)
IndusInd Bank Scam: சமீப காலங்களில் பல வங்கிகளில் மோசடிகள் பற்றிய பல செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. சில வங்கிகளில் சிலர் முழு அமைப்பையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து தங்களுக்கு சாதகமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது பற்றி அந்த வங்கிகளிலேயே யாருக்கும் தெரிவதில்லை.
இப்படி ஒரு நிகழ்வுதான் பிரபல வங்கியான இண்டஸ்இண்ட் வங்கியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் வங்கித்துறையில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இண்டஸ்இண்ட் வங்கியின் ஒரு முன்னாள் தலைமை நிதி அதிகாரி 10 வருட பழமையான 'கருவூல மோசடியை' அம்பலப்படுத்தியுள்ளார். இந்த மோசடி வெறும் புள்ளிவிவரங்களைப் பற்றியது மட்டுமல்ல, ஒரு தனி மனிதனின் தைரியம், அச்சம் நிறைந்த சூழல் மற்றும் வங்கியின் உள் மோதல் பற்றியது. என்ன நடந்தது என இந்த பதிவில் காணலாம்.
இந்த சம்பவம் ஆகஸ்ட் 26 அன்று எழுதப்பட்ட ஒரு கடிதத்தின் மூலம் சூடுபிடிக்கிறது. கடிதம் நேரடியாக பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்தக் கடிதத்தை எழுதியவர் இண்டஸ்இண்ட் வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி (CFO) கோவிந்த் ஜெயின். அவர் தனது கடிதத்தில் வெளிப்படுத்திய விஷயம் வங்கித் துறையில் ஒரு வெடிகுண்டு தாக்குதலுக்கு சமமான தீவிரம் கொண்டது.
"வங்கியின் கருவூல நடவடிக்கைகளில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கடுமையான முறைகேடுகள் நடந்து கொண்டிருந்தன" என அவர் கூறியுள்ளார். பத்து வருடங்கள் என்று சாதாரண விஷயம் அல்ல. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த முறைகேடுகளை தான் மட்டுமே தனி மனிதனாக கண்டுபிடித்ததாகவும், இந்த முழு மோசடியையும் அம்பலப்படுத்த தனியாகப் போராடியதாகவும் கோவிந்த் ஜெயின் கூறியுள்ளார்.
- கோவிந்த் ஜெயின் சொன்ன உண்மை கதை முறைகேடுகள் பற்றியது மட்டுமல்ல, அதற்கு ஒரு பயங்கரமான மற்றொரு பக்கமும் உள்ளது.
- வங்கியின் சில மூத்த அதிகாரிகள், குறிப்பாக சுனில் மேத்தா மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள், வங்கிக்குள் 'அச்சம் நிறைந்த சூழலை' உருவாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
- இந்தப் பிரச்சினைகளை அவர் எழுப்பியவுடன், அவர் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு உண்மையான குற்றவாளிகள் காப்பாற்றப்பட்டதாக ஜெயின் கூறுகிறார்.
- ஜெயினை ஆதரிக்கத் துணிந்த ஊழியர்கள் கூட தனிமைப்படுத்தப்பட்டபோது ஜெயின் தன் பொறுமையை இழந்தார்.
- ஒரு திரில்லர் படத்திற்கு ஒப்பான உண்மை சம்பவமாக இது இருந்தது.
- வங்கியில் உண்மைக்காக குரல் எழுப்பியவரை வாயடைக்க முயற்சி செய்யப்படுவதாக ஜெயின் கூறுகிறார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு மற்றொரு பக்கமும் உள்ளது. ஜெயினின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் இண்டஸ்இண்ட் வங்கி முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் "ஆதாரமற்றவை மற்றும் ஏதோ ஒரு நோக்கத்தால் தூண்டப்பட்டவை" என்று வங்கி கூறுகிறது.
மார்ச் மற்றும் மே 2025 க்கு இடையில் டெரிவேடிவ்ஸ், மைக்ரோஃபைனான்ஸ் மற்றும் பிற வருவாய் ஆதாரங்களில் நடந்த கணக்கியல் முறைகேடுகள் குறித்து பங்குச் சந்தைக்குத் தெரிவித்ததாக வங்கி தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல், வெளிப்புற நிறுவனங்கள் மூலம் வங்கி ஒரு சுயாதீன விசாரணையை மேற்கொண்டதாகவும், ஒழுங்குமுறை ஆணையத்திடம் மோசடி குறித்து புகார் அளித்ததாகவும், மேலும் SFIO (தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம்) மற்றும் மும்பை EOW (பொருளாதார குற்றப் பிரிவு) ஆகியவற்றிலும் புகார்களை அளித்ததாகவும் வங்கி தெரிவித்துள்ளது.
ஜெயினின் புகாரை தள்ளுபடி செய்யுமாறு வங்கி நிதி அமைச்சகத்திடம் முறையிட்டுள்ளது. வங்கி வாரியம் முழுமையான நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட்டதாகவும், அதே நேரத்தில் ஜெயின் நடந்து வரும் விசாரணைகளைத் தடுக்க முயற்சிப்பதாகவும் வங்கி தெரிவித்துள்ளது. டெரிவேடிவ்ஸ் போர்ட்ஃபோலியோவில் கண்டறியப்பட்ட முறைகேடுகள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய அனைத்து தகவல்களையும் பங்குச் சந்தைக்கு வழங்கியுள்ளதாகவும் வங்கி செய்தித் தொடர்பாளரும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்துக்கும் அடிப்படை இல்லாமல் இல்லை. மார்ச் மாதத்தில், இந்துஜாவால் ப்ரமோட் செய்யப்படும் இந்த வங்கி சந்தேகிக்கப்படும் சில மோசடிகளைப் பற்றி புகாரளித்தது. இதன் காரணமாக ஒரு காலாண்டில் சுமார் ரூ.2,000 கோடி பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியிருந்ததாகவும் வங்கி தெரிவித்தது. தணிக்கையாளர்கள் ரூ.2,600 கோடி கணக்கியல் முறைகேடுகள் குறித்தும் கேள்விகளை எழுப்பினர்.
இந்த முறைகேடுகளில் இவை அனைத்தும் அடங்கும்:
- மைக்ரோஃபைனான்ஸ் கடன்களிலிருந்து அதிகரித்த வருமானம்.
- தவறாக வகைப்படுத்தப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்.
- உள் டெரிவேடிவ்ஸ் வர்த்தகத்திலிருந்து ரூ.1,960 கோடி கற்பனையான லாபத்தை கணக்கில் காண்பித்த நிகழ்வு.
வங்கியின் பங்குகளில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டது. இந்த செய்திகளுக்குப் பிறகு, அடுத்த வர்த்தக அமர்விலேயே பங்குகள் 27% சரிந்தன. இது பட்டியலிடப்பட்டதிலிருந்து மிகப்பெரிய சரிவு. இதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் பெரிய நஷ்டத்தை எதிர்கொண்டனர்.
இந்தக் விவகாரம் இன்னும் முடிவடையவில்லை. ஒரு பக்கம் அமைப்புக்கு எதிராகப் போராடும் ஒரு தனி நபர், மறுபுறம் தன்னைத் தூய்மையானதாகக் கூறிக் கொள்ளும் ஒரு பெரிய வங்கி. இந்த இருவருக்கும் இடையே யார் பக்கம் உண்மை உள்ளது என்பது வரும் காலத்தில் தெரியவரும். ஆனால் இந்த வழக்கு இந்திய வங்கித் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பெருநிறுவன நிர்வாகம் குறித்து பல பெரிய கேள்விகளை எழுப்புவது உறுதி.
ஜெயின் உண்மையைச் சொல்கிறாரா? வங்கியின் கூற்றுகளில் உண்மை உள்ளதா? அல்லது இரண்டுக்கும் இடையில் எங்காவது உண்மை இருக்கிறதா? இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் விசாரணைக்குப் பிறகுதான் நமக்கு பதில் கிடைக்கும். ஆனால் ஒன்று தெளிவாகிறது. வங்கித் துறையின் இந்த விவகாரம் வெறும் ஆவணங்கள் மற்றும் புள்ளிவிவரங்களைப் பற்றியது மட்டுமல்ல, நம்பிக்கை மற்றும் நேர்மையைப் பற்றியது. விரைவில் விஷயங்கள் தெளிவாகும் என நம்புவோம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ