EPS Pension Latest News: தனியார் துறை பணிகளில் வேலை செய்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி காத்திருக்கிறது. அவர்களது இபிஎஸ் குறைந்தபட்ச ஓய்வூதியம் கூடிய விரைவில் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000 ஆக அதிகரிக்குமா? இது குறித்த அப்டேட் என்ன? இந்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
Employee Pension Scheme: ஊழியர் ஓய்வூதியத் திட்டம்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இபிஎஃப் கணக்கு, இபிஎஸ் கணக்கு ஆகிய இரண்டையும் நிர்வகிக்கின்றது. ஊழியர் ஓய்வூதியத் திட்டமான EPS மூலம் பணி ஓய்வுக்கு பிறகு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்படுகின்றது.
Private Sector Employees: தனியார்துறை ஊழியர்கள்
கடந்த ஆண்டு மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், அதாவது UPS-ஐ அறிவித்தது. இந்தத் திட்டம் 25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற கடைசி ஆண்டில் பெறப்பட்ட அடிப்படை சம்பளத்தில் 50% -க்கு சமமான ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது. புதிய ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் நாட்டில் செயல்படுத்தப்படும். அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் வரும் தனியார் ஊழியர்களும் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் மாதாந்திர குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
EPS 95: ஓய்வூதியதாரர்களின் கோரிக்கை என்ன?
குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000-லிருந்து ரூ.9,000-ஆக உயர்த்த வேண்டும் என்று ஓய்வூதியதாரர்கள் கோருகின்றனர். தற்போது பெறப்படும் ஓய்வூதியம் மிகக் குறைவு என்றும் இது அவர்களின் வாழ்வாதாரத்தை கடினமாக்கியுள்ளது என்றும் ஓய்வூதியதாரர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஓய்வூதியதாரர்கள் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர். இது தவிர, ஓய்வூதியதாரர்கள் இலவச மருத்துவ வசதிகள் மற்றும் அகவிலைப்படி நிவாரணத்தை பெற வேண்டு என்றும் கோருகின்றனர். தற்போது EPS-95 இன் கீழ் சுமார் 186 நிறுவனங்கள் உள்ளன. மேலும் இந்த பிரிவின் கீழ் வரும் சுமார் 80 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
EPS Pensioners: இபிஎஸ் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கைகள் என்ன?
EPS-95 தேசிய போராட்டக் குழுவின் தலைவரான கமாண்டர் அசோக் ரவுத், பட்ஜெட்டுக்கு முன்பு ஓய்வூதிய உயர்வு குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் விவாதம் நடந்ததாகக் கூறினார். ஆனால் 2025-26 பட்ஜெட்டில் அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் ஓய்வூதியதாரர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அரசு விரைவில் அதிகரிக்க வேண்டும் என ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மெட்ராஸ் தொழிலாளர் சங்கம் மற்றும் பி & சி மில்ஸ் ஊழியர்கள் சங்கம், மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மண்டவியாவை, ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருபவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.9,000 ஆக உயர்த்துமாறு வலியுறுத்தியுள்ளன.
இதற்கிடையில், மகாராஷ்டிராவின் நாசிக்கில், ஓய்வூதியதாரர்கள் EPFO அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி, குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000 லிருந்து ரூ.9,000 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரியுள்ளனர். அதே நேரத்தில், நாட்டின் பல்வேறு தொழிலாளர் அமைப்புகளும் தொழிலாளர் குறியீடுகளை ஒழித்தல் மற்றும் தனியார்மயமாக்கலை நிறுத்துதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மே 20 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்
இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டு ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதற்கு பிறகு ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் செலவுகள் வெகுவாக அதிகரித்துள்ளன. எனினும், அவர்களது குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே உள்ளது.
மேலும் படிக்க | இந்திய ரயில்வேயின் புதிய விதி.. RAC டிக்கெட் இருந்தால் கட்டாயம் படிக்கவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









