)
E Shram Card: பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்களுக்காக மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. அவற்றுள் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் மக்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காக அரசாங்கம் நடத்தும் திட்டம்தான் இ-ஷ்ரம் திட்டம். இந்த திட்டத்தை பல மக்கள் முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் 30.98 கோடிக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இ-ஷ்ரம் என்பது பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை ஒரே போர்ட்டலில் ஒருங்கிணைக்கும் "ஒன் ஸ்டாப் சல்யூஷன்" ஆகும். இது இ-ஷ்ரமில் பதிவுசெய்யப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அணுக உதவுகிறது. போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளிக்கு இ-ஷ்ரம் அட்டை வழங்கப்படுகிறது.
- அமைப்புசாரா துறையில் பணிபுரியும் 16 முதல் 59 வயதுக்குட்பட்ட அனைத்து இந்திய குடிமக்களும் இந்தத் திட்டத்தில் பதிவு செய்யலாம்.
- இந்தத் திட்டத்தில் சேர, இ-ஷ்ரம் அதிகாரப்பூர்வ வலைத்தளமான eshram.gov.in -க்குச் சென்று முதலில் பதிவு செய்ய வேண்டும்.
- அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர் பிரிவில் கடை ஊழியர் / விற்பனையாளர் / உதவியாளர், ஆட்டோ ஓட்டுநர், ஓட்டுநர், பஞ்சர் பழுதுபார்ப்பவர், மேய்ப்பர், பால் பண்ணை உரிமையாளர், அனைத்து கால்நடை வளர்ப்பவர்கள், காகித வியாபாரி, ஜொமாட்டோ மற்றும் ஸ்விக்கி, அமேசான், பிளிப்கார்ட் ஆகியவற்றின் டெலிவரி பாய், செங்கல் சூளைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆகியோர் அடங்குவர்.
- இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் அட்டை பெறலாம்.
இ-ஷ்ரம் அட்டையை வைத்திருப்பவர்கள் பல அரசாங்கத் திட்டங்களில் பலன்களைப் பெறலாம். மேலும், இ ஷ்ரம் அட்டையின் மூலம் 60 வயதிற்குப் பிறகு, மாதா மதம் ரூ.3000 ஓய்வூதியமும் கிடைக்கும். இந்த கார்டை உருவாக்க, எங்கும் வரிசையில் நிற்கவோ, அரசு அலுவலகங்களுக்கு அவ்வப்போது சென்று அலையவோ அவசியம் இல்லை. அரசாங்கத்தின் டிஜிட்டல் இந்தியா முயற்சியில் இப்போது அனைத்து செயல்முறைகளும் சுலபமாகிவிட்டன. இந்த இ-ஷ்ரம் அட்டையை உங்கள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் எளிதாகப் பெறலாம்.
- இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட ஒரு தொழிலாளிக்கு ரூ.2 லட்சம் விபத்து காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.
- அதாவது, தொழிலாளி விபத்தில் பாதிக்கப்பட்டால், மரணம் அல்லது இயலாமை ஏற்பட்டால், அவருக்கு ரூ.2 லட்சம் தொகை வழங்கப்படும்.
- தொழிலாளிக்கு பகுதியளவு இயலாமை ஏற்பட்டால், ரூ.1 லட்சம் உதவி கிடைக்கும்.
இ-ஷ்ரம் அட்டை உள்ள தொழிலாளர்களுக்காக பின்வரும் திட்டங்களுக்கு தகுதியுடையவர்கள்:
- பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா,
- தேசிய ஓய்வூதியத் திட்டம்,
- அடல் ஓய்வூதியத் முறை,
- தேசிய சமூக உதவித் திட்டம்,
- பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா,
- பிரதான் மந்திரி தெரு விற்பனையாளர்கள் ஆத்மநிர்பர் நிதி,
- பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா,
- பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா,
- தேசிய குடும்ப நலத் திட்டம்,
- மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம்,
- பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமப்புறம்,
- ஆயுஷ்மான் பாரத்-பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா
பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் குறைந்தது 14 திட்டங்கள் ஏற்கனவே இ-ஷ்ரம் போர்ட்டலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
போர்ட்டலில் ஆன்லைன் பதிவு செய்ய, ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும். மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்கப்பட்டிருப்பது அவசியம்.
- முதலில் e-ஷ்ரம் போர்ட்டலின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான eshram.gov.in -க்கு செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள Register on e-Shram விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
- புதிய பக்கம் திறக்கும்போது, தேவையான தகவல்களை நிரப்பவும்.
- தகவலை நிரப்பிய பிறகு, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை உள்ளிடவும்.
- இப்போது பதிவு படிவம் தோன்றும்.
- படிவத்தை முழுமையாக நிரப்பவும்.
- கேட்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
- ஆவணங்களைப் பதிவேற்றிய பிறகு, நீங்கள் நிரப்பிய தகவல் சரியாக உள்ளதா என்பதைப் பார்க்க படிவத்தை ஒரு முறை சரிபார்க்கவும்.
- அதன் பிறகு படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
- பதிவு செயல்முறை முடிந்ததும், 10 இலக்க e-Shram அட்டை வழங்கப்படும்.
இந்த திட்டம் பற்றி அறிய கூடுதல் தகவல் அல்லது உதவி தேவைப்பட்டால், https://findmycsc.nic.in/csc/ -க்கு சென்று அருகிலுள்ள CSC (பொது சேவை மையம்) ஐக் கண்டறியலாம். அங்கிருந்து இ ஷ்ரம் அட்டையையும் உருவாக்கிக்கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ