)
CGHS New Rules: மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் வரும் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. CGHS-ல் விரைவில் பல பெரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இவற்றின் கீழ் ஊழியர்களுக்கான வசதிகள் மேம்படுவதோடு மட்டுமல்லாமல் புதிய நல்வாழ்வு மையங்களும் திறக்கப்படும்.
Central Government Health Scheme
ஓய்வு பெற்றவர்களுக்கான சேவைகளை மேம்படுத்தல், பணியாளர்கள் பற்றாக்குறையை சரி செய்தல், மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் மானிய விலையில் கிடைக்கும் சிகிச்சை வசதிகளில் தனியார் மருத்துவமனைகளை இணைத்தல் உள்ளிட்ட பல விஷயங்களில் CGHS கவனம் செலுத்தும்.
Standing Committee of Voluntary Agencies
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற 34வது SCOVA (தன்னார்வ நிறுவனங்களின் நிலைக்குழு) கூட்டத்தில் இந்த விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர் சங்கங்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தன. இதில் முக்கிய பிரச்சினை CGHS-ன் தற்போதைய நிலை மற்றும் அதில் தேவையான முன்னேற்றம் பற்றியது.
CGHS -இல் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்ன?
Wellness Centers: புதிய நல்வாழ்வு மையங்களுக்கான தேவை
புனே, பெங்களூரு, பாலசூர், நாக்பூர், சென்னை, புதுச்சேரி மற்றும் ஜம்மு போன்ற நகரங்களில் புதிய CGHS நல்வாழ்வு மையங்களைத் திறக்க கோரிக்கை எழுந்துள்ளது.
New polyclinic in Jammu: ஜம்முவில் புதிய பலதுறை மருத்துவமனை
ஜம்முவில் ஒரு நவீன பலதுறை மருத்துவமனையைத் திறக்க ஒரு திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு சோதனை ஆய்வக வசதியும் இருக்கும்.
Staff Shortage: மிகப்பெரிய பணியாளர் பற்றாக்குறை விரைவில் சரிசெய்யப்படும்
நல்வாழ்வு மையங்களில் உள்ள பணியாளர்களின் பெரும் பற்றாக்குறையை சமாளிக்க SSC (பணியாளர் தேர்வு ஆணையம்) மூலம் ஆட்சேர்ப்பு செயல்முறை தொடங்கப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
Uninterrupted supply of medicines: மருந்துகளின் தடையற்ற விநியோகம்
அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இப்போது, தேவைக்கேற்ப மட்டுமல்லாமல் பழைய அனுபவங்கள் மற்றும் போக்குகளின் அடிப்படையிலும் இருப்பு பராமரிக்கும் பணிகள் செய்யப்படும்.
Including Private Hospitals in the Panel: குழுவில் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ப்பது குறித்து பரிசீலித்தல்
நல்வாழ்வு மையங்கள் இல்லாத ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் வழங்க CGHS இன் கீழ் தனியார் மருத்துவமனைகளை குழுவில் சேர்ப்பதற்கான திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
Infrastructure: பழைய நல்வாழ்வு மையங்களின் உள்கட்டமைப்பு மேம்படும்
பெங்களூரு, நாக்பூர் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் தற்போதுள்ள CGHS மையங்களின் கட்டிடங்கள் மற்றும் வசதிகள் மேம்படுத்தப்படும்.
Delay in Refund: ரீஃபண்ட் திரும்ப கிடைப்பதில் உள்ள தாமதம் சரி செய்யப்படும்
மெடிகல் ரீயெம்பர்ஸ்மெண்ட் கோரிக்கைகளில் ஏற்படும் தாமதம் குறித்து ஓய்வூதியதாரர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் காலக்கெடுவை மேம்படுத்துவதாக அமைச்சகம் உறுதியளித்தது.
CGHS Beneficiaries: CGHS பயனாளிகளுக்கு இந்த சீர்திருத்தங்கள் ஏன் அவசியம்?
CGHS என்பது மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான ஒரு முக்கியமான சுகாதாரத் திட்டமாகும். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், ஊழியர் பற்றாக்குறை, மருந்து விநியோகத்தில் இடையூறு மற்றும் ரீஃபண்ட் தொகையை திருப்பிச் செலுத்துவதில் தாமதம் போன்ற பிரச்சினைகளால் லட்சக்கணக்கான CGHS பயனாளிகளுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.
Central Government Pensioners: அதிகரிக்கும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை
நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர் அமைப்புகள் CGHS இன் தற்போதைய நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளன. மேலும் முதியவர்ளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், CGHS -இன் திறனை மேம்படுத்துவது காலத்தின் தேவை என்று பரிந்துரைத்துள்ளன.
நிபுணர்கள் கூறுவது என்ன?
மூத்த ஓய்வூதிய நிபுணர்கள் CGHS இன் நோக்கத்தை அதிகரிப்பதும் அதன் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதும் அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். குறிப்பாக வசதிகள் குறைவாக உள்ள சிறிய நகரங்களில், தனியார் மருத்துவமனைகளை CGHS இன் கீழ் இணைப்பது ஒரு பெரிய நிவாரண நடவடிக்கையாக இருக்கும்.
நல்வாழ்வு மையங்களின் விரிவாக்கம், பணியாளர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் மருந்துகள் வழங்கல் போன்ற பிரச்சினைகளில் பணிகள் விரைவாக செய்யப்பட்டால், CGHS உடன் தொடர்புடைய லட்சக்கணக்கான மக்கள் பெரிய நிவாரணத்தைப் பெறலாம். CGHS இல் வரும் மாற்றங்கள் ஓய்வூதியதாரர்களுக்கு புதிய நம்பிக்கைகளைத் தருகின்றன. இந்தத் திட்டங்கள் சரியான நேரத்தில் செயல்படுத்தப்பட்டால், சுகாதாரப் பாதுகாப்பு வேகமாகவும், அணுகக்கூடியதாகவும், நம்பகமானதாகவும் மாறும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ