)
DA Hike And Diwali Bonus: தீபாவளி காலகட்டம் என்பது எப்போதுமே அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், தனியார் ஊழியர்கள் அனைவருக்குமே குதூகலமான காலகட்டம் எனலாம். ஏனென்றால், ஊழியர்கள் தங்களின் சம்பளத்துடன் தீபாவளி போனஸையும் பெறுவார்கள். இது பணடிகை காலங்களில் நிதி சிக்கல் தணிக்கும்.
இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை பொருத்தவரை தீபாவளிக்கு போனஸ் மட்டுமின்றி அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணமும் அறிவிக்கப்படுவதால் கூடுதல் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். கடந்த அக்டோபர் 1ஆம் தேதி மத்திய அரசின் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி, அகவிலைப்படி நிவாரணம் 3% ஆக உயர்த்தப்பட்டது. இதனால் அவர்களின் அகவிலைப்படி 55%இல் இருந்து 58% ஆக அதிகரித்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பீகார், ராஜஸ்தான், அருணாச்சலப் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, உத்தர பிரதேசம், அஸ்ஸாம் என பாஜக மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளும் தங்களின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அதற்கான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது உத்தரகாண்ட் மாநில அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்தப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேற்று மாலை இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளார். ஏற்கெனவே, உத்தரகாண்ட் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தியபோது, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றிய ஊழியர்கள் தங்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்ததனர். அதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
உத்தரகாண்டு போக்குவரத்து துறை அதன் வழக்கமான ஊழியர்களுக்கு 6,908 ரூபாயை போனஸாக வழங்கும். சிறப்பு பிரிவினர், ஒப்பந்த ஊழியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோர் 1,184 ரூபாய் போனஸாக பெறுவார்கள். இந்த போனஸை பெறுவதற்கு சில கட்டுப்பாடுகளும் உள்ளதாக கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுமார் 2 ஆயிரம் ஓட்டுநர், நடத்துநர் இருக்கின்றனர். அவர்களுக்கு 6,908 ரூபாய் போனஸ் கிடைக்கும். சிறப்பு பிரிவு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இந்த போனஸை பெற வேண்டுமென்றால், 2024-25 ஆண்டில் சமதள வழிதடத்தில் 56 ஆயிரம் கிலோ மீட்டர், மலைவழிப்பாதையில் 36 ஆயிரம் கிலோ மீட்டர், இரண்டையும் சேர்ந்து 46 ஆயிரம் கிலோமீட்டருக்கு பயணித்திருக்க வேண்டும். தொழில்நுட்ப ஊழியர்கள் 240 நாள்கள் பணியாற்றியிருக்க வேண்டும். லஞ்சம், விபத்து போன்ற வழக்கு சம்பவங்கள் இல்லாதவர்களுக்கு மட்டுமே போனஸ் வழங்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ