8வது ஊதியக்குழுவில் CGHS -க்கு பதிலாக புதிய சுகாதாரத் திட்டமா? அரசு ஊழியர்களுக்கு அசத்தல் அப்டேட்

8th Pay Commission: CGHS -க்கு பதிலாக 8வது ஊதியக்குழு புதிய சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தை பரிந்துரைக்கும் என கூறப்படுகின்றது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 12, 2025, 06:50 PM IST
  • 8வது ஊதியக்குழு புதிய சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தைப் பரிந்துரைக்குமா?
  • ஆறாவது மற்றும் ஏழாவது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் என்ன?
  • 8வது ஊதியக் குழுவில் அரசாங்கத்தின் திட்டம் என்ன?
8வது ஊதியக்குழுவில் CGHS -க்கு பதிலாக புதிய சுகாதாரத் திட்டமா? அரசு ஊழியர்களுக்கு அசத்தல் அப்டேட்

8th Pay Commission: நீங்கள் ஒரு அரசு ஊழியராக இருந்தாலோ அல்லது உங்கள் குடும்பத்தில் அரசு ஊழியர் எவரேனும் இருந்தாலோ, இந்த பதிவு உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். ஜனவரி மாதம் 8வது ஊதியக்குழுவை அமைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலைக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் எவ்வளவு மாற்றம் தேவை என்பதை புதிய ஆணையம் பரிந்துரைக்கும். பெரும்பாலான மக்கள் சம்பளக் குழுவின் வேலை, ஊழியர்களின் சம்பளத்தை எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்பதை தீமானிப்பது மட்டுமே என நம்புகிறார்கள். ஆனால் ஊதியக்குக்கள் இன்னும் பல பணிகளை செய்கின்றன.

Add Zee News as a Preferred Source

Central Government Employees: சம்பள உயர்வைத் தவிர, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆணையம் மற்ற விஷயங்களையும் மதிப்பாய்வு செய்கிறது

சம்பள ஆணையத்தின் வேலை வெறும் சம்பள உயர்வு பற்றி தெரிவிப்பது மட்டுமல்ல. பல்வேறு வகையான கொடுப்பனவுகள், வசதிகள் மற்றும் பிற விஷயங்களையும் ஆணையம் மதிப்பாய்வு செய்கிறது. இதற்குப் பிறகு, ஊழியர்களின் நலனுக்காக என்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை ஆணையம் அறிவுறுத்துகிறது. 

Central Government Health Scheme: மத்திய அரசு சுகாதாரத் திட்டம்

கடந்த பல ஆண்டுகளாக கவனத்தை ஈர்த்து வரும் அத்தகைய மாற்றங்களில் ஒன்று மத்திய அரசு சுகாதாரத் திட்டம் (CGHS). மத்திய அரசு ஊழியர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் CGHS இன் கீழ் பலன்களை பெறுகிறார்கள். இது அவர்களுக்கு முழுமையான மருத்துவ பராமரிப்பு மற்றும் தொடர்புடைய வசதிகளை வழங்குகிறது.

CGHS என்றால் என்ன?

CGHS என்பது இந்திய அரசின் ஒரு சுகாதாரத் திட்டமாகும். இது மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மலிவு விலையில் மருத்துவ ஆலோசனை, சிகிச்சை, பரிசோதனைகள் மற்றும் மருந்துகளை வழங்குகிறது. இது ஒரு வகையான முழுமையான மருத்துவ சேவையாகும். இது அரசாங்கத்தால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

8வது ஊதியக்குழு புதிய சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தைப் பரிந்துரைக்குமா?

கடந்த மூன்று சம்பள கமிஷன்களும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு புதிய சுகாதாரத் திட்டத்தைத் தொடங்க பரிந்துரைத்தன. இதற்கான விருப்பன் அரசாங்கத்திற்கும் இருந்த போதிலும், இந்த திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. CGHS இன் அணுகல் மிகவும் குறைவாக இருப்பதை மனதில் கொண்டு, புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் முந்தைய குழுக்களால் பரிந்துரைக்கப்பட்டது. CGHS வசதி அனைத்து இடங்களிலும் இல்லை. இந்த காரணத்தால்தான் முந்தைய ஊதியக் கமிஷன்கள் விரிவான மற்றும் எளிதில் அணுகக்கூடிய சுகாதாரத் திட்டத்தின் தேவையை உணர்ந்தன. முந்தைய சம்பள கமிஷன்கள் இதைப் பற்றி தெரிவித்த கருத்துகளை கீழே காணலாம்.

ஆறாவது மற்றும் ஏழாவது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் என்ன?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மாற்று சுகாதாரத் திட்டம் தொடங்கப்பட வேண்டும் என்று 6வது ஊதியக்குழு பரிந்துரைத்தது. இதில், ஊழியர்கள் தங்கள் விருப்பப்படி ஒரு நிலையான பங்களிப்பைச் செலுத்தி சேரலாம். எதிர்காலத்தில் பணியில் சேரும் புதிய ஊழியர்களுக்கு இந்தத் திட்டம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைத்திருந்தது. இதேபோல், 7வது ஊதியக்குழு, அனைத்து ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நீண்ட காலத்திற்கு சிறந்த மருத்துவப் பாதுகாப்பை வழங்க சுகாதார காப்பீடு ஒரு நல்ல வழி என்று தெளிவாகக் கூறியிருந்தது. சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்துவது சம்பள ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டது.

8வது ஊதியக் குழுவில் அரசாங்கத்தின் திட்டம் என்ன?

சுகாதார அமைச்சகம் CGHS -க்கு பதிலாக காப்பீட்டு அடிப்படையிலான திட்டத்தை கொண்டுவரக்கூடும் என்ற தகவல்கள் வந்ததாக ஜனவரி 2025 இல், ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை கூறியது. இந்தத் திட்டத்தின் பெயர் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சுகாதார காப்பீட்டுத் திட்டம் (CGEPHIS) என்று இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. காப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பான IRDAI-இல் பதிவுசெய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படலாம். இருப்பினும், இது குறித்து அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

மேலும் படிக்க | இனி UAN உருவாக்கம் உங்கள் கையில்: EPFO முக அங்கீகார தொழில்நுட்பம் மூலம் இப்படி நிமிடங்களில் செய்யலாம்

மேகும் படிக்க | NPS to UPS: 50% ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஏகப்பட்ட நன்மைகள்... மாறுவதற்கான வழிமுறை இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News