CGHS புதிய விதிகள்: மத்திய அரசு ஊழியர்கள் அறிந்திருக்க வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்

CGHS Latest News: CGHS இல் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பான 10 முக்கியமான அம்சங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இவை அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 20, 2025, 08:48 AM IST
  • டிஜிட்டல் CGHS அட்டை மூலம் பல வசதிகள்.
  • பாரத் கோஷில் பணம் செலுத்துவது நிறுத்தப்பட்டது.
  • ஒவ்வொரு கட்டத்திலும் SMS மற்றும் மின்னஞ்சல் எச்சரிக்கை.
CGHS புதிய விதிகள்: மத்திய அரசு ஊழியர்கள் அறிந்திருக்க வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்

CGHS New Rules: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக நடத்தப்படும் மத்திய அரசு சுகாதாரத் திட்டம் (CGHS) இப்போது முற்றிலும் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இதற்காக ஏப்ரல் 28, 2025 அன்று ஒரு புதிய டிஜிட்டல் சுகாதார தளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய தளத்தின் (www.cghs.mohfw.gov.in) மூலம் CGHS சேவைகளில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பழைய வலைத்தளத்தின் (bharatkosh.gov.in) செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. 

Central Government Employees

CGHS இல் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பான 10 முக்கியமான அம்சங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இவை அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

1. CGHS Card: CGHS அட்டையை PAN உடன் இணைக்கும் செயல்முறை

புதிய அமைப்பில், அனைத்து CGHS அட்டைகளும் PAN உடன் இணைக்கப்பட்டு அனைத்து பயனர்களுக்கும் ஒரு தனித்துவமான PAN அடிப்படையிலான அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. இது நகல் பதிவுகளின் சிக்கலை நீக்கும், மேலும், தகுதியைச் சரிபார்ப்பதை எளிதாக்கும்.

2. Integrated Digital Verification: ஒருங்கிணைந்த டிஜிட்டல் சரிபார்ப்பு

இப்போது CGHS இல் பங்களிப்பு கொடுப்பனவுகளின்  (Contribution payments) சரிபார்ப்பு தானாகவே செய்யப்படும். இதற்கு கைமுறையாக உள்ளீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. இதனால் தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் பணத்தைத் திரும்பப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகளும் இருக்காது.

3. Pre-payment Scrutiny: பணம் செலுத்துவதற்கு முன் விண்ணப்ப ஆய்வு

இப்போது பணம் செலுத்துவதற்கு முன், CGHS அட்டையின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும். அதன் பிறகுதான் பணம் செலுத்தும் முறை வரும். இதன் மூலம், விண்ணப்பதாரர்கள் பணம் பெறுவதற்கு முன் தகுதி மற்றும் பங்களிப்புத் தொகை பற்றிய முழுமையான தகவலைப் பெறுவார்கள், மேலும் தவறான நபருக்கு பணம் அனுப்பப்படுவதும் தவிர்க்கப்படும்.

4. Online Facility: ஆன்லைனில் அட்டை பரிமாற்றம்

இப்போது அட்டை பரிமாற்றம், சார்ந்தவர்களின் நிலையில் மாற்றம் அல்லது சேவையில் இருக்கும் நிலையிலிருந்து பணி ஓய்வுக்கு மாறுதல் போன்ற சேவைகள் முழுமையாக ஆன்லைனில் கிடைக்கும்.

5. SMS Alert: ஒவ்வொரு கட்டத்திலும் SMS மற்றும் மின்னஞ்சல் எச்சரிக்கை

இப்போது CGHS விண்ணப்பத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் புதுப்பிப்புகள் கிடைக்கும். இது கண்காணிப்பை எளிதாக்கும். மேலும் சிஜிஎஹ்எஸ் பயனாளிகள் (CGHS Beneficiaries) எதற்காகவும் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியமும் இருக்காது.

6. Password Reset: கடவுச்சொல் மீட்டமைப்பு அவசியம்

புதிய தளத்தில் முதல் முறையாக லாக் இன் செய்யும்போது அனைத்து பயனர்களும் கடவுச்சொல்லை மீட்டமைக்க வேண்டும், அதாவது ரீசெட் செய்ய வேண்டும். இது MeitY இன் சைபர் பாதுகாப்பு விதிகளின் கீழ் செய்யப்பட்டுள்ளது.

7. DDO மற்றும் PAO குறியீடு மூலம் துறை அடையாளம்

இப்போது சம்பள சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள DDO மற்றும் PAO குறியீட்டால் பணியாளர்கள் துறைசார் அடையாளம் காணப்படுவார்கள். இது பணம் செலுத்தும் அதிகாரி மற்றும் ஸ்பான்சர் செய்யும் அதிகாரியின் தானியங்கி மேப்பிங்கை சாத்தியமாக்கும்.

8. CGHS Mobile App: மொபைல் செயலியின் புதிய பதிப்பு

CGHS இன் மொபைல் செயலியும் புதிய வடிவத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இப்போது Android மற்றும் iOS பயனர்கள் இருவருக்கும் சிறந்த வசதி கிடைக்கிறது.

9. Digital Card: டிஜிட்டல் CGHS அட்டை மூலம் பல வசதிகள்

இப்போது நிகழ்நேர கண்காணிப்பு, ஈ-ரெஃபரல், சந்திப்பு முன்பதிவு, உதவி மையத்துடன் தொடர்பு மற்றும் விளம்பர அலுவலகத்துடன் இணைப்பு போன்ற வசதிகள் டிஜிட்டல் அட்டை மூலம் கிடைக்கும்.

10. Bharat Kosh: பாரத் கோஷில் பணம் செலுத்துவது நிறுத்தப்பட்டது

CGHS தொடர்பான பணம் செலுத்துதல்கள் இப்போது cghs.mohfw.gov.in என்ற புதிய வலைத்தளம் மூலம் மட்டுமே செய்யப்படுகின்றன. ஏப்ரல் 28, 2025 முதல், bharatkosh.gov.in இல் கிடைக்கும் அனைத்து வசதிகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய அமைப்பின் நோக்கம் CGHS ஐ முற்றிலும் வெளிப்படையானதாகவும், பாதுகாப்பானதாகவும், பயனர்களுக்கு சிறந்ததாகவும் மாற்றுவதாகும். CGHS சேவைகளைப் பயன்படுத்தும்போது எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளாமல் இருக்க, மத்திய அரசின் தற்போதைய மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களும் இந்தப் புதிய முறை மற்றும் அதன் மாற்றப்பட்ட விதிகள் பற்றி அறிந்து கொள்வது முக்கியம்.

மேலும் படிக்க | SCSS: மூத்த குடிமக்களுக்கு அட்டகாசமான திட்டம், 5 ஆண்டுகளில் 24 லட்சம்... முழு விவரம் இதோ

மேலும் படிக்க | நல்ல செய்தி!! Awas Plus Registration... பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க எளிய வழி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News