)
Indian Railway Latest News: இந்தியாவில் ரயில் போக்குவரத்தை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, தொலைதூர பயணங்களுக்கு மக்களுக்கு ரயில்களிலேயே பயணம் மேற்கொண்டு வருகின்றனர். குறைந்த செலவு, கழிவறை வசதி, படுக்கை வசதியுடன் இருப்பதால், தொலைதூர பயணங்களுக்கு மக்கள் ரயில் போக்குவரத்தையே தேர்வு செய்கின்றனர்.
ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். பயணிகளுக்கு ஏற்ப பல்வேறு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அதாவது, வந்தே பாரத் ரயில்கள், ராஜதாணி, விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்கள் என பல இயக்கப்பட்டு வருகிறது. ரயில்களில் மக்கள் அதிகம் பயணிக்கும் வகையில், ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது தள்ளுபடிகளை அறிவித்து வருகிறது. அதே நேரத்தில் டிக்கெட் முறையில் பல்வேறு வசதிகளையும் வழங்கி வருகிறது.
தற்போது, ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கிடையில், ரயில்களில் சில அசம்பாவித சம்பவங்களும் நடந்து வருகிறது. ரயில் படிகட்டுகளில் நின்று வருவது, அவசர கால செயினை இழுப்பது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. மேலும், சில பயணிகள் ரயில்கள் மது அருந்திவிட்டு பயணம் செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இதற்கு தற்போது இந்தியன் ரயில்வே விளக்கியுள்ளது.
ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, ரயில்களில் மதுபானத்தை எடுத்துச் செல்வதோ அல்லது உட்கொள்வதோ கடுமையான பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துகிறது. குடிபோதையில் இருக்கும் பயணிகள் சக பயணிகளிடம் தவறாக நடந்து கொள்ளலாம், சிரமத்தை ஏற்படுத்தலாம். இதானால், ரயில்களில் மது அருந்தவோ அல்லது மது எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
ரயில் ஊழியர்கள் கூட ரயிலில் பயணம் செய்யும்போது, மது அருந்த தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு செய்வது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. ஒரு பயணி மதுவை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளை அவர்கள் எதிர்கொள்ளலாம் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதாவது, ரயில் மற்றும் ரயில் நிலையத்தில் மது அருந்தினால் முதல்முறையாக ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. அதே தவறை மீண்டும் செய்தால் ஒரு மாத சிறை மற்றும் ரூ.250 அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்பிறகும் தொடர்ந்து செய்தால், தண்டனை காலம் அதிகரிக்கலாம். அதே நேரத்தில், மது அருந்திவிட்டு பயணிகள் தகராறில் ஈடுபட்டால், குறைந்தபட்சம் 6 மாத சிறை மற்றும் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்களில், ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினரைப் பார்க்க அல்லது சுற்றிப் பார்க்க ரயிலில் பயணிக்கும்போது, பயணிகள் எந்த சூழ்நிலையிலும் மது பாட்டில்களை கொண்டு வர வேண்டாம் என்று ரயில்வே எச்சரித்துள்ளது. எனவே, ரயிலில் பயணம் செய்யும்போது, மது அருந்துவதையும், மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ