Budget 2025: நாளை அதிரடி அறிவிப்பு காத்திருக்கு.... இரட்டிப்பாகும் ஓய்வூதியம், எவ்வளவு தெரியுமா?

Union Budget 2025: பட்ஜெட்டில் சமூக பாதுகாப்பை மேம்படுத்த அரசு நடத்தும் நலத்திட்டங்களில் முக்கிய திட்டமாக இருக்கும் அடல் பென்ஷன் திட்டத்தில் ஒரு மிகப்பெரிய அறிவிப்பு வரக்கூடும் என நம்பப்படுகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 31, 2025, 10:06 AM IST
  • APY- இதில் சேர தேவையான தகுதி என்ன?
  • ஆஃப்லைன் முறையில் APY திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
  • ஆன்லைன் முறையில் APY திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
Budget 2025: நாளை அதிரடி அறிவிப்பு காத்திருக்கு.... இரட்டிப்பாகும் ஓய்வூதியம், எவ்வளவு தெரியுமா?

Union Budget 2025: நாளை நாட்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளுக்கான எதிர்பார்ப்புகள் உள்ளன. குறிப்பாக, சாமானிய மக்கள், மூத்த குடிமக்கள், பெண்கள் ஆகியோருக்கு அரசு பல முக்கிய அறிவிப்புகளை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற்து.

Add Zee News as a Preferred Source

Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்

இந்த பட்ஜெட்டில் அரசு நலத்திட்டங்களின் நன்மைகள் மேம்படுத்தப்படும் என பொருளாதார நிபிணர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக, சமூக பாதுகாப்பை மேம்படுத்த அரசு நடத்தும் நலத்திட்டங்களில் முக்கிய திட்டமாக இருக்கும் அடல் பென்ஷன் திட்டத்தில் ஒரு மிகப்பெரிய அறிவிப்பு வரக்கூடும் என நம்பப்படுகின்றது. இந்த பட்ஜெட்டில் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா பணியாளர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கும் என்ற கருத்து உள்ளது. 

Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டம்

மோடி அரசாங்கம் தனது மூன்றாவது பதவிக் காலத்தின் இந்த முக்கிய பட்ஜெட்டில், அமைப்புசாரா துறையை மனதில் கொண்டு நடத்தப்படும் அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை அதிகரிக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது, ​​அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உள்ளது. அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று அமைப்புசாரா துறையினர் நீண்ட காலமாகக் கோரி வருகின்றனர். அரசாங்கம் அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் தொகையை பட்ஜெட்டில் ரூ.10,000 ஆக அதிகரிக்கக்கூடும். இந்த முன்மொழிவு ஒப்புதலின் இறுதி கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.

இரட்டிப்பாகும் பென்ஷன் தொகை

அடல் பென்ஷன் யோஜனா ஓய்வூதிய உயர்வு பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என இந்த திட்டத்தின் பயனாணிகளும் நம்பிக்கை கொண்டுள்ளனர். குறைந்தபட்ச ஓய்வூதிய உத்தரவாதத் தொகையை ரூ.10,000 ஆக உயர்த்தும் திட்டம் இறுதி கட்டத்தில் இருப்பதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அரசாங்கத் தரப்பிலிருந்து கிட்டத்தட்ட ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம்.

Atal Pension Scheme: அடல் ஓய்வூதியத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது? 

பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை மே 9, 2015 அன்று தொடங்கி வைத்தார். அடல் ஓய்வூதியத் திட்டம் என்பது ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். அடல் ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கம், தொழிலாளர்கள், முதியவர்கள், குறிப்பாக ஏழைப் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு நிதிப் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பை வழங்குவதாகும். இந்தத் திட்டத்திற்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர் வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்தால், 60 ஆண்டுகளுக்குப் பிறகு பயனாணிகள் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறுகிறார்கள். இந்த முதலீட்டுத் திட்டங்களில் சேர அதிகபட்ச வயது 40. 

அடல் ஓய்வூதியத் திட்ட பயனாணிகள்

அக்டோபர் 2024 நிலவரப்படி, 2024-25 நிதியாண்டில், 7 கோடிக்கும் அதிகமானோர் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இந்தத் திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் 60 வயதுக்குப் பிறகு அவர்களது முதலீட்டைப் பொறுத்து மாத மாதம் ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000 அல்லது ரூ.5,000 என்ற வகையில் குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். 

வயதின் அடிப்படையில் எவ்வளவு முதலீடு சேரும்?

- ஒருவர் 18 வயதில் மாத ஓய்வூதியத்திற்காக ரூ.1,000 டெபாசிட் செய்தால், அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.42 செலுத்த வேண்டும். 
- ரூ.5,000 ஓய்வூதியத்திற்கு, அதிகபட்மாக ரூ.1,454 செலுத்த வேண்டி இருக்கும்.
- 18 வயதிலேயே ரூ.5,000 ஓய்வூதியத்திற்காக முதலீடு செய்யத் தொடங்கினால், மாதா மாதம் இதில் முதலீடு செய்ய வேண்டிய தொகையின் அளவு குறையும்.

APY: இதில் சேர தேவையான தகுதி என்ன?

18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். விண்ணப்பதாரருக்கு வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வருமான வரி செலுத்துபவர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள். ஓய்வூதியத் தொகையைப் பொறுத்து பங்களிப்புத் தொகை மாறுபடும்.

ஆஃப்லைன் முறையில் APY திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

- உங்கள் சேமிப்புக் கணக்கு உள்ள வங்கிக்குச் செல்லவும். 
- பதிவு படிவத்தை வங்கியிலிருந்து பெறலாம், அல்லது அவர்களின் வலைத்தளத்திலிருந்து பதிவிறக்குங்கள்.
- படிவத்தில் சரியான தகவலை நிரப்பி ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்வு செய்யவும். 
- படிவத்துடன் உங்கள் ஆதார் அட்டை மற்றும் பிற தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
-  விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு செய்தி வரும்.

ஆன்லைன் முறையில் APY திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

- உங்கள் வங்கி போர்டல் அல்லது மொபைல் வங்கி செயலிக்குச் செல்லவும். 
- உங்கள் லாக் இன் மற்றும் கடவுச்சொல்லுடன் லாக் இன் செய்யவும்.
= ‘Social Security Scheme' அல்லது 'அடல் ஓய்வூதியத் திட்டம்' என்று தேடுங்கள். 
- விண்ணப்பப் படிவத்தை நிரப்பி தேவையான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும்.
- மாதாந்திர பங்களிப்புகளுக்கு ஆட்டோ-டெபிட்டுக்கு ஒப்புதல் அளிக்கவும். 
- படிவத்தை சமர்ப்பிக்கும் முன், தகவலைச் சரிபார்த்து பின்னர் சமர்ப்பிக்கவும். 

மேலும் படிக்க | SIP+ SWP: கவலை வேண்டாம்... வாழ்நாள் முழுவதும் மாதம் தோறும் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்கும்

மேலும் படிக்க | UPI புதிய விதிகள் பிப்ரவரி 1 முதல் அமல்... இனி இந்த IDக்கள் பிளாக் செய்யபடும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News