)
Central Government Employees Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று சமீபத்தில் வெளிவந்தது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் சலுகைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மத்திய அரசு, ஊழியர்களுக்கான ஆடை கொடுப்பனவுக்கான விதிகளை திருத்தியுள்ளது. திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, ஜூலை 1, 2025 க்குப் பிறகு பணியில் சேரும் புதிய ஊழியர்களும் பயனடைவார்கள். ஓய்வு பெற்ற மற்றும் புதிதாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில், ஆடை கொடுப்பனவு குறித்த புதிய உத்தரவை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து செப்டம்பர் 24, 2025 அன்று ஒரு உத்தரவு வெளியிடப்பட்டது. இந்த உத்தரவின்படி, ஆண்டின் நடுப்பகுதியில் சேரும் அல்லது ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு இப்போது விகிதாசார அடிப்படையில் ஆடை கொடுப்பனவு வழங்கப்படும்.
ஆடை கொடுப்பனவு என்பது பணியில் இருக்கும்போது சீருடை அணிய வேண்டிய ஊழியர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு சலுகையாகும். ஆகஸ்ட் 2017 இல் நிதி அமைச்சக சுற்றறிக்கையின்படி, இது ஆடை கொடுப்பனவு, அடிப்படை உபகரண கொடுப்பனவு, சீருடை பராமரிப்பு கொடுப்பனவு, கவுன் கொடுப்பனவு மற்றும் ஷூ கொடுப்பனவு போன்ற முன்னர் தனித்தனியாக இருந்த அனைத்து அலவன்சுகளயும் உள்ளடக்கியது.
ஜூன் 2025 இல் வெளியிடப்பட்ட முந்தைய உத்தரவில், ஜூலை 2025 க்குப் பிறகு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு நிதி அமைச்சகத்திடம் தெளிவு கோரப்பட்டதாகவும், அதுவரை பழைய 2020 விதிகள் நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டது. தற்போது, புதிதாகப் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு ஆண்டு அடிப்படையில் சீருடை கொடுப்பனவு வழங்கப்படுவது போல, ஆண்டின் நடுப்பகுதியில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கும் விகிதாசார சீருடை கொடுப்பனவு வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஜூலை சம்பளத்துடன் ஆடை கொடுப்பனவு வழங்கப்படுவதால், இந்த ஆண்டு ஓய்வு பெறும் பல ஊழியர்கள் ஏற்கனவே கொடுப்பனவின் முழு அல்லது பாதியைப் பெற்றுள்ளனர் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. ஆகையால், புதிய விதிகளின் கீழ், தேவைப்பட்டால், அக்டோபர் 2025 முதல் ஓய்வு பெறும் ஊழியர்களிடமிருந்து கூடுதலாக கொடுக்கப்பட்ட அலவன்ஸ் தொகை வசூலிக்கப்படும். இருப்பினும், செப்டம்பர் 30, 2025 க்கு முன்பு ஓய்வு பெறும் ஊழியர்களிடமிருந்து எந்த வசூலும் செய்யப்படாது.
ஜூலை 2025 க்கு முன்பு சேர்ந்த புதிய ஊழியர்கள் ஜூன் 2025 வரை நடைமுறையில் உள்ள விதிகளின்படி ஆடை அலவன்சை பெறுவார்கள் என்று துறை தெளிவுபடுத்தியுள்ளது. சில அரசாங்க வட்டாரங்களில் முந்தைய ஆண்டின் ஆடை கொடுப்பனவு ஜூலை 2025 சம்பளத்தில் சேர்க்கப்படவில்லை என்பது கவனிக்கப்பட்டது என்றும் இதை சரிசெய்ய இப்போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவு ஆண்டின் நடுப்பகுதியில் சேரும் அல்லது ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமான அமைந்துள்ளத்து. ஏனெனில் அவர்களுக்கு இனி தங்கள் சீருடை அலவன்ஸ் குறித்த எந்த குழப்பமும் இருக்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ