Budget 2025: 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட் குறித்து பலதரப்பட்ட மக்களுக்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன. நடுத்தர வர்க்க மக்கள், வரி செலுத்துவோர், பெண்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் என அனைவருக்கும் பிரத்யேகமான பல எதிர்பார்ப்புகள் உள்ளன.
Union Budget 2025:
இந்த பதிவில் மூத்த குடிமக்களுக்கான ஒரு முக்கிய எதிர்பார்ப்பு பற்றி காணலாம். கோவிட் -19 தொற்றுநோய்க்கு முன்பு, மூத்த குடிமக்கள் ரயில் டிக்கெட்டுகளில் 40 முதல் 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தொற்றுநோய் காலத்தில் இந்த சலுகைக்கான வசதி நிறுத்தப்பட்டது.
இப்போது கோவிட் பாதிப்பு முடிந்துவிட்டது. ஆனால், அரசாங்கம் மூத்த குடிமக்களுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட அந்த சலுகையை மீண்டும் அளிக்கத் தொடங்கவில்லை. வரும் பட்ஜெட்டில் ரயில் டிக்கெட் மீதான தள்ளுபடியை மீண்டும் அளிக்க வேண்டும் என மூத்த குடிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Senior Citizens: 2019 வரை தள்ளுபடிகள் கிடைத்தன
2019 இறுதி வரை, இந்திய ரயில்வே (Indian Railways) மற்றும் IRCTC, மெயில், எக்ஸ்பிரஸ், ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ போன்ற சிறப்பு ரயில்களின் டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு தள்ளுபடியை வழங்கி வந்தது. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு டிக்கெட்டில் 40% சலுகையும், 58 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கு 50% சலுகையும் கிடைத்தது. உதாரணமாக, ராஜ்தானி எக்ஸ்பிரஸின் முதல் ஏசி டிக்கெட் ரூ. 4,000 என்றால், அது மூத்த குடிமக்களுக்கு ரூ.2,000 அல்லது ரூ.2,300 என இருந்தது.
Senior Citizens: கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு ரயில்களில் தள்ளுபடிகள் நிறுத்தப்பட்டன
கோவிட் தொற்றுநோயின் தொடக்கத்தில், 2020 இல், ரயில்வே டிக்கெட்டுகளில் இந்த தள்ளுபடியை அரசாங்கம் நிறுத்தியது. தற்போது நிலைமை சீராகியுள்ளது. ஆனால், தொற்றுநோய்க்குப் பிறகும் இந்த வசதி மீண்டும் தொடங்கப்படவில்லை. பணி ஓய்வுக்கு பிறகு, குறைந்த வருமான ஆதாரங்களே இருப்பதாகவும், ரயில்வே சலுகைகள் தங்கள் பயணத்தை மலிவுபடுத்தியதாகவும் மூத்த குடிமக்கள் கூறுகின்றனர். ஆகையால், பெரிய நிவாரணத்தை அளித்த இந்த சலுகை மீண்டும் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.
Finance Minister: நிதி அமைச்சரிடம் இருந்து எதிர்பார்ப்பு
பிப்ரவரி 1, 2025 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மோடி அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட் இதுவாகும், இதில் மக்கள் குறிப்பாக மூத்த குடிமக்கள் பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார்கள். ரயில் டிக்கெட் தள்ளூபடிக்கான இந்த தளர்வை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் தங்களுக்கான பயணங்களை எளிதாக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று மூத்த குடிமக்கள் கூறுகின்றனர். எனினும், சமீபத்தில் நாடாளுமன்றத்தில், மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் சலுகை குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அரசாங்கம் ஏற்கனவே ரயில் டிக்கெட்டுகளில் பெரிய அளவிலான மானியங்களை வழங்குவதாக தெரிவித்தார்.
பட்ஜெட்டில் இந்தக் கோரிக்கை இடம் பெற்றால், லட்சக்கணக்கான மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள். இந்த நிவாரணம் 2025 பட்ஜெட்டில் மீண்டும் கொண்டு வரப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டு.
மேலும் படிக்க | இந்திய ரயில்வேயில் அதிக கோடிகளை குவிக்கும் ரயில் எது தெரியுமா? வந்தே பாரத் கிடையாது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ