Central Government Health Scheme: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. மத்திய அரசின் சுகாதாரத் திட்ட (CGHS) பயனாளிகளுக்கு ஒரு முக்கிய புதுப்பிப்பு கிடைத்துள்ளது. சுகாதாரத் திட்ட வசதி இயங்கும் பகுதிகளில் வசிக்கும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் நிலையான மருத்துவ உதவித்தொகை (FMA) வசதியைப் பெறுவதற்கான வழிகாட்டுதல்களை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் திருத்தியுள்ளது.
Ministry of Health and Family Welfare: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கூறியது என்ன?
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அரசாங்கம் CGHS சலுகைகளை நீட்டித்துள்ளதாகக் கூறும் அறிவிப்பின் மூலம் இந்த செய்தி கிடைத்துள்ளது. 13.11.2023 தேதியிட்ட சுகாதார அமைச்சகத்தின் உத்தரவு மற்றும் புதுச்சேரி அரசின் கணக்குகள் மற்றும் கருவூல இயக்குநரகத்தின் தொடர்புடைய தகவல்தொடர்புகளைத் தொடர்ந்து இந்த புதிப்பிப்பு வந்துள்ளது.
இருப்பினும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் CGHS-இணைக்கப்பட்ட பகுதிகளில் FMA வசதி கிடைக்காதது குறித்த இந்த உத்தரவு பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இதே போன்ற வழிமுறைகளுக்கு வழிவகுக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
அலுவலக குறிப்பாணையில், சுகாதார அமைச்சகம், “…புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு CGHS வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.
“…புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் CGHS இன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் அனைத்து ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் இதுவரை வழங்கப்பட்ட நிலையான மருத்துவ கொடுப்பனவு (FMA) பிப்ரவரி 2025 முதல் நிறுத்தப்படும்.” என்று இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CGHS இன் கீழ் இல்லாத பகுதிகளில் (காரைக்கால், மாஹே மற்றும் யானம் போன்றவை) வசிப்பவர்களுக்கு, பின்வரும் விருப்பங்கள் உள்ளன:
- வெறும் CGHS உள்நோயாளி (IP) சலுகைகளுடன் FMA ஐ அவர்கள் தொடர்ந்து பெறலாம்.
- FMA இலிருந்து விலகி, CGHS இன் கீழ் வெளிநோயாளர் (OPD) மற்றும் உள்நோயாளி (IP) சலுகைகளையும் பெறலாம்.
"CGHS இன் கீழ் வராத பகுதிகளில் வசிக்கும் ஓய்வூதியதாரர்கள்/குடும்ப ஓய்வூதியதாரர்கள், IP-க்கு (உள்நோயாளி பிரிவு) மட்டும் FMA மற்றும் CGHS வசதிகளைப் பெறலாம். அல்லது அவர்கள் FMA-வைத் தவிர்த்து, OPD & IP வசதிகள் இரண்டையும் பெறலாம். எ.கா. CGHS-க்கு உட்பட்ட பகுதிகள் அல்லாத புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால், மாஹே மற்றும் யானம் பகுதிகளில் வசிக்கும் ஓய்வூதியதாரர்கள்/குடும்ப ஓய்வூதியதாரர்கள், (CGHS -இல் வராத இடங்கள்) நிலையான மருத்துவ கொடுப்பனவு (FMA) பெற உரிமை உண்டு. CGHS -க்கு மாறத் தேர்வு செய்தவர்களுக்கு இது கிடைக்காது" என்று அலுவலக குறிப்பாணை தெரிவிக்கின்றது.
ஓய்வூதிய விநியோகத்திற்கு பொறுப்பான வங்கிகள் இந்த மாற்றங்களை அதற்கேற்ப செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
CGHS Guidelines: சிஜிஎஹ்எஸ் வழிகாட்டுதல்களில் சமீபத்தில் முக்கிய மாற்றங்கள்
சுவாச சாதனங்கள் பற்றிய சில அத்தியாவசிய சேவைகளுக்கான ஒப்புதல் செயல்முறையை நெறிப்படுத்தும் முயற்சியாக, இந்த ஆண்டு ஜனவரியில் சுகாதார அமைச்சகம் மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் கீழ் CPAP, BiPAP மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தொடர்பான அனுமதிகளை செயலாக்குவதற்கான ஆன்லைன் முறைக்கு முழுமையான மாற்றத்தை அறிவித்தது. இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









