GST Rates Change: வரும் செப். 22ஆம் தேதி முதல் ஜிஎஸ்டியில் மாற்றம் வர இருக்கும் நிலையில், நுகர்வோர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தாவிட்டால் நஷ்டம் ஏற்படும்.

GST Rates Change: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 12% மற்றும் 28% வரி அடுக்குகள் நீக்கப்பட்டு, இனி 5% மற்றும் 18% வரி அடுக்குகள் மட்டுமே அமலில் இருக்கும் என இம்மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால், வரும் செப்டம்பர் 22ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் ஜிஎஸ்டியில் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது.
ஜிஎஸ்டியில் ஏற்படும் இந்த மாற்றத்தால் வரும் செப். 22ஆம் தேதியில் நாடு முழுவதும் நீங்கள் வாங்கும் பொருள்களுக்கான பில்களில் சிறு வித்தியாசங்கள் இருக்கும் எனலாம். மேலும், ஜிஎஸ்டியில் ஏற்பட்டுள்ள மாற்றம் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டாலும், நுகர்வோர் இந்நேரத்தில் சிறு எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். அதாவது பேக் செய்யப்பட்ட பொருள்களை நீங்கள் வாங்கும்போது நீங்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.
புதிய ஜிஎஸ்டி விதியின்படி, உற்பத்தியாளர்கள், உற்பத்தி பொருள்களை பேக் செய்பவர்கள், அதை ஏற்றுமதி செய்பவர்கள் செப்டம்பர் 22ஆம் தேதிக்கு முன் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களில் புதிய விலையை அச்சிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, பழைய அதிகபட்ச சில்லறை விலை (MRP) அதில் அச்சிடப்பட்டிருக்கும், அது இப்போது மறைக்கப்பட்டிருக்காது. அதே நேரத்தில் புதிய அதிகபட்ச சில்லறை விலையும் (MRP) அந்த பொருள்களில் இருக்கும். அதாவது, ஒரே பொருளுக்கு இரண்டு வெவ்வேறு விலைகளை நீங்கள் பார்ப்பீர்கள். அதில் எது பழையது, எது புதியது என்பதை நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
உதாரணத்திற்கு, வரும் செப். 22க்கு பின் நீங்கள் பலசரக்கு கடையில் இருந்து ஒரு சோப் வாங்குகிறீர்கள் என்றால், அதன் பழைய MRP 50 ரூபாய் என வைத்துக்கொள்ளுங்கள். ஜிஎஸ்டி வரி மாற்றத்திற்கு பின் தற்போதைய MRP 48 ரூபாய் என வைத்துக்கொள்ளுங்கள். விலை குறைந்தது தெரியாமல் பலசரக்கு கடைக்காரர் அந்த சோப்புக்கு 50 ரூபாய் வசூலிக்க அதிக வாய்ப்புள்ளது.
எனவே நீங்கள் அதில் கவனத்துடன் இருக்க வேண்டும். அதில் இரண்டு விலையும் குறிப்பிடப்பட்டிருக்கும், புதிய விலையை கவனித்து அதற்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும். முன்னர், நிறுவனங்கள் தங்களின் MRPs விலை மாற்றங்களை இரண்டு நாளிதழ்களில் அச்சிட்டிருக்க வேண்டும், ஆனால் தற்போது மாற்றப்பட்ட MRP விலையை டீலர்கள், சில்லறை விற்பனையாளர்கள், சட்ட அளவியல் அதிகாரிகள் ஆகியோருக்கு தகவல் அனுப்ப வேண்டும் என விதி வந்துள்ளது.
நுகர்வோர் ஜிஎஸ்டி மாற்றத்திற்கு பின், பொருள்களை வாங்கும்போது இந்த நான்கு விஷயங்களை கவனிக்க வேண்டும். எபபோதும் நீங்கள் வாங்கும் பொருள்களின் பின் இருக்கும் புதிய விலைப்பட்டியலை கவனிக்க வேண்டும். பொருள்களில் அச்சிடப்பட்டிருக்கும் விலைகளும், பில்களில் அச்சிடப்பட்டிருக்கும் விலைகளும் ஒன்றாக இருக்கிறதா என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள். அதேபோல், சின்ன சின்ன கடைகளில் பில் இல்லாமல் பொருள்கள் வாங்கும் போது கூடுதல் கவனம் தேவை. உங்களிடம் அதிகமாக பணம் கேட்டால் சட்ட அளவியல் அதிகாரிகளிசம் புகார் அளியுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ