அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்: புதிய CGHS போர்டல், அதிக வசதிகள், விவரம் இதோ

CGHS New Rules: மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தில் ஒரு பெரிய டிஜிட்டல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 28, 2025 முதல், CGHS இன் பழைய வலைத்தளங்கள் மூடப்பட்டு அவற்றுக்கு பதிலாக புதிய டிஜிட்டல் தளம் மற்றும் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (HMIS) செயல்படுத்தப்பட்டுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 1, 2025, 12:49 PM IST
  • சிஜிஎஹ்எஸ் புதிய தளம்.
  • மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்.
  • முழு விவரம் இதோ.
அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்: புதிய CGHS போர்டல், அதிக வசதிகள், விவரம் இதோ

CGHS Latest News: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தில் சமீபத்தில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான வசதிகளும் அதிகரித்துள்ளன. CGHS -இல் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

CGHS New Website: சிஜிஎஹ்எஸ் புதிய தளம்

மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தில் (CGHS) ஒரு பெரிய டிஜிட்டல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 28, 2025 முதல், CGHS இன் பழைய வலைத்தளங்களான http://www.cghs.gov.in மற்றும் http://www.cghs.nic.in மூடப்பட்டுவிட்டன. இவற்றுக்கு பதிலாக புதிய டிஜிட்டல் தளம் மற்றும் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (HMIS) இனி செயலில் இருக்கும். 

இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ள்து. இனி இப்போது CGHS -இன் அனைத்து சேவைகளும் http://www.cghs.mohfw.gov.in என்ற புதிய போர்டல் மூலம் கிடைக்கும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்காக ஒரு புதிய சிஜிஎச்எஸ் மொபைல் செயலியும் (CGHS Mobile App) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

CGHS இன் பழைய மென்பொருள் 2005 முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மென்பொருள் இனி தொழில்நுட்ப ரீதியாக திறன் கொண்டதாக இல்லை என்ற கருத்து நிலவியது. புதிய சைபர் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பழைய மென்பொருளை மேம்படுத்துவது அவசியமானது. ஆகையால், ஒரு புதிய டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டுள்ளது. இது விரைவான சேவைகளை வழங்குவது மட்டுமல்லாமல், இந்த தளம் மேம்பட்ட பாதுகாப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது. மேலும் இது அதிக யூசர் ஃப்ரெண்ட்லியாக இருக்கும், அதாவது இதன் செயல்முறைகள் பயனர்களுக்கு பயன்படுத்த எளிமையாக இருக்கும்.

Central Government Health Scheme: மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்

- PAN: நிரந்தர கணக்கு எண் மூலம் அடையாளம் காணல்
CGHS பயனாளிகள் இப்போது அவர்களின் நிரந்தர கணக்கு எண், அதாவது  PAN மூலம் அடையாளம் காணப்படுவார்கள். இது தகுதியை உறுதிப்படுத்துவதை எளிதாக்கும்.

- Bharat Kosh: பாரத் கோஷ் மூலம் நேரடி கட்டணம்

இப்போது CGHS பயனர் பங்களிப்புக்கான கட்டணம் நேரடியாக பாரத் கோஷ் போர்ட்டலுடன் இணைக்கப்படும். இதில் கைமுறை உள்ளீடு இருக்காது. இதனால் தொகையை திரும்பப் பெறுவதில் இருக்கும் சிக்கல்கள் குறையும்.

- Transparency: வெளிப்படைத்தன்மை

CGHS அட்டையை உருவாக்குவதற்கு முன் முழுமையான தகவல் கிடைக்கும். அதாவது, இப்போது தகுதி மற்றும் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகை பற்றிய முழுமையான தகவல்கள் CGHS அட்டைக்கு விண்ணப்பிக்கும் நேரத்திலேயே கிடைக்கும். இது வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.

- Online Services: ஆன்லைன் சேவைகள்

இப்போது அட்டை பரிமாற்றம், சார்ந்திருப்பவர்களைச் சேர்ப்பது போன்ற அனைத்து செயல்முறைகளும் முற்றிலும் ஆன்லைனிலேயே செய்து முடிக்கப்படும். ஆகையால், இனி இவற்றுக்காக அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

- SMS, EMail: குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல்

விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்கள் இனி குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் கிடைக்கும். இது வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும், ஃபாலோ-அப் தொந்தரவைக் குறைக்கும்.

- Password Reset: கடவுச்சொல் ரீசெட் செய்வது கட்டாயம்

புதிய அமைப்பில் முதல் முறையாக லாக் இன் செய்யும்போது, ​​ஏற்கனவே உள்ள அனைத்து பயனர்களும் தங்கள் கடவுச்சொல்லை மீட்டமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது அதிக பாதுகாப்பை உறுதி செய்யும்.

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கான சிறப்பு திட்டம்

மத்திய அரசு சுகாதாரத் திட்டம் (CGHS) மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மலிவு விலையில், விரிவான சுகாதார சேவைகளை வழங்குகிறது. இதன் கீழ், நல்வாழ்வு மையங்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளின் வலையமைப்பு மூலம் மருத்துவ ஆலோசனை, சிகிச்சை, மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் வசதிகள் வழங்கப்படுகின்றன.

மேலும் படிக்க | LPG சிலிண்டர் விலை குறைந்தது, மாதத்தின் முதல் நாளே வந்த குட் நியூஸ்: லேட்டஸ்ட் விலை இதோ

மேலும் படிக்க | EPF உறுப்பினர்களுக்கு டபுள் குட் நியூஸ்: அதிகரிக்கும் ஓய்வூதியம், ஊதிய உச்சவரம்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News