Senior Citizen Savings Scheme: மூத்த குடிமக்களுக்காக அரசு நடத்தும் பிரத்யேக திட்டங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மிக பிரபலமான மற்றும் லாபகரமான திட்டமாக உள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் (SCSS) முதியோருக்கான நிதிப் பாதுகாப்பு மற்றும் வழக்கமான வருமானத்திற்கான நம்பகமான ஆதாரமாகக் கருதப்படுகிறது. இதன் ஏப்ரல்-ஜூன் 2025 காலாண்டிற்கான வட்டி விலிதத்தில் மத்திய அரசு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இதன் காரணமாக SCSS இன் வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.2% ஆகவே தொடரும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் தபால் நிலையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மூலம் சேரலாம். ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் தேடும் மூத்த குடிமக்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசாங்கம் ஒவ்வொரு காலாண்டிலும் மதிப்பாய்வு செய்கிறது. ஆனால் இந்த முறை விகிதங்களை நிலையானதாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது.
SCSS பாதுகாப்பான முதலீட்டுக்கான விருப்பத்தை வழங்குவது மட்டுமல்லாமல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி வருமானம் மற்றும் வரி விலக்கு ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 கொண்டு கணக்கைத் திறக்கலாம். இதன் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.30 லட்சம் ஆகும். இந்தத் திட்டத்தின் விதிகள், வட்டி விகிதம், வரிவிதிப்பு மற்றும் ப்ரீ-மெச்யூர் க்லோசர் பற்றி விரிவாகப் புரிந்துகொள்ளலாம்.
Interest Rate: வட்டி விகிதம் மற்றும் முதலீட்டு விதிமுறைகள்
SCSS இல் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் 2025 வரை ஆண்டுக்கு 8.2% வட்டி விகிதம் கிடைக்கும். இந்த வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் அதாவது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இது முதியவர்களுக்கு வழக்கமான வருமான ஆதரவை வழங்குகிறது. அரசாங்கம் ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதங்களை மதிப்பாய்வு செய்கிறது. ஆனால் இந்த முறை இதில் எந்த அதிகரிப்பு அல்லது குறைப்பும் செய்யப்படவில்லை. அதாவது, முதலீட்டாளர்கள் கடந்த காலாண்டில் இருந்த அதே விகிதத்தை இந்த முறையும் பெறுவார்கள்.
Account Opening: கணக்கை திறப்பது எப்படி?
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் தபால் நிலையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மூலம் சேரலாம். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் கணக்கைத் திறக்க, குறைந்தபட்சம் ரூ.1,000 டெபாசிட் செய்ய வேண்டும், அதன் பிறகு அந்தத் தொகையை ரூ.1,000 இன் மடங்குகளில் அதிகரிக்கலாம். இருப்பினும், மூத்த குடிமகன் இந்தத் திட்டத்தில் ரூ.30 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்ய முடியாது. இந்த வரம்பு அனைத்து செயலில் உள்ள SCSS கணக்குகளின் மொத்த முதலீட்டிற்கும் பொருந்தும். திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். எனினும், இந்த கணக்கை பின்னர் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். நீண்ட காலத்திற்கு நிலையான வருமானத்தை விரும்புவோருக்கு இது நன்மை பயக்கும்.
Tax Benefits: வரி சலுகைகள்
SCSS இல் முதலீடு செய்வது வரிச் சலுகையையும் வழங்குகிறது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ், முதலீட்டாளர்கள் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு கோரலாம். இருப்பினும், இந்தத் திட்டத்திலிருந்து பெறப்படும் வட்டி முழுமையாக வரிக்கு உட்பட்டது.
ஒரு நிதியாண்டில் அனைத்து SCSS கணக்குகளிலிருந்தும் பெறப்பட்ட மொத்த வட்டி ரூ.1 லட்சத்தைத் தாண்டினால், TDS (மூலத்தில் வரி கழிக்கப்பட்டது) கழிக்கப்படும். முன்னதாக இந்த வரம்பு ரூ.50,000 ஆக இருந்தது, எனினும், 2025 பட்ஜெட்டில் இது ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இந்தப் புதிய விதி ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.
முதலீட்டாளர்கள் படிவம் 15G அல்லது 15H ஐச் சமர்ப்பித்து, அவர்களின் மொத்த வட்டி வருமானம் பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விடக் குறைவாக இருந்தால், TDS கழிக்கப்படாது. குறைந்த வருமானம் கொண்ட மற்றும் கூடுதல் வரிச் சுமையைத் தவிர்க்க விரும்பும் முதியவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவியாக இருக்கும்.
Pre Mature Closing: கணக்கை முன்கூட்டியே மூடுவதற்கான விதிகள் என்ன?
SCSS முதலீட்டாளர்களுக்கு நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகிறது. கணக்கைத் திறந்த பிறகு, அதை எந்த நேரத்திலும் மூத்த குடிமக்கள் மூடலாம், எனினும். இதற்கு சில நிபந்தனைகள் மற்றும் அபராதங்கள் உள்ளன.
- ஒரு வருடத்திற்கு முன் கணக்கு மூடப்பட்டால், வட்டி எதுவும் வழங்கப்படாது. முன்னதாக திரட்டப்பட்ட வட்டியும் திரும்பப் பெறப்படும்.
- 1 வருடத்திற்குப் பிறகு ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு கணக்கு மூடப்பட்டால், அசல் தொகையில் 1.5% அபராதம் கழிக்கப்படும்.
- 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு கணக்கு மூடப்பட்டால், 1% கழிக்கப்படும்.
கணக்கு நீட்டிப்பு
5 வருட காலம் முடிந்த பிறகு, கணக்கை 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். இந்த நீட்டிக்கப்பட்ட காலத்தில், ஒரு வருடத்திற்குப் பிறகு கணக்கு மூடப்பட்டால், எந்த அபராதமும் இல்லை. இந்த விதிகள் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப முடிவெடுக்க சுதந்திரத்தை அளிக்கின்றன.
மேலும் படிக்க | கடும் சரிவில் பங்குச் சந்தை... SIP பரஸ்பர நிதிய முதலீடுகள் பாதுகாப்பானது தானா...
மேலும் படிக்க | PVC ஆதார் அட்டை உங்கள் வீடு வந்து சேரும்... விண்ணப்பிக்கும் எளிய முறை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









