CGHS கார்டு விதிகளில் மாற்றம்... சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

CGHS  சேவை பெறுவதற்காக சம்பளம் பிடித்தம் செய்யப்படும் மத்திய அரசு ஊழியர்களுக்கு CGHS அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்று அரசு அறிவிப்பு கூறியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 14, 2025, 08:00 PM IST
  • CGHS ஒரு கட்டாயத் திட்டம்
  • ஊழியரின் சம்பளத்திலிருந்து தானாகவே கழிக்கப்படும் CGHS பணம்
  • CGHS வசதிகளை மறுப்பது தவறு
CGHS கார்டு விதிகளில் மாற்றம்... சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மத்திய அரசு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அமைச்சகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர் ஒருவரின் சம்பளத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் CGHS பணம் கட்டாயமாகப் பிடித்தம் செய்யப்பட்ட நிலையில், நிர்வாகக் கிளையில் CGHS அட்டைக்கு விண்ணப்பிக்கவில்லை என்பதற்காக அவருக்கு CGHS வசதிகளை மறுப்பது தவறு என குறிப்பிட்டுள்ளது.

CGHS அளிக்கும் வசதிகளை பறிப்பது சரியல்ல

CGHS  சேவை பெறுவதற்காக சம்பளம் பிடித்தம் செய்யப்படும் மத்திய அரசு ஊழியர்களுக்கு CGHS அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்று அரசு அறிவிப்பு கூறியுள்ளது. பல நேரங்களில் ஊழியர்கள் தானாகவே, CGHS அட்டைக்கு விண்ணப்பிப்பதில்லை. ஆனால் ஒவ்வொரு மாதமும் அவர்களின் சம்பளத்திலிருந்து பணம் கழிக்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், CGHS அளிக்கும் வசதிகளை அவர்களிடம் இருந்து பறிப்பது சரியல்ல என அரசு அறிவிப்பு கூறுகிறது.

ஊழியரின் சம்பளத்திலிருந்து தானாகவே கழிக்கப்படும் CGHS பணம் 

CGHS ஒரு கட்டாயத் திட்டம் என்று அமைச்சகம் தெளிவாகக் கூறியுள்ளது. CGHS மருந்தகங்களால் உள்ளடக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் ஊழியர்களுக்கு, இந்தத் திட்டத்திற்கான அவர்களின் பங்களிப்பு அவர்களின் சம்பளத்திலிருந்து தானாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதாவது, நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியராக இருந்து, உங்கள் குடியிருப்பு CGHS மருந்தகத்தின் எல்லைக்குள் வரும் பகுதியில் இருந்தால், CGHS பணம் ஒவ்வொரு மாதமும் எந்தவொரு விண்ணப்பமும் இல்லாமல் உங்கள் சம்பளத்திலிருந்து தானாகவே கழிக்கப்படும். இந்தத் திட்டம் அனைத்து மத்திய ஊழியர்களுக்கும் பொருந்தும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், CGHS அட்டை பெற தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று என மத்திய அரசு கூறியுள்ளது.

CGHS அட்டைகளை வழங்குமாறு சுகாதார அமைச்சகம் உத்தரவு

CGHS அட்டை பெற விண்ணப்பிக்காத ஊழியர்களுக்கு தானாகவே CGHS அட்டைகளை வழங்குமாறு அனைத்து நிர்வாகக் கிளைகளுக்கும் சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எந்தவொரு ஊழியரும் பலமுறை தகவல் பெற்ற பிறகும் விண்ணப்பிக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அது குறித்து தெரிவிக்க வேண்டும். இதனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பிக்காமலேயே CGHS திட்டத்திற்கு பங்களிப்பு செய்து, அட்டையைப் பெற முடியாத மத்திய ஊழியர்களுக்கு இந்த முடிவு ஒரு நிம்மதியான செய்தியாகும். இப்போது இந்த ஊழியர்களுக்கு அட்டைகளை வழங்குவது துறையின் பொறுப்பாகும்.

மேலும் படிக்க | Gpay, Paytm பயனர்கள் ஷாக்... பணப் பரிவர்த்தனையில் சிக்கல் - என்ன தான் ஆச்சு?

மேலும் படிக்க | தட்கல் புக்கிங் செய்ய சரியான நேரம் எது தெரியுமா? இந்த தவறுகளை பண்ணாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News