)
Parliament Winter Session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடந்துகொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான பல முக்கிய அறிவிப்புகள் தினம் தினம் வந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்த சில முக்கிய அப்டேட்களும் சமீபத்தில் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம்.
- இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி மோடி அரசாங்கம் தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) அறிமுகப்படுத்தியது.
- மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டமாக UPS உருவாக்கப்பட்டது. இது தற்போதுள்ள தேசிய ஓய்வூதிய முறை (National Pension System) மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் சில தனித்துவமான அம்சங்களை இணைக்கும் ஒரு புதிய திட்டத்தில் சேர உழியர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.
- UPS, பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் (Old Pension Scheme) போலவே ஓய்வு பெறும்போது அரசு ஊழியர்களுக்கு உறுதியான ஓய்வூதியத்திற்கான உத்தரவாதம் அளிக்கிறது.
- ஆனால். இதுவரை UPS மத்திய அரசு ஊழியர்களை ஈர்க்கத் தவறிவிட்டது.
- இதில் ஊழியர்கள் காட்டும் மந்தமான ஆர்வம் காரணமாக, ஊழியர்கள் திட்டத்தில் சேருவதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்தது. முந்தைய காலக்கெடு ஜூன் 30 ஆக இருந்தது.
- தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு சில மாற்றங்களைச் செய்து, மத்திய அரசு ஊழியர்களை அதன் பக்கம் ஈர்க்க முயற்சிக்கும் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.
- சமீபத்தில் மக்களவையில், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கன்வர் சிங் தன்வர் மற்றும் சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோர் நிதி அமைச்சகத்திடம், UPS ஐ மேம்படுத்த அதில் சில மாற்றங்களைக் கொண்டுவரும் திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.
- UPS குறித்த இந்த கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், NPS-இன் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு, NPS-இன் கீழ் ஒரு விருப்பமாக UPS அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
- "பிற ஓய்வூதியத் திட்டங்கள் அல்லது துறைகளுக்கு இதுபோன்ற சலுகைகளை விரிவுபடுத்துவதற்கான எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை," என்று அவர் தெளிவுபடுத்தினார்.
- மக்களவை உறுப்பினர்கள், UPS-இன் கீழ் கூடுதல் சலுகைகளைப் பெற தகுதியுடைய ஓய்வுபெற்ற மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் மொத்த எண்ணிக்கை குறித்தும் அமைச்சரிடம் கேட்டனர்.
- இதற்கு, தகுதி அளவுகோல்களின்படி, UPS-இன் கீழ் கூடுதல் சலுகைகளைப் பெற தகுதியுடைய 25,756 ஓய்வுபெற்ற மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் இருப்பதாக நிதியமைச்சர் கூறினார்.
இதுவரை பெறப்பட்ட மற்றும் செயல்படுத்தப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை நிதியமைச்சர் பகிர்ந்து கொண்டார்
- இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரை பெறப்பட்ட மற்றும் செயல்படுத்தப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை குறித்து கேட்க்கப்பட்டது.
- இதற்கு பதிலாக, ஜூலை 20, 2025 நிலவரப்படி 7,253 கோரிக்கைகள் பெறப்பட்டதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
- இவற்றில், 4,978 க்ளெய்ம்கள் UPS இன் கீழ் சலுகைகளை வழங்குவதற்காக செயல்படுத்தப்பட்டதாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
- Retirement Gratuity and Death Gratuity: UPS இன் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2021 ஆம் ஆண்டின் மத்திய சிவில் சர்வீஸ் (தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிராஜுவிட்டி செலுத்துதல்) விதிகளின் கீழ் ‘ஓய்வூதியக் கிராஜுவிட்டி மற்றும் இறப்பு கிராஜுவிட்டி’யின் பலன் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
- Benefits under the CCS (Pension) Rules: "NPS இன் கீழ் UPS ஐத் தேர்ந்தெடுக்கும் அரசு ஊழியர்கள், அரசு ஊழியர் பணியின் போது இறந்தாலோ அல்லது இயலாமை அல்லது ஊனமுற்றதன் காரணமாக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டாலோ, CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021 அல்லது CCS (அசாதாரண ஓய்வூதியம்) விதிகள், 2023 இன் கீழ் சலுகைகளைப் பெறுவதற்கான விருப்பத்திற்கும் தகுதியுடையவர்கள்." என்று நிதி அமைச்சர் கூறினார்.
- Tax Benefits: "வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ் NPS க்குக் கிடைக்கும் வரிச் சலுகைகளையும் அரசாங்கம் UPS க்கு நீட்டித்துள்ளது," என்று அமைச்சர் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ