிபார்க்கப்பட்ட UAN-ஐ சான்றளிக்க வேண்டியது அவசியமாக இருந்தது. இப்போது இந்த விதியும் நீக்கப்பட்டுள்ளது. இது உறுப்பினர்களுக்கு செயல்முறைகளை மிகவும் எளிதாக்கியுள்ளது.
EPF Claim Process: இபிஎஃப் கிளெய்ம் செயல்முறையில் மேம்பாடு
இது தவிர, EPFO, தவறுதலாக ஏதேனும் ஒரு நிறுவனத்துடன் கணக்கு இணைக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ஒரு வசதியையும் வழங்கியுள்ளது. இப்போது அவர்கள் தங்கள் கணக்கின் இணைப்பை நீக்கலாம். இந்த வசதி ஜனவரி 18, 2025 அன்று தொடங்கப்பட்டது. பிப்ரவரி மாத இறுதி நிலவரப்படி, 55,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்கள் கணக்குகளின் இணைப்பை துண்டித்துவிட்டனர். உறுப்பினர்களின் கணக்குகள் முறையாக நிர்வகிக்கப்படுவதற்கும், அவர்கள் தங்கள் தகவல்களை சொந்தக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் இவை அனைத்தும் செய்யப்படுகின்றன.
EPFO மற்றொரு நல்ல மேம்பாட்டையும் செய்துள்ளது. இப்போது உறுப்பினர்களின் க்ளெய்ம்கள் சரியாக உள்ளதா இல்லையா என்பதை இபிஎஃப்ஓ முன்கூட்டியே அவர்களிடம் தெரிவித்து விடுகின்றது. இது தவறான க்ளெய்ம்கள் பதிவு செய்யப்படுவதைத் தவிர்க்க உதவும். இது அப்ஃப்ர்ண்ட் வேலிடேஷன் என்று அழைக்கப்படுகிறது.
EPF Account: எளிதான இபிஎஃப் கணக்கு செயல்முறை
இந்த அனைத்து நடவடிக்கைகளாலும், EPFO அதன் உறுப்பினர்களுக்கு பணிகளை மிகவும் எளிதாக்கியுள்ளது. இப்போது மக்கள் தங்கள் PF கணக்கிலிருந்து எளிதாகப் பணத்தை எடுக்கலாம், தங்கள் விவரங்களைத் திருத்திக் கொள்ளலாம். EPFO அதன் உறுப்பினர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
EPFO-வின் இந்த முயற்சிகளால் இபிஎஃப் உறுப்பினர்கள் ஏராளமான பலன்களைப் பெறுகிறார்கள். அவர்கள் இப்போது தங்கள் தேவைகளுக்காக PF-ல் இருந்து எளிதாகப் பணம் எடுக்க முடிகிறது. தனது உறுப்பினர்களுக்கு எப்போதும் தயாராகவும் உதவியாகவும் இருக்க வேண்டும் என்பதே EPFO -இன் முயற்சியாக உள்ளது.
மேலும் படிக்க | 8வது சம்பள கமிஷன் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









