)
Central Government Health Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மத்திய அரசு சுகாதாரத் திட்டத்திற்கு (CGHS) மத்திய அரசு தெளிவான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. சிஜிஎச்எஸ் அட்டை ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்றவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் மலிவு விலை மற்றும் பணமில்லா சுகாதார சேவையை வழங்குகிறது.
CGHS Card: சிஜிஎச்எஸ் அட்டை யாருக்கெல்லாம் கிடைக்கும்?
சிஜிஎச்எஸ் அட்டை யாருக்கெல்லாம் கிடைக்கும்? இந்த அட்டைக்கு யாரெல்லாம் தகுதியானவர்கள்? இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? இதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
CGHS Card: இந்த அட்டையை பெற தகுதியுடையவர்கள் யார்?
- மத்திய சிவில் எஸ்டிமேட்டிலிருந்து ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியதாரர்களும் CGHS அட்டையைப் பெறலாம்.
- அவர்கள் நிலையான மருத்துவ கொடுப்பனவை (FMA - Fixed Medical Allowance) பெறும் நபர்களாக இருக்கக்கூடாது என்பது நிவந்தனை.
- OPD மற்றும் IPD, அதாவது மருத்துவமனை சேவை ஆகிய இரண்டையும் வழங்கும் முழு CGHS அட்டை ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும்.
- ஒரு ஓய்வூதியதாரர் FMA பெற்றால், அவருக்கு IPD ஒன்லி அட்டை மட்டுமே கிடைக்கும்.
- இந்த அட்டையைப் பயன்படுத்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது பணமில்லா சிகிச்சை மற்றும் அவசரகாலத்தில் பணத்தைத் திரும்பப் பெறும் ரியெம்பர்ஸ்மெண்ட் வசதி ஆகியவற்றை அவர்கள் பெறுவார்கள்.
CGHS Card: இந்த அட்டைக்கு விண்ணப்பிக்கும் முறை என்ன?
- ஓய்வூதியதாரர்கள் www.cghs.nic.in என்ற போர்ட்டலுக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பப் படிவத்தை நிரப்பிய பிறகு, ஒரு தற்காலிக குறிப்பு எண் உருவாக்கப்படும்.
- பின்னர் இந்தப் படிவத்தை பிரிண்ட் எடுத்து, கையொப்பமிட்டு, புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் உங்கள் நகரத்தில் உள்ள CGHS கூடுதல் இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பித்த பிறகு, ஓய்வூதியதாரர் பாரத் கோஷ் போர்ட்டலில் நிலையான பங்களிப்புக் கட்டணத்தை டெபாசிட் செய்ய வேண்டும்.
- ஒரு வருட அட்டையைப் பெற விரும்புவோர் 12 மாதங்களுக்கு கட்டணத்தை டெபாசிட் செய்ய வேண்டும்.
- வாழ்நாள் அட்டைக்கு, 120 மாதங்களுக்கான கட்டணம் ஒரே தொகையில் டெபாசிட் செய்யப்பட வேண்டும்.
CGHS Card: இதற்கான கட்டணம் என்ன?
ஓய்வூதியதாரரின் சம்பள நிலைக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது (7வது ஊதியக் குழு).
- லெவல் 1 முதல் லெவல் 5 வரை: வருடத்திற்கு ரூ.3,000 அல்லது வாழ்நாள் முழுவதுக்கும் ரூ.30,000
- லெவல் 6: வருடத்திற்கு ரூ.5,400 அல்லது வாழ்நாள் முழுவதுக்கும் ரூ.54,000
- லெவல் 7 முதல் லெவல் 11 வரை: வருடத்திற்கு ரூ.7,800 அல்லது வாழ்நாள் முழுவதுக்கும் ரூ.78,000
- லெவல் 12 மற்றும் அதற்கு மேல்: வருடத்திற்கு ரூ.12,000 அல்லது வாழ்நாள் முழுவதுக்கும் ரூ.1,20,000
CGHS Card: இதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்ன?
PPO அல்லது கடைசி ஊதியச் சான்றிதழின் சுய சான்றளிக்கப்பட்ட நகல், ஆதார் அல்லது PAN அட்டை (ஐடி மற்றும் முகவரிச் சான்று), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (ஓய்வு பெற்றவர்கள் மற்றும் சார்ந்திருப்பவர்களுடையது), பாரத் கோஷ் பேமென்ட் சலான், FMA நிலைக்கான சான்று, ஊனமுற்ற உறுப்பினரை சார்ந்திருப்பவராகக் காட்ட ஊனமுற்றோர் சான்றிதழ் ஆகியவை தேவைப்படும்.
Digital CGHS Card
இப்போது ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் CGHS அட்டையுடன் கூடிய வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையை myCGHS செயலி, DigiLocker செயலி அல்லது CGHS இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். டிஜிட்டல் அட்டை பிளாஸ்டிக் அட்டையைப் போலவே செல்லுபடியாகும். அதை மருத்துவமனைகளில் காண்பித்து CGHS நன்மைகளை பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ