)
SBI Card News: நவம்பர் முதல், SBI கார்டு பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு திருத்தப்பட்ட கட்டணங்களை விதிக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டணங்கள் நவம்பர் 1, 2025 முதல் பொருந்தும் என SBI கிரெடிட் கார்டு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், SBI கார்டுதாரர்கள், புதுப்பிக்கப்பட்ட கட்டணங்களைப் பற்றி சரியாக தெரிந்துகொண்டு, தேவையற்ற கழிப்புகளையும், குழப்பங்களையும் தவிர்ப்பது நல்லது.
கல்வி கட்டணங்கள்: CRED மற்றும் MobiKwik போன்ற மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் செய்யப்படும் கல்வி கட்டணங்களுக்கு பரிவர்த்தனைத் தொகையில் 1% கட்டணம் பொருந்தும். இருப்பினும், கல்லூரிகள் அல்லது பள்ளிகளுக்கு அவர்களின் வலைத்தளங்கள் அல்லது பாயிண்ட் ஆஃப் சேல்ஸ் (POS) இயந்திரங்களில் கார்டைப் பயன்படுத்தி நேரடியாக பணம் செலுத்தினால், கட்டணம் எதுவும் பொருந்தாது.
வாலட் லோட்: ரூ.1,000 க்கு மேல் உள்ள ஒவ்வொரு வாலட் லோட் பரிவர்த்தனைக்கும் பரிவர்த்தனைத் தொகையில் 1% வசூலிக்கப்படும்.
பல பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகளுக்கு SBI கார்டு வேறு சில கட்டணங்களையும் கொண்டுள்ளது:
- SBI கவுண்டர்களில் ரொக்கமாக செலுத்தும் போது ஒரு பரிவர்த்தனைக்கு ₹250 கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.49,999 வரை ரொக்கமாக செலுத்த அனுமதிக்கப்படுகிறது.
- காசோலை செலுத்தும் போது, ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
- உங்கள் பணம் செலுத்தப்படாவிட்டால், கட்டணத் தொகையில் 2% (குறைந்தபட்சம் ₹500) டிஸ்ஹானர் கட்டணம் பொருந்தும்.
- SBI ATM -கள் மற்றும் பிற டொமஸ்டிக் ATM -களில் ரொக்க முன்பணங்களுக்கு (கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கும்போது), பரிவர்த்தனைத் தொகையில் 2.5% (குறைந்தபட்சம் ரூ.500) கட்டணம் வசூலிக்கப்படும்.
- கார்டை மாற்றுவதற்கு, வாடிக்கையாளர்கள் ரூ.100 முதல் ரூ.250 வரை (கார்டைப் பொறுத்து) கட்டணம் செலுத்த வேண்டும். ஆரம் கார்டுகளுக்கு, கட்டணம் ரூ.1,500.
குறைந்தபட்ச நிலுவைத் தொகை (MAD) உரிய தேதிக்குள் செலுத்தப்படாவிட்டால், ₹1,300 வரை தாமதமாக செலுத்தும் கட்டணங்களும் உள்ளன. மேலும், இரண்டு பில்லிங் சுழற்சிகளுக்கு குறைந்தபட்ச நிலுவைத் தொகை (MAD) உரிய தேதிக்குள் செலுத்தப்படாவிட்டால் ₹100 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் MAD செலுத்தப்படும் வரை இது பொருந்தும்.
மேலும், செப்டம்பர் 1 முதல், சில கார்டுகளுக்கான சில செலவுகளுக்கு வெகுமதி புள்ளிகளைப் பெறுவதை SBI கார்டு நிறுத்தியது. மேலும், ஜூலை 15 முதல் SBI கார்டு எலைட், SBI கார்டு மைல்ஸ் எலைட் மற்றும் SBI கார்டு மைல்ஸ் பிரைம் ஆகியவற்றில் ₹1 கோடிக்கான இலவச விமான விபத்து காப்பீட்டுத் திட்டத்தையும் நிறுத்தியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ