)
DA Hike Latest News: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) அதிகரிப்பு குறித்து இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று இந்தியா டுடே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒப்புதல் அளிக்கப்பட்டால், புதிய அகவிலைப்படி ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். இந்த நடவடிக்கை கிட்டத்தட்ட ஒரு கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி என்பது விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தால் ஏற்படும் அன்றாட செலவுகளை நிர்வகிக்க மக்களுக்கு உதவுவதற்காக சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் சேர்க்கப்படும் கூடுதல் கொடுப்பனவாகும்.
ஜனவரி, ஜூலை என ஆண்டுக்கு 2 முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை அதிகரிக்கப்படுகின்றன. ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வின் அறிவிப்பு பிப்ரவரி-மார்ச் மாதங்களிலும், ஜூலை மாத அகவிலைப்படி உயர்வின் அறிவிப்பு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களிலும் வெளியிடப்படுகின்றது. அகவிலைப்படி ஊழியர்களுக்கு பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்ய உதவுகிறது.
- தொழிலாளர் பணியகத்தால் மாதந்தோறும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு (CPI-IW) வெளியிடப்படுகிறது.
- இதன் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு (DA) தீர்மானிக்கப்படுகின்றது.
- முந்தைய 12 மாதங்களுக்கான CPI-IW தரவை சராசரியாகக் கொண்டும், 7வது ஊதியக் குழுவின் கீழ் ஒரு குறிப்பிட்ட சூத்திரத்தைப் பயன்படுத்தியும் மத்திய அரசு டிஏ DA உயர்வைக் கணக்கிடுகிறது.
அகவிலைப்படி (%) = [(CPI-IW -இன் 12 மாத சராசரி – 261.42) ÷ 261.42] × 100.
261.42 என்ற எண்ணிக்கை 7வது ஊதியக் குழுவின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை CPI-IW சராசரி (2016 அடிப்படை ஆண்டு) ஆகும்.
ஜனவரி முதல் ஜூன் 2025 வரையிலான AICPI குறியீட்டு தரவு, இந்த முறை அகவிலைப்படியில் 3% அதிகரிப்பு இருக்கும் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. தற்போது, மத்திய அரசு ஊழியர்கள் 55% என்ற விகிதத்தில் அகவிலைப்படியைப் பெறுகின்றனர். 3% அதிகரிப்பிற்குப் பிறகு, அது 58% ஆக அதிகரிக்கும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% அதிகரித்தால் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்? கீழே இதற்கான கணக்கீட்டை புரிந்துகொள்ளலாம். வெவ்வேறு அடிப்படை ஊதியங்களில் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும் என இங்கே காணலாம்.
|
பணியாளர் லெவல் |
தற்போதைய அடிப்படை சம்பளம் | தற்போதைய DA (55%) | புதிய DA (58%) | மாதாந்திர சலுகை | ஆண்டு சலுகை |
| லெவல் 1 (குறைந்தபட்சம்) | ₹18,000 | ₹9,900 | ₹10,440 | ₹540 | ₹6,480 |
| லெவல் 3 | ₹21,700 | ₹11,935 | ₹12,586 | ₹651 | ₹7,812 |
| லெவல் 6 | ₹35,400 | ₹19,470 | ₹20,532 | ₹1,062 | ₹12,744 |
| லெவல் 7 | ₹44,900 | ₹24,695 | ₹26,042 | ₹1,347 | ₹16,164 |
| அதிகபட்சம் (அமைச்சரவை செயலாளர்) | ₹2,50,000 | ₹1,37,500 | ₹1,45,000 | ₹7,500 | ₹90,000 |
இந்த அட்டவணையின் மூலம், அனைத்து லெவல்களிலும் ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வு கிடைக்கும் என்பது தெளிவாகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ