LPG Cylinder Price Hike: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தி மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதனை மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
#BreakingNews | சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு!#ZeeTamilNews | #LPG | #Cylinder | #Price | #Hike pic.twitter.com/ahbzajjsye
— Zee Tamil News (@ZeeTamilNews) April 7, 2025
LPG Cylinder Price Hike: சென்னையில் தற்போதைய விலை நிலவரம்
இந்த விலை உயர்வு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளர்கள் மற்றும் பொது வாடிக்கையாளர்களின் ஆகிய இருதரப்புக்கும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது பொது வாடிக்கையாளர்களுக்கு 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.818.50 ஆக உள்ளது. இந்த விலை ஏற்றத்தால் ரூ.868.50 ஆக உயர வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 14.2 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரை பெறும் பயனாளர்களுக்கு தற்போது ரூ.503 ஆக உள்ளது. இது தற்போது ரூ.553 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
LPG Cylinder Price Hike: விலை குறைந்த வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்
கடந்த ஏப். 1ஆம் தேதி வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டது. எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பை தொடர்ந்து, ஏப். 1ஆம் தேதி முதல் 19 கிலோ சிலிண்டரின் விலை ரூ.41 குறைக்கப்பட்டது. தற்போது சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,965 ஆக உள்ளது. இந்த சிலிண்டர் தெருவோர தள்ளுவண்டி கடைகள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் போன்ற வணிக ரீதியான இடங்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் ஆகும்.
LPG Cylinder Price Hike: 14 மாதங்களுக்கு பிறகு விலை உயர்வு
கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.918.50 ஆக விற்பனையாகி வந்த வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர், கடந்த மார்ச் 1ஆம் தேதி அன்று ரூ.100 குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 14 மாதங்களாக ரூ.818.50 என்ற விலையில் விற்பனையாகி வந்த சிலிண்டர் தற்போது ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக எண்ணெய் நிறுவனங்கள் ஆங்கில மாதத்தின் முதல் நாள் அன்று எல்பிஜி உள்ளிட்டவற்றின் விலையில் மாற்றம் செய்யும். ஆனால், இம்முறை வழக்கத்திற்கு மாறாக மாதம் தொடங்கி ஒரு வாரத்திற்கு பிறகு விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது. இந்த வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றத்தை திரும்பப் பெற கோரி காங்கிரஸ் உள்ள எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்க தொடங்கிவிட்டன.
பெட்ரோல், டீசல் கலால் வரி உயர்வு
சில மணிநேரத்திற்கு முன்னர் தான், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த கலால் வரி உயர்வு நாளை முதல் (ஏப்ரல் 8) அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயராது என்றும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. இந்த வரிச்சுமை முழுவதும் எண்ணெய் நிறுவனங்களையே சேரும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | SCSS: மூத்த குடிமக்களுக்கு பம்பர் திட்டம்... அதிக வட்டி, பாதுகாப்பான வருமானம்
மேலும் படிக்க | பெட்ரோல், டீசல் கலால் வரி உயர்வு... இது மக்களுக்கு பாதிப்பா? - முழு விவரம் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









