Budget 2025: நடுத்தர வர்க்க மக்களுக்கு நல்ல செய்தி நிச்சயம்... நிபுணர்கள் நம்பிக்கை

Union Budget 2025: நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் வழங்க இந்திய அரசு பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 31, 2025, 01:41 PM IST
  • வருமான வரி முறையில் உள்ள எதிர்பார்ப்புகள் என்ன?
  • புதிய வரி முறையில் மாற்றங்கள் வருமா?
  • அடிப்படை விலக்கு வரம்பு அதிகரிக்குமா?
Budget 2025: நடுத்தர வர்க்க மக்களுக்கு நல்ல செய்தி நிச்சயம்... நிபுணர்கள் நம்பிக்கை

Union Budget 2025: நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இன்று ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உரையுடன் இந்தாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பம் ஆனது. இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அதன் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். 

Add Zee News as a Preferred Source

Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்

சனிக்கிழமை, அதாவது நாளை தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில்  இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினருக்கு பல பெரிய நல்ல செய்திகள் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் வழங்க இந்திய அரசு பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வரி முறையில் பெரிய மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

Budget 2025 Income Tax Expectations: வருமான வரி முறையில் உள்ள எதிர்பார்ப்புகள்

மக்கள் மீதான வரிச்சுமை அதிகமாக அதிகரிக்காமல் இருக்க, அரசு வரி அடுக்கில் சில மாற்றங்களைச் செய்யக்கூடும். இந்த மாற்றங்கள் மூலம், அவர்களிடம் கையில் அதிக பணம் இருக்கும். மேலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கத்தை அவர்களால் எளிதாக எதிர்கொள்ள முடியும். இதனால் நடுத்தர வர்க்கத்தினரின் நுகர்வு அதிகரிக்கும். மக்களின் வாங்கும் திறன் அதிகரித்தால், அது நுகர்வோர் சந்தையில் ஏற்றத்திற்கு வழிவகுக்கும்.

இது ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இவை அனைத்தும் நடக்க, மக்கள் கையில் இருக்கும் பணத்தின் அளவு அதிகரிக்க வேண்டும். வரிகளை குறைப்பது இதற்கான ஒரு வழியாக பார்க்கப்படுகின்றது. ரூ.8 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் சனிக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது இந்த அறிவிப்பை வெளியிடுவார் என வெகுவாக எதிர்பார்க்கப்படுகின்றது.

New Tax Regime: புதிய வரி முறை

புதிய வரி முறையை நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனுள்ளதாக மாற்றுவதில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.  இதுவரை, சுமார் 72 சதவீத மக்கள் புதிய வரி விதிப்பு முறையின் கீழ் வந்துள்ளனர். 28 சதவீத மக்கள் மட்டுமே பழைய வரி முறையின் (Old Tax Regime) கீழ் உள்ளனர். புதிய வரி முறையின் கீழ், இந்திய அரசு ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரியை ரத்து செய்து, அதன் பின்னர் வரி விதிக்கக்கூடிய வருமானத்திற்கு 25 சதவீத வரி விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.  அரசு பல வரி விலக்குகளையும் நீக்கக்கூடும். வருமான வரியைப் பொறுத்தவரை, 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு பெரிய பரிசாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Basic Exemption Limit: அடிப்படை விலக்கு வரம்பு அதிகரிக்குமா?

அடிப்படை விலக்கு வரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.  இந்திய அரசு வருமான வரியில் அடிப்படை விலக்கு வரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.3.5 லட்சமாக உயர்த்தலாம் என நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். அதிக பணவீக்கம் நிலவும் இந்தக் காலகட்டத்தில், மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்குச் செலவிடுவதில் இது நிவாரணம் அளிக்கும். 

கடந்த ஆண்டு, வருமான வரி விலக்கு டிடக்‌ஷன் உச்சவரம்பு 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த முறை, NPS ஸ்லாப்பில் வரிவிதிப்பு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதுவரை NPS-ல் ஆண்டுக்கு ரூ.50,000 வரையிலான பங்களிப்புக்கு எந்த விலக்கும் இல்லை. இந்த முறை அரசாங்கம் சம்பளம் பெறாத வகுப்பினருக்கு பயனளிக்கும் வகையில் இதைச் செய்யலாம். இவை அனைத்தும் கருத்துகணிப்புகள் மற்றும் கலந்துரையாடல்களின் அடிப்படையிலான ஊகங்களே. நாளை பட்ஜெட் தாக்கலில் உண்மை நிலவரம் தெரியவரும். எப்படியும் நடுத்தர வர்க்க மக்களுக்கு நல்ல செய்திகள் பல இருப்பதாகவே பரவலாக கூறப்படுகின்றது.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: மாறும் Fitment Factor, தாறுமாறா எகிறப்போகும் ஊதியம், ஓய்வூதியம்

மேலும் படிக்க | Budget 2025: நாளை அதிரடி அறிவிப்பு காத்திருக்கு.... இரட்டிப்பாகும் ஓய்வூதியம், எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News