)
Pensioners Latest News: அரசு பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரரா நீங்கள்? உங்கள் வீட்டில் யாரேனும் ஓய்வூதியதாரர்கள் உள்ளார்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும், அரசாங்கம் ஓய்வூதிய விதிகளில் அவ்வப்போது சில மாற்றங்களைச் செய்கிறது. சமீபத்தில், அரசாங்கம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியமாகும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தைப் பெற ஒவ்வொரு ஆண்டும் ஒரு வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த முறை இதற்கான செயல்முறை நவம்பர் மாதத்தில் இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நான்காவது டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ் பிரச்சாரம்
கடந்த ஆண்டு, மூன்றாவது டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ் பிரச்சாரத்தில் 1.62 கோடி DLC -கள் டெபாசிட் செய்யப்பட்டன. இந்த பிரச்சாரம் 845 நகரங்களில் தொடங்கப்பட்டது. இப்போது நான்காவது டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ் பிரச்சாரம் நடத்தப்படும் என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை முடிவு செய்துள்ளது. இது 2025 நவம்பர் 1 முதல் 30 வரை நாடு முழுவதும் தொடங்கப்படும். இந்த முறை 1850 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள்/நகரங்கள்/டவுன்கள் இந்தப் பிரச்சாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சாரத்தில் 2500 இடங்களில் முகாம்களை ஏற்பாடு செய்வதே இலக்கு.
ஓய்வூதிய நலத்துறை வழங்கிய அறிவுறுத்தல்கள்
- ஜூலை 30 அன்று, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை ஒரு அலுவலக குறிப்பாணை மூலம் பிரச்சாரம் குறித்த வழிமுறைகளை வழங்கியது.
- இந்த பிரச்சாரம் தொலைத்தொடர்பு துறை, ரயில்வே துறை, அஞ்சல் துறை, EPFO, UIDAI, ஓய்வூதியம் பெறுவோர் நல சங்கங்கள், CGDA, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், வங்கிகள் மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும்.
- தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மக்களை இந்த பிரச்சாரத்துடன் இணைப்பதே இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறையின் செயலாளர் வி. ஸ்ரீனிவாஸ், ஏற்பாடு செய்யப்பட உள்ள பிரச்சாரம் பற்றிய தகவலை அளித்துள்ளார். கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் பரந்த வலையமைப்பு மூலம் 1600 மாவட்ட / துணைப்பிரிவு தபால் நிலையங்களில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும், IPPB அதன் 1.8 லட்சம் தபால்காரர்கள் மூலம் முகாம்களை ஏற்பாடு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
IVB வீடு வீடாகச் சென்று DLC சேவையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வூதியம் வழங்கும் 19 வங்கிகள் 315 நகரங்களில் 900க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்களை ஏற்பாடு செய்யும். ஓய்வூதிய நலச் சங்கங்கள் ஓய்வூதியதாரர்களை முகாம்களுடன் இணைக்கப் பாடுபடும். ரயில்வே அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறை, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் EPFO போன்ற தொடர்புடைய அலுவலகங்கள் மற்றும் துறைகள் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் முகாம்களை ஏற்பாடு செய்யும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ