)
7th Pay Commission DA Hike: 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை-டிசம்பர் சுழற்சிக்கான அகவிலைப்படி திருத்தம் தீபாவளியையொட்டி அறிவிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி உயர்வு 3% ஆக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. அதாவது அகவிலைப்படி தற்போதைய 55% இல் இருந்து 58% ஆக உயரும்.
Dearness Allowance: ஆண்டுக்கு 2 முறை அதிகரிக்கும் அகவிலைப்படி
- பணவீக்கத் தரவு மற்றும் கடந்த 12 மாதங்களின் சூத்திர அடிப்படையிலான கணக்கீட்டின் அடிப்படையில், ஆண்டுக்கு இரண்டு முறை (ஆறு மாதங்களுக்கு ஒருமுறை) அகவிலைப்படி திருத்தப்படுகிறது. தொழிலாளர் பணியக தரவுகளின்படி, ஜூன் 2025க்கான அகில இந்திய CPI-IW 1 புள்ளி அதிகரித்து 145 ஆக இருந்தது.
- ஜனவரி 2025 இல், அரசாங்கம் வெறும் 2% அகவிலைப்படி உயர்வை வழங்கியது. இதன் பிறகு 53% ஆக இருந்த அகவிலைப்படி 55% ஆக உயர்ந்தது. ஆனால், எதிர்பார்ப்புகள் அதை விட மிக அதிகமாக இருந்ததால், ஊழியர்களிடையே ஏமாற்றம் காணப்பட்டது.
CPI-IW Data: ஜூன் மாதத்திற்கான CPI-IW தரவு வந்துவிட்டது
தற்போது ஜூன் மாதத்திற்கான CPI-IW தரவு வந்துவிட்டது. இதைத் தொடர்ந்து 3% அதிகரிப்பு உறுதி செய்யப்பட்டடுள்ளது. தொழிலாளர் பணியகம் சமீபத்தில் ஜூன் 2025க்கான அகில இந்திய தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டை (CPI-IW) வெளியிட்டது. இது 145 ஆக இருந்தது. இதன் மூலம், ஜூலை 2024 முதல் ஜூன் 2025 வரையிலான 12 மாதங்களுக்கான சராசரி குறியீடு 143.6 ஆக மாறியுள்ளது.
DA Calculation: டிஏ எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
7வது ஊதியக் குழுவின் கீழ், அகவிலைப்படி இந்த சூத்திரத்தின் மூலம் கணக்கிடப்படுகின்றது:
அகவிலைப்படி (%) = [(CPI-IW சராசரி × 2.88) – 261.42] ÷ 261.42 × 100
இப்போது ஜூலை 2024 முதல் ஜூன் 2025 வரையிலான 12 மாதங்களுக்கான CPI-IW சராசரி 143.6 ஆக உள்ளது.
இதை சூத்திரத்தில் 143.6 -ஐ பயன்படுத்தினால்
= [(143.6 × 2.88) – 261.42] ÷ 261.42 × 100
= (413.57 – 261.42) ÷ 261.42 × 100
= 152.15 ÷ 261.42 × 100
= 58.2%
அரசாங்க நடைமுறையின்படி, தசம புள்ளிகள் தவிர்க்கப்படுகின்றன. அதாவது DA = 58% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி-ஜூன் சுழற்சியை விட ஜூலை-டிசம்பர் 2025 -இல் மேம்பட்ட அகவிலைப்படி
- ஜனவரி 2025 இல், அகவிலைப்படி 2% மட்டுமே அதிகரிக்கப்பட்டது.
- இப்போது ஜூலை 2025 முதல் 3% அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது. அதன் பின்னர் அகவிலைப்படி 58% ஆக அதிகரிக்கும். இது ஊழியர்களுக்கு கூடுதல் நிதி நன்மைகளை அளிக்கும். குறிப்பாக பண்டிகைக் காலத்தில் இது மிக உதவியாக இருக்கும்.
DA Hike: டிஏ உயர்வு எப்போது அறிவிக்கப்படும்?
புதிய அகவிலைப்படி ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும். எனினும், மத்திய அரசு வழக்கமாக செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் - பண்டிகை காலத்திற்கு சற்று முன்னதாக ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை அறிவிக்கின்றது. இந்த முறையும் அகவிலைப்படி / அகவிலை நிவாரணம் குறித்த முறையான அறிவிப்பு தீபாவளியை ஒட்டி வரக்கூடும்.
DA Arrears: டிஏ அரியர் கிடைக்கும்
அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு எப்போது வந்தாலும், ஜூலை முதல் அதிகரித்த அகவிலைப்படிக்கான அரியர் தொகை ஊழியர்களுக்கு கிடைக்கும். அறிவிப்புக்கு பிறகு வரும் சமப்ளத்துடன் இந்த அரியர் தொகையும் வழங்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ