EPFO Update: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தனியார் துறை ஊழியர்களுக்கான ஒரு சிறந்த சமூக பாதுகாப்பு திட்டமாக செயல்படுகிறது. பெரும்பாலான சமயங்களில் இபிஎஃப் உறுப்பினர்கள் பணி ஓய்வுக்கு பின்னரே இபிஎஃப் நிதியை எடுக்கிறார்கள். எனினும், சிலர் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக பணி ஓய்வுக்கு முன்னரும் தொகையை எடுப்பதுண்டு.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிகரித்த வசதிகள்
பல்வேறு காரணங்களுக்காக ஊழியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) இருப்பை வித்டிரா செய்யலாம். அப்படி உறுப்பினர்கள் பணத்தை கோரும் போது, EPFO அவர்களது கோரிக்கையைச் செயல்படுத்தி நிதியை அவர்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றும். க்ளெய்ம் செட்டில்மெண்ட் செயல்முறையை விரைவுபடுத்தவும், EPFO சந்தாதாரர்களுக்கான அணுகலை மேம்படுத்தவும் EPFO பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
EPFO Claim Settlement: இபிஎஃப்ஓ க்ளெய்ம் செட்டில்மெண்ட்
இபிஎஃப்ஓ க்ளெய்ம் செட்டில்மெண்ட் செயல்முறையை விரைவுபடுத்த EPFO பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் இந்தத் தகவலை வழங்கினார்.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்கள்லுக்கு எடுக்கப்பட்ட்டுள்ள நடவடிக்கைகள்
க்ளெய்ம் செட்டில்மெண்ட் செயல்முறையை சீராக்க EPFO எடுத்த 8 முக்கிய நடவடிக்கைகள் பற்றி இங்கே காணலாம். எந்த வித பிரச்சனையும் இல்லாமல் உங்கள் இபிஎஃப் தொகையை (EPF Amount) எடுக்கவும், பல்வேறு நோக்கங்களுக்காக அதைப் பயன்படுத்தவும் இவற்றை பற்றி அறிந்து கொள்வது நல்லது.
1. Auto mode processing of claims: க்ளெய்ம்களை தானியங்கி முறையில் செயலாக்குதல்
அட்வான்ஸ் க்ளெய்ம்களை தானியங்கி முறையில் செயலாக்குவதற்கான தொகை வரம்பு ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நோய் சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான முன்பணம் மட்டுமல்லாமல், இனி, வீட்டுவசதி, கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காகவும் முன்பணத்தை பெற தானியங்கி முறையில் செயலாக்கம் செயல்படுத்தப்படுகிறது. அன்வான்ஸ் கோரிக்கைகளில் 60% தானாகவே செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். தானியங்கி முறையில் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகள் மூன்று நாட்களுக்குள் செயல்படுத்தப்படும்.
2. Member details correction process simplified: உறுப்பினர் விவரங்களை திருத்தும் செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது
உறுப்பினர் விவரங்களை சரிசெய்வதற்கான செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது. ஆதார் சரிபார்க்கப்பட்ட UAN எண்களைக் கொண்ட உறுப்பினர்கள் EPFO இன் உதவியின்றி தங்கள் ஐடிகளை தாங்களாகவே புதுப்பிக்க முடியும். தற்போது EPF அலுவலகத்தின் உதவியின்றி சுமார் 96% மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.
3. Attestation of Aadhaar-verified UANs eliminated: ஆதார் சரிபார்க்கப்பட்ட UAN எண்களின் சான்றளிப்பு நீக்கப்பட்டது
ஆதார் சரிபார்க்கப்பட்ட UAN எண்களுக்கு, பரிமாற்ற க்ளெய்ம் சமர்ப்பிப்பு கோரிக்கைகளுக்கு முதலாளி / நிறுவனத்தின் சான்றளிப்பு இனி தேவையில்லை. 10% பரிமாற்ற கோரிக்கைகளுக்கு மட்டுமே உறுப்பினர் மற்றும் முதலாளி / நிறுவனம் இருவரின் சான்றளிப்பும் தேவைப்படுவதாக அமைச்சர் கூறினார்.
4. Relaxation of cheque-leaf requirement: காசோலைத் தேவையைத் தளர்த்துதல்
பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் KYC- இணக்கமான UAN எண்களுக்கு க்ளெய்ம் படிவத்துடன் காசோலையைச் சேர்க்க வேண்டிய தேவையும் தளர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
5. Upfront validations developed: அப்ஃபிரண்ட் சரிபார்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன
உறுப்பினர்கள் தகுதியற்ற கோரிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்காக, க்ளெய்ம்பளின் தகுதி மற்றும் ஏற்றுக்கொள்ளும் தன்மை குறித்து உறுப்பினர்களுக்கு வழிகாட்ட பல அப்ஃபிரண்ட் சரிபார்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
6. Centralized IT-Enabled System: மையப்படுத்தப்பட்ட ஐடி-இயக்கப்பட்ட அமைப்பு
மையப்படுத்தப்பட்ட ஐடி-இயக்கப்பட்ட அமைப்பின் (CITES 2.01) கீழ் உறுப்பினர் தரவுத்தளங்களின் மையப்படுத்தலுடன் க்ளெய்ம் தீர்வு செயல்முறை மேலும் நெறிப்படுத்தப்படுகிறது.
7. De-linking facilities for erroneous/fraudulent accounts: தவறான/மோசடி கணக்குகளுக்கான இணைப்புகளை நீக்கும் வசதிகள்
கூடுதலாக, நிறுவனங்களால் மோசடியாகவோ அல்லது தவறாகவோ இணைக்கப்பட்ட EPF கணக்குகளை நீக்கும் வசதிகளை EPFO உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளது. ஜனவரி 18, 2025 அன்று சேவை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, பிப்ரவரி 2025 இறுதி வரை 55,000 -க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளின் இணைப்புகளை நீக்கியுள்ளனர்.
8. Online claim submission: ஆன்லைன் உரிமைகோரல் சமர்ப்பிப்பு
99.31% க்கும் அதிகமான கோரிக்கைகள் இப்போது ஆன்லைனில் சமர்ப்பிக்கப்படுவதால், கள அலுவலகத்தைப் பார்வையிட வேண்டிய அவசியமில்லை. மார்ச் 6, 2025 நிலவரப்படி, 2024–2025 நிதியாண்டிற்கான 7.14 கோடி ஆன்லைன் க்ளெய்ம்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | வந்தாச்சு அகவிலைப்படி உயர்வு: ஊதியம், ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? முழுமையான கணக்கீடு இதோ
மேலும் படிக்க | கௌதம் அதானிக்கு மேலும் சிக்கலா? இந்திய அரசின் உதவியை நாடிய அமெரிக்கா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









