Budget 2024: பெண்களுக்கான சிறப்பு பட்ஜெட்டாக இது இருக்குமா? காத்திருக்கும் நல்ல செய்தி என்ன?
Women Entrepreneurs Expectation in Budget 2024: மக்களவை தேர்தலுக்கு முன் இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் பல துறைகளை சேர்ந்த மக்களுக்கும் பல வித எதிர்பாப்புகள் உள்ளன.
Women Entrepreneurs Expectation in Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இது தேர்தல் ஆண்டு என்பதால், இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். இந்த பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இருக்காது என நிதி அமைச்சர் ஏற்கனவே கூறியுள்ளார். எனினும், தேர்தலை கருத்தில் கொண்டு மக்களை கவரும் வண்ணம் சில அறிவிப்புகளை அரசு வெளியிடலாம் என வட்டாரங்கள் கூறுகின்றன. பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் (Finance Minister) நிர்மலா சீதாராமன் பணவீக்கத்தைக் குறைக்கவும், கிராமப்புறப் பொருளாதாரம் மற்றும் நுகர்வை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்பார் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள் (Budget 2024 Expectations)
மக்களவை தேர்தலுக்கு (Lok Sabha Election) முன் இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் பல துறைகளை சேர்ந்த மக்களுக்கும் பல வித எதிர்பாப்புகள் உள்ளன. இந்த பட்ஜெட், குறிப்பாக நாட்டின் பெண்களால் (Women) மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சிகள் மற்றும் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் கொள்கைகளை அரசாங்கம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண் விவசாயிகளுக்கு நிதி உதவி
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகளில் ஒன்று, நிலம் வைத்திருக்கும் பெண்களுக்கு வருடாந்திர கொடுப்பனவை இரட்டிப்பாக்குவதற்கான அறிவிப்பாகும். இந்த நடவடிக்கையால், அரசாங்கத்திற்கு கூடுதலாக $1.44 பில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பெண் வாக்காளர்களை கவரும் வகையில் அமையும். மேலும் மக்கள்தொகையில் ஒரு முக்கியமான பகுதியினருக்கு மிகவும் தேவையான நிதி உதவியை வழங்கக்கூடும்.
பெண்களின் தொழில்முனைவை மேம்படுத்துதல்
குறிப்பாக சிறிய நகரங்களில் உள்ள பெண் தொழில்முனைவோரை (Women Entrepreneurs) ஆதரிப்பதில் இந்த பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (Pradhan Mantri Mudra Yojana) மற்றும் பெண்கள் தொழில்முனைவோர் தளங்கள் (Women Entrepreneurship Platforms) போன்ற திட்டங்கள் ஏற்கனவே உதவியாக உள்ளன. ஆனால் அதிக வழிகாட்டுதல் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகளுக்கான தேவை உள்ளது.
மேலும் படிக்க | மியூச்சுவல் ஃபண்ட் vs SSY.. பெண் குழந்தைக்கான சிறந்த சேமிப்பு திட்டம் எது?
பெண் தொழிலாளர் பங்கேற்பு அதிகரிப்பு
இந்தியாவின் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் தற்போது 24% ஆக உள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 17% பங்களிக்கிறது. 2023 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், பெண்களை மையமாகக் கொண்ட திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் 25% அதிகரிப்பை அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும், மேலும் பெண்களை அதிக அளவில் தொழிலாளர் தொகுப்பில் சேர்ப்பதை உறுதி செய்யவும் திட்டம் உள்ளது.
பாலின சமத்துவத்திற்கான பட்ஜெட் (Budget for Gender Equity)
வரவிருக்கும் பட்ஜெட் பாலின சமத்துவத்திற்கான பட்ஜெட்டாக இருகும் என இந்தியப் பெண்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது சமூக நீதி மட்டுமல்ல, இது அவர்களின் முழுத் திறனையும் வெளிக்கொணர்வதும், இந்தியாவின் வளர்ச்சிக் கதையில் அவர்களை சம பங்குதாரர்களாக மாற்றுவதும் ஆகும்.
பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட்டை இந்தியப் பெண்கள் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். இது அனைவரையும் உள்ளடக்கிய பட்ஜெட்டுக்கு ஒரு முன்னோடியாக அமையும். மேலும் இந்த பெட்ஜெட் இந்தியாவிற்கு மிகவும் சமமான மற்றும் வளமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் திட்டங்களில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க | ஆன்லைனில் புக் செய்தால் வீடு தேடி வரும் ராமர் தங்க நாணயம்..! பெறுவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ