Post Office Holiday Tamilnadu : சென்னை, கரூரில் உள்ள போஸ்ட் ஆபீஸ்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. மேம்பட்ட அஞ்சல் தொழில்நுட்ப பயன்பாட்டை அஞ்சல் துறை அறிமுகம் செய்யவுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அடிப்படையில் டிஜிட்டல் முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தில் ஒரு பெரிய முன்னேற்றமாக இது அமைந்துள்ளது. இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் அமைப்பு 22.07.2025 அன்று கரூர் கோட்டத்தில் குளித்தலை தலைமை அஞ்சலகத்தில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. எனவே புதிய மென்பொருள் மாற்றத்தை தடையற்ற முறையிலும், பாதுகாப்பாகவும் செயல்படுத்தும் வகையில் 21.07.2025 அன்று அஞ்சலக சேவைகள் நிறுத்தப்படுகிறது.
அதனால் இந்த அஞ்சல் நிலையத்தில் சேவை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுமாறும், குறுகிய கால சேவை தடையை பொறுத்துகொள்ளுமாறும் அஞ்சல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அனைவருக்கும் சிறந்த, விரைவான டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அஞ்சல்துறை கூறியுள்ளது. இதேபோல், தென் சென்னை கோட்டத்தில் ஆகஸ்ட் 4 அன்று 47 அஞ்சலகங்கள் செயல்படாது
சென்னையில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ள தபால் நிலையங்கள் விவரம் : 1) ஆதம்பாக்கம், 2) அடையாறு, 3) ஆலந்தூர், 4) ஆழ்வார் திருநகர், 5) அசோக் நகர், 6) பெசன்ட் நகர், 7) சென்னை விமான நிலையம், 8) கிண்டி பொறியியல் கல்லூரி, 9) கிண்டி தொழில்பேட்டை, 10 ) கிண்டி வடக்கு, 11) ஐஐடி, 12) ஈஞ்சம்பாக்கம், 13) கே.கே.நகர், 14) காரப்பாக்கம், 15) கோடம்பாக்கம், 16) கோட்டூர்புரம், 17) மடிப்பாக்கம், 18) மடிப்பாக்கம் தெற்கு, 19) மாம்பலம், 20) மீனம்பாக்கம், 21) நந்தம்பாக்கம், 22) நந்தனம், 23) நங்கநல்லூர், 24) நீலாங்கரை, 25) நிலமங்கை நகர், 26) ஒக்கியம் துரைப்பாக்கம், 27) பாலவாக்கம், 28) பழவந்தாங்கல், 29) பெருங்குடி ஆகிய தபால் நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 30) ராஜ் பவன், 31) ராமாபுரம், 32) ஆர்.ஏ.புரம், 33) ராம் நகர், 34) சைதாப்பேட்டை, 35) சாலிகிராமம், 36) சேழிங்கநல்லூர், 37) செயிண்ட் தாமஸ் மவுண்ட், 38) திருவான்மியூர், 39)டிடிடிஐ தரமணி, 40) வடபழனி, 41) வளசரவாக்கம், 42) வால்மீகி நகர், 43) வேளச்சேரி, 44) விருகம்பாக்கம், 45) மேற்கு மாம்பலம், 46) டாக்டர்.அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், 47) நந்தனம் அஞ்சல் வணிக மையம் ஆகிய அஞ்சல் நிலையங்களில் மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், புதிய மென்பொருள் மாற்றத்தை தடையற்ற முறையிலும் பாதுகாப்பாகவும் செயல்படுத்த, சேவைகள் நிறுத்தப்படுகிறது. 04.08.2025 அன்று இந்த தபால் நிலையங்களில் எந்த பொது பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்படாது.
எனவே மேற்கண்ட அஞ்சல் நிலையங்ளில் சேவை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுமாறும், குறுகிய கால சேவை தடையை பொறுத்துக்கொள்ளுமாறும் அஞ்சல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. அனைவருக்கும் சிறந்த, வேகமான, டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அஞ்சல் துறை கூறியுள்ளது.
மேலும் படிக்க | PM Kisan 20வது தவணை எப்போது வருகிறது? மத்திய அரசு கொடுத்த முக்கிய அப்டேட்
மேலும் படிக்க | PM Kisan 20வது தவணை இந்த நாளில் வருகிறது: ஆனால், இதை செய்யவில்லை என்றால் பணம் வராது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









