Central Government Health Scheme: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. மத்திய அரசு சுகாதாரத் திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் பற்றிய சில முக்கிய புதிப்பித்தல்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Ayushman Bharat: ஆயுஷ்மான் பாரத் திட்டத்துன் மூலம் இலவச சுகாதாரப் பாதுகாப்பு
மத்திய அரசு இதுவரை 42 கோடிக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் அட்டைகளை வழங்கியுள்ளது, இதன் மூலம் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி-ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) திட்டத்தின் கீழ் சுமார் 12 கோடி குடும்பங்களுக்கு இலவச சுகாதாரப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளாக, PM-JAY திட்டத்தின் கீழ் அதிகமான குடிமக்களை கொண்டு வருவதற்கான தகுதி வழிகாட்டுதல்களை மத்திய அரசு தொடர்ந்து மாற்றியமைத்து வந்தது.
தொடர்ந்து விரிவடையும் ஆயுஷ்மான் பாரத் திட்டம்
தொடக்கத்தில், 2011 ஆம் ஆண்டு சமூக-பொருளாதார சாதி கணக்கெடுப்பு (SECC) மூலம் அடையாளம் காணப்பட்ட பயனாளி குடும்பங்களுடன், சமூகத்தின் நலிந்த பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகளுக்காக அரசாங்கம் இந்தத் திட்டத்தைத் தொடங்கியது. ஜனவரி 2022 இல், இந்தத் திட்டம் 12 கோடி குடும்பங்களின் பயனாளிகளின் எண்ணிக்கையை அடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. AB-PMJAY ஐ செயல்படுத்தும் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (UTs) SECC அல்லாத தரவு மூலங்களைப் பயன்படுத்தி திட்டத்தின் கீழ் தங்கள் சொந்த செலவில் பயனாளிகளின் எண்ணிக்கையை மேலும் விரிவுபடுத்தின.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி வரம்புகள் மேலும் தளர்த்தப்பட்டன. இதன் மூலம் சுமார் 37 லட்சம் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA), அங்கன்வாடி பணியாளர்கள் (AWW), அங்கன்வாடி உதவியாளர்கள் (AWH) மற்றும் அவர்களது குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டனர்.
70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரிவடைந்த ஆயுஷ்மான் திட்டம்
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து மிகப்பெரிய அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 29, 2024 அன்று வெளியிடப்பட்டது. 4.5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 6 கோடிக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, அவர்களின் சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சைப் பலன்களை வழங்க அரசாங்கம் AB-PMJAY-ஐ விரிவுபடுத்தியது.
CGHS பயனாளிகள் ஆயுஷ்மான் திட்டத்தின் பலன்களை பெற முடியுமா?
இந்தத் திட்டம் ஆரம்பத்தில் வரையறுக்கப்பட்ட முறையில் தொடங்கப்பட்டது. சமூக பாதிப்பு மற்றும் பிற சமூக-பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் குடிமக்களை இது உள்ளடக்கியது. ஆகையால் CGHS (மத்திய அரசு சுகாதாரத் திட்டம்) அட்டையுடன் அரசு பணிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் PM-JAY இன் கீழ் சலுகைகளைப் பெற முடியுமா முடியாதா என்பது குறித்து இன்னும் குழப்பம் நிலவுகிறது.
CGHS அட்டை வைத்திருக்கும் அரசு ஓய்வூதியதாரர்களும் PM-JAY இன் கீழ் வருகிறார்கள்
- மாநில மற்றும் மத்திய அரசு வேலைகளில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், அவர்களின் வயதைப் பொருட்படுத்தாமல், ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய முழு தகுதியுடையவர்கள்.
- ஒரே நிபந்தனை என்னவென்றால், அவர்கள் ஆயுஷ்மான் திட்டம் அல்லது CGHS / ECHS போன்ற அவர்களின் தற்போதைய அரசாங்க சுகாதாரத் திட்டம் ஆகியவற்றில் ஒன்றைத்தான் பயன்படுத்த முடியும்.
AB-PMJAY திட்டத்தின் கீழ் CGHS பயனாளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பு என்ன?
மற்ற குடும்பங்களைப் போலவே, CGHS பயனாளி குடும்பங்களும் குடும்ப மிதவை அடிப்படையில் ரூ.5 லட்சம் சுகாதார காப்பீட்டிற்கு தகுதியுடையவர்கள். 70 வயதுக்கு மேற்பட்ட பெற்றோர்களைக் கொண்ட குடும்பங்களில், இந்த வரம்பு ரூ.10 லட்சம் வரை அதிகரிக்கும்.
CGHS பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் திட்டம்: சுருக்கமாக.....
- CGHS பயனாளிகளும் ஆயுஷ்மான் திட்டத்தின் பலன்களை பெறலாம்.
- PM-JAY இந்தியாவில் உள்ள பொது மற்றும் தனியார் எம்பேனல் செய்யப்பட்ட மருத்துவமனைகளில் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீட்டை வழங்குகிறது.
-12 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மற்றும் நலிவடைந்த நிலையில் உள்ள குடும்பங்கள் (தோராயமாக 55 கோடி பயனாளிகள்) இந்த சலுகைகளுக்கு தகுதியுடையவர்கள்.
-PM-JAY, சேவை மையத்தில், அதாவது மருத்துவமனையில், பயனாளிக்கு சுகாதார சேவைகளை பணமில்லா அணுகலை வழங்குகிறது.
-ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 6 கோடி இந்தியர்களை வறுமையில் தள்ளும் மருத்துவ சிகிச்சைக்கான பேரழிவு செலவினங்களைக் குறைக்க PM-JAY உதவுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









