)
ICICI Bank: வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஆகஸ்ட் 1 முதல் அனைத்து வாடிக்கையாளர் பிரிவுகளுக்கும் மாதாந்திர குறைந்தபட்ச சராசரி இருப்புத் தேவையை உயர்த்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு நிதி பரிமாற்றங்களில் என்னென்ன தாக்கம் இருக்கும்? முழு விவரத்தையும் இந்த பதிவில் காணலாம்.
Monthly Minimum Average Balance Requirement
- ஆகஸ்ட் 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு சேமிப்புக் கணக்குகளைத் திறந்த பெருநகர மற்றும் நகர்ப்புற வாடிக்கையாளர்கள் அபராதங்களைத் தவிர்க்க ரூ.50,000 மாதாந்திர சராசரி இருப்பை பராமரிக்க வேண்டும்.
- வங்கியின் வலைத்தளத்தில் சமீபத்திய அறிவிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த விதி ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு பிறகு சேமிப்புக் கணக்குகளைத் திறந்த புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொறுந்தும்.
- பழைய வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச சராசரி இருப்பு ரூ.10,000 ஆகவே உள்ளது.
கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கான புதிய இருப்பு எவ்வளவு?
- ரூ.50,000 புதிய மாதாந்திர குறைந்தபட்ச சராசரி இருப்புத் தேவை பெருநகர மற்றும் நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கானது.
- செமி நகர்ப்புற பகுதிகளில் புதிய வாடிக்கையாளர்கள் ரூ.25,000 குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்க வேண்டும்.
- கிராமப்புற வாடிக்கையாளர்கள் ரூ.10,000 குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்க வேண்டும்.
- கிராமப்புற மற்றும் செமி நகர்ப்புறங்களில் உள்ள பழைய வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு குறைந்தபட்ச சராசரி இருப்பு ரூ.5,000 ஆகவே உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு அபராதம்
குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு பற்றாக்குறையில் 6 சதவீதம் அல்லது ரூ.500, எது குறைவாக உள்ளதோ அந்த தொகை அளவிலான அபராதம் விதிக்கப்படும்.
இலவச பண வைப்புத்தொகை
- ஐசிஐசிஐ வங்கி இப்போது உங்கள் சேமிப்புக் கணக்கில் மூன்று முறை இலவச பண வைப்புத்தொகையை அனுமதிக்கிறது.
- அதன் பிறகு வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.150 செலுத்த வேண்டும்.
- ஒட்டுமொத்த மதிப்பு வரம்பு மாதத்திற்கு ரூ.1 லட்சம் ஆகும்.
வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்த வங்கி
ஏப்ரல் 2025 இல், ஐசிஐசிஐ வங்கி அதன் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்தது. மேலும் ரூ.50 லட்சம் வரை வைப்புத்தொகை கொண்ட சேமிப்பு வங்கிக் கணக்குகள் இப்போது 2.75 சதவீத வட்டியைப் பெறுகின்றன.
காம்ப்ளிமெண்டரி கேஷ் வித்டிராயல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் ஒரு மாதத்திற்கு மூன்றாகவே உள்ளது. மூன்றாம் தரப்பு பரிவர்த்தனைக்கு ரூ.25,000 என்ற பண வைப்புத்தொகை அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும் பொருந்தும்.
குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகை விதிகளில் மாற்றம் செய்த வங்கிகள்
- ஒரு பெரிய தனியார் கடன் வழங்கும் வஙியான ICICI வங்கி, குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகையை உயர்த்தியிருப்பது, பல வித அபராதங்களை குறைத்துள்ள பிற வங்கிகளின் செயல்பாட்டிற்கு முரணாக உள்ளது.
- நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), 2020 இல் குறைந்தபட்ச இருப்பு விதியை ரத்து செய்தது.
- பெரும்பாலான பிற வங்கிகள் கணிசமாகக் குறைந்தபட்ச இருப்பு வரம்புகளையே பராமரிக்கின்றன.
- பொதுவாக இதன் வரம்பு ரூ.2,000 முதல் ரூ.10,000 -க்குள் இருக்கின்றது.
- இந்த நிலையில், ஏற்கனவே அதிகமாக இருந்த தனது இருப்புத் தொகைத்தொகை அளவை, வங்கி புதிய வாடிக்கையாளர்களுக்கு இன்னும் அதிகமாக உயர்த்தி இருப்பது வியப்பை அளிப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ