Central Govt Update for Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கான பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து மத்திய அரசு முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Central Govt Update for Pensioners: ஓய்வூதியம் தொடர்பாகவும், ஓய்வூதியதாரர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்தும் மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில் திருச்சியில் முன்னாள் பாதுகாப்பு படை வீரர்களுக்கான ஓய்வூதிய பிரச்சனைகளை தீர்ப்பது குறித்த சிறப்பு குறைதீர்ப்பு முகாமை மத்திய அரசு தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கு ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் மாவட்டம் வாரியாக நடக்க உள்ளது. இதற்காக மொத்தம் 5 பிரத்யேக வாகனங்களில் மத்திய அரசு அதிகாரிகள் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த சூழலில் ஓய்வூதியதாரர்களுக்கான பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து மத்திய அரசு முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.
டெல்லியில் ஓய்வூதிய சிக்கல்கள் குறித்த தேசிய பயிலரங்கு புதன்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ஓய்வூதியம் தொடர்பான சட்ட பிரச்சனைகளைக் குறைப்பதையும், இந்தியாவின் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு ஏற்ப அது தொடர்பான சேவைகளை உறுதி செய்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இதற்கு பிறகு பேசிய மத்திய பணியாளர் நலன் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஊழியர்கள் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், தேசப் பணியிலிருந்து ஓய்வு பெறாதவர்களாக உள்ளனர் என்று கூறினார்.
ஓய்வூதியம் தொடர்பான சிக்கல்கள் பெரும்பாலும் விதிகளை தவறாகப் புரிந்துகொள்வதால்தான் எழுகின்றன என அவர் கூறினார். தீர்க்கப்படாத குறைகள் மூத்த குடிமக்களை தேவையற்ற சிரமத்திற்கு ஆளாக்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். தற்போது, ஓய்வூதியம் தொடர்பான பல்வேறு வழக்குகள் பல்வேறு மன்றங்களில் நிலுவையில் உள்ளன எனவும் கிட்டத்தட்ட 70% வழக்குகள் மத்திய நிர்வாக தீர்ப்பாயங்களில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். வழக்கு என்பது பொதுவாக கடைசி முயற்சியாக இருக்க வேண்டும் எனவும், முதல் தேர்வாக இருக்க கூடாது என்றும் அவர் கூறினார். பிரச்சினைகளைத் தீர்க்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சட்டப் பயிற்சி, சட்ட விவகாரத் துறையுடன் வலுவான ஒருங்கிணைப்பு, தொழில்நுட்பத்தின் அதிகபட்ச பயன்பாடு ஆகியவை குறித்து பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது.
எனவே, நாடு முழுவதும் ஓய்வூதியதாரர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து மத்திய அரசு அடுத்தடுத்து கூட்டங்களை நடத்தி அவர்களுக்கு இருக்கும் கோரிக்கைகளையும் பெற்று விருவதால் அடுத்து அமலாக இருக்கும் சம்பள கமிஷனில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளது. எனவே, 8வது சம்பள கமிஷன் குறித்த அறிவிப்புகளையும், அதில் தங்களுக்காக இடம்பெற உள்ள சிறப்பம்சங்களையும் ஓய்வூதியதாரர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ