வங்கிகளில் செய்யப்படும் முதலீடுகள் பாதுகாப்பான முதலீடாக அனைவராலும் கருதப்படுகின்றன. இதில் பணம் பாதுகாப்பாக இருப்பதோடு, நிலையான வருமானமும் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால் சில சந்தர்ப்பங்களில், வங்கிகள் திவால் ஆனாலோ அல்லது நிதி முறைகேடுகள், மோசடி, விதி மீறல்கள் போன்றவற்றின் காரணமாக, முதலீட்டாளர்கள், தங்கள் பணத்தை இழக்கும் ஆபத்து உள்ளது. இது போன்ற நிலையில், வங்கிகளில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்க, மத்திய ரிசர்வ் வங்கி, டெபாசிட் இன்சூரன்ஸ் கிரெடிட் கேரன்டி திட்டம் உதவுகிறது.
முதலீட்டிற்கான காப்பீடு வரம்பு
ரிசர்வ் வங்கியின் டெபாசிட் இன்சூரன்ஸ் கிரெடிட் கேரன்டி (DICGC) என்னும் முதலீட்டிற்கான காப்பீடு, முதலீட்டு தொகையை முழுவதுமாக அளிப்பதில்லை. உங்கள் வைப்புத் தொகை 5 லட்சம் வரை இருந்தால் மட்டுமே காப்பீட்டிற்கான கவரேஜ் கிடைக்கும். ரூபாய் 5 லட்சத்திற்கும் மேல், முதலீடு அல்லது வைப்புத் தொகை இருந்தால் அதிகபட்சமாக 5 லட்சம் தான் கிடைக்கும். இந்த வரம்பிற்கு மேல் செய்த டெபாசிட் தொகை மற்றும் வட்டி ஆகியவற்றை இழக்கும் நிலை ஏற்படும். எனவே பொதுவாக பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள, பணத்தை ஒரே இடத்தில் முதலீடு செய்யாமல், வெவ்வேறு வங்கிகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்று நிபுணர்கள் அறிவுரை கூறுவதை கேட்டிருக்கலாம்.
மேலும் படிக்க | வங்கிகளில் நகை அடகு வைக்க புதிய கட்டுப்பாடு! விதிகள் மாற்றத்தால் மக்கள் அவதி!
வைப்பு தொகைக்கான காப்பீடு வரம்பை அதிகரிக்க மத்திய அரசு ஆலோசனை
சமீபத்தில், நிதி முறைகேடுகள் காரணமாக நியூ இந்தியா கூட்டுறவு வங்கியின் மீது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு தடையை விதித்தது. இதனால் பல முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், வைப்புத்தொகை காப்பீட்டு வரம்பை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்துவது குறித்து இந்திய அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (PMC) சரிந்தபோது இதேபோன்ற நிலைமை ஏற்பட்டது. அந்த நேரத்தில், வைப்புத்தொகை காப்பீட்டு வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
பொதுத்துறை வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டம்
மார்ச் 4 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பொதுத்துறை வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள் நிதித்துறை முன்னேற்றங்கள் குறித்து முக்கியமாக விவாதிப்பார்கள் என கூறப்படுகிறது. வைப்புத்தொகை காப்பீட்டு வரம்பை ரூ.15 லட்சமாக அதிகரிப்பது முதலீட்டாளர்களுக்கு வலுவான நிதி பாதுகாப்பை வழங்கும். ஒரு வங்கி திவால் ஆனால், வாடிக்கையாளர்களுக்கு ரூ.15 லட்சம் வரை பாதுகாப்பு கவரேஜ் இருக்கும். இது வங்கி அமைப்பில் நம்பிக்கையை அதிகரிக்கும், முதலீட்டாளர்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும்.
வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம்
நாம் செய்யும் எந்த ஒரு முதலீடும் இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாடு நிறுவனங்களின் கீழ் இருந்தால் பாதுகாப்பு அதிகம். வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் போன்றவை பாரத ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. நிதி மோசடிகளிலிருந்து முதலீட்டாளர்கள் காக்கப்படுகின்றனர். 1962ம் ஆண்டில் நிறுவப்பட்ட வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (DICGC), இந்தியாவில் வைப்புத்தொகை காப்பீட்டிற்கு பொறுப்பாகும்.
மேலும் படிக்க | ஓய்வூதிய உயர்வு, வட்டி விகிதம்... விரைவில் EPFO 4 மெகா அறிவிப்புகள்: 3 நாட்களில் முக்கிய சந்திப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









