)
DA Arrears Latest News: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த சில வாரங்களில் பல முக்கிய செய்திகள் கிடைக்கவுள்ளன. 8வது ஊதியக்குழுவின் கீழ் பல வித மாற்றங்கள் ஏற்படவுள்ளதோடு, இதுவரை ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக காத்திருக்கும் பல கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக கொரோனா தொற்றுநோய் காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத டிஏ அரியர் தொகையை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது குறித்து அவ்வப்போது ஊழியர் சங்கங்களும் மத்திய அரசிடம் வற்புறுத்தி வருகின்றன. இது பற்றி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையிலும் கேள்வி எழுப்பப்பட்டது.
- கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத கால அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) முடக்கம் தொடர்பான கேள்விக்கு, ஆகஸ்ட் 11, 2025 அன்று நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் உரையாற்றினார்.
- கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவு காரணமாக அரசாங்க நிதி மீதான அழுத்தத்தைக் குறைக்க இந்த முடக்கம் செயல்படுத்தப்பட்டதா என்று கேள்வி கேட்கப்பட்டது.
- கோவிட்-19 காரணமாக ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 ஆகிய தேதிகளில் செலுத்த வேண்டிய மூன்று அகவிலைப்படி/அகவிலைப்படி நிவாரன தவணைகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
- இது "பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்திய கோவிட்-19 சூழலில், அரசாங்க நிதி மீதான அழுத்தத்தைக் குறைக்கும் வகையில்" எடுக்கப்பட்டது என்பதை அமைச்சர் தனது பதிலில் ஒப்புக்கொண்டார்.
நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுவிப்பதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நிர்ணயித்துள்ளதா என்பது குறித்த கேள்விக்கு, குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் தீர்மானிக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறினார்.
கோவிட்-19 தொற்றுநோயால் தொடர்ச்சியான நிதி நெருக்கடி ஏற்பட்டதாகவும், இதனால் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த அரசாங்கம் கணிசமான செலவை எதிர்கொண்டது. இந்த கூடுதல் செலவுகள் 2020–21 நிதியாண்டுக்கு அப்பால் நீடித்ததால், நிலுவைத் தொகையை விடுவிப்பது சாத்தியமற்றதாக உள்ளதாக அரசாங்கம் விளக்கியது.
18 மாத DA/DR நிலுவைத் தொகையை அரசாங்கம் எப்போது வெளியிடும் என்ற கேள்விக்கு, "2020 ஆம் ஆண்டில் தொற்றுநோயின் பாதகமான நிதி தாக்கமும், அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நலத்திட்ட நடவடிக்கைகளுக்கு அளிக்கப்பட்ட நிதியும் 2020-21 நிதியாண்டிற்கு அப்பால் நிதி கசிவை ஏற்படுத்தியது. எனவே, DA/DR நிலுவைத் தொகைகள் சாத்தியமானதாகக் கருதப்படவில்லை" என்று அமைச்சர் பதிலளித்தார்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை வழங்கப்படுகின்றன. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இவை திருத்தப்படுகின்றன. மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் (பொதுத்துறை ஊழியர்கள் உட்பட) அகவிலைப்படி பெறுகிறார்கள். இது வழக்கமாக ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தப்படும். அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் அளிக்கப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ