)
Central Government Employees Latest News: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், அவர்களின் குடும்பத்தார் ஆகியோருக்கு ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. இதை பற்றிய புரிதல் இருப்பது அவர்களுக்கு அத்தியாவசியமானது. குடும்ப ஓய்வூதியம் பற்றிய ஒரு குறிப்பை மத்திய அரசு மக்களவையில் வெளியிட்டது. அதை பற்றி விவரமாக காணலாம்.
- இறந்த அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விதவை அல்லது விவாகரத்து பெற்ற மகள்கள் சில பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை உண்டு என்று புதன்கிழமை மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
- ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை (DoPPW) அறிவித்த மத்திய குடிமைப் பணி (ஓய்வூதிய) விதிகள், 2021 இல் பல்வேறு விதிகளிலும், இறந்த அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரரின் விவாகரத்து பெற்ற/விதவை மகள் தனது முறைப்படி குடும்ப ஓய்வூதியம் பெறுவதை உறுதி செய்வதற்காக அக்டோபர் 26, 2022 தேதியிட்ட அலுவலக குறிப்பாணையிலும் பல்வேறு விதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
- மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் இதை ஒரு எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.
- ரயில்வே மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தனி விதிகளின் கீழ் இதே விதிகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
மகளுக்கு எப்போது தாய் / தந்தையின் குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும்?
- இந்த விதிகளின் அடிப்படையில், இறந்த அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரரின், குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதியான வாழ்க்கைத் துணை அல்லது மகன் இல்லையென்றாலோ, அவர்கள் உயிருடன் இல்லை என்றாலோ அல்லது அவர்கள் குடும்ப ஓய்வூதியத்திற்கான தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் போனாலோ, குடும்ப ஓய்வூதியம் திருமணமாகாத அல்லது விதவை அல்லது விவாகரத்து பெற்ற மகளுக்கு வழங்கப்படும்.
- ஏற்கனவே இந்த ஓய்வுதியம் இறந்த மத்திய அரசு ஊழியரின் வாழ்க்கைத் துணை அல்லது மகனுக்கு வழங்கப்படு வந்து, அது மேலே குறிப்பிட்ட காரணங்களுக்காக நிறுத்தப்பட்டாலும், குடும்ப ஓய்வூதியம் தொடர்ந்து திருமணமாகாத அல்லது விதவை அல்லது விவாகரத்து பெற்ற மகளுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
- அத்தகைய ஓய்வூதியங்களுக்கான பிற நிபந்தனைகளையும் அவர் குறிப்பிட்டார்.
மகள்களுக்கான ஓய்வூதியம் எப்போது வரை தொடடும்?
- "மத்திய அரசு ஊழியர் (தாய் / தந்தை) உயிருடன் இருந்தபோது, திருமணமாகாத அல்லது விதவையான அல்லது விவாகரத்து பெற்ற மகள் தனது தாய் / தந்தை அல்லது இருவரையும் சார்ந்து இருந்திருந்து, அதன் பின் அவரது தாய் / தந்தை இறந்திருந்தால், நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவருக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும். மகள் திருமணம் செய்து கொள்ளும் வரை அல்லது மறுமணம் செய்து கொள்ளும் வரை அல்லது அவர் தனது வாழ்வாதாரத்தை ஈட்டத் தொடங்கும் வரை, எது முதலில் நடக்கிறதோ அது வரை ஓய்வூதியம் தொடரும்" என்று அமைச்சர் கூறினார்.
- "மேலும், மகள் இந்த குடும்ப ஓய்வூதியத்தை பெற, அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரர் அல்லது அவரது வாழ்க்கைத் துணை உயிருடன் இருந்தபோது பின்வரும் விஷயங்கள் நடங்திருக்க வேண்டும்:
- ஓய்வூதியம் கோரும் மகள் விதவையாக இருந்தால், அவரது கணவர், அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரர் அல்லது அவரது வாழ்க்கைத் துணை உயிருடன் இருந்தபோது இறந்திருக்க வேண்டும்.
- மகள் விவாகரத்து பெற்றிருதால், அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரர் அல்லது அவரது வாழ்க்கைத் துணை உயிருடன் இருந்தபோது, அவரது விவாகரத்து நடந்திருக்க வேண்டும், அல்லது விவாகரத்து வழக்கு நடவடிக்கைக்ள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்று அமைச்சர் சிங் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ