நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலைக்கு காரணம் மத்திய அரசு தான் என பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் நாட்டின் பொருளாதார மந்த நிலைக்கு எதிர்கட்சிகளே காரணம் என மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் பொருளாதாரத்தை ஐந்து டிரில்லியன் டாலர்களாக மாற்றுவதற்கான இலக்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. இது குறித்து ஷா கூறுகையில், 2024-க்கு முன்னர் இந்தியா ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயரும். தொழில்துறையின் பின்நின்ற அவர்களை முன்னேற ஊக்குவிப்பது, மேலும் அவர்கள் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ள அனுமதிக்காமல் ஊக்குவிப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்க வித்திடும் என அவர் உறுதி தெரிவித்தார்.


சில கடுமையான சீர்திருத்தங்களால் ஏற்படும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய அவர், பிரச்சினைகளை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே இனிமையன கனி கிடைக்கும் என்றும் உவமையாக குறிப்பிட்டார். 


AIMA-வின் (அகில இந்திய மேலாண்மை சங்கம்) தேசிய மேலாண்மை மாநாட்டில் தொடக்க அமர்வில் உரையாற்றும் போது அமித் ஷா இந்த விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். 


தொடர்ந்து பேசிய அவர்., ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆறு சதவீதமாக இருந்தது, அதேசமயம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இது ஏழு சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்று உள்துறை அமைச்சர் ஷா கூறினார். ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தைப் பற்றி நாம் பேசினால், அதன் பின்னால் ஒரு வலுவான அடிப்படை இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.


கடந்த ஐந்து ஆண்டுகளில் தனிநபர் தேசிய வருமானம் மிக அதிகமாக அதிகரித்துள்ளது, இது இப்போது ஒரு நபருக்கு 78 ஆயிரத்திலிருந்து 1.26 லட்சமாக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டு பேசினார். விவசாய வருமானமும் வெகுவாக அதிகரித்துள்ளது. இதெல்லாம் தானாக நடந்துவிடவில்லை, இதற்காக நமது அரசு பணத்தை முதலீடு செய்துள்ளது.


இதற்கு முன்னர் விவசாய பட்ஜெட் 1.21 லட்சம் கோடியாக இருந்த நிலையில், அதை 2.11 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளோம். இதன் மூலம், புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான பிரதமர் மோடியின் பிரச்சாரத்தில் சேருமாறு தொழில்துறைக்கு ஷா வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார்.