)
DA Hike Latest News: தீபாவளிக்கு முன்னதாக அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பரிசு கிடைத்துள்ளது. மத்திய அரசு அவர்களின் அகவிலைப்படியை 3% அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அதிகரிப்பை அரசு ஒருமனதாக அறிவித்தது. இதை தொடர்ந்து அகவிலைப்படி இப்போது 55% இலிருந்து 58% ஆக அதிகரித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி அதிகரிப்புக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், இன்று அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படியில் (DA) 3 சதவீத உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஜூலை 1 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு நடைமுறைக்கு வரும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் (DR) ஆகியவற்றின் கூடுதல் தவணையை 01.07.2024 முதல் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது விலைவாசி உயர்வை சமாளிக்கவும், பண்டிகை கால செலவுகளை ஈடுசெய்யவும் உதவுகிறது.
2025 ஆம் ஆண்டில் இது இரண்டாவது அகவிலைப்படி உயர்வாகும். இதற்கு முன்னர் மார்ச் மாதத்தில் டிஏ 2 சதவீதம் உயர்த்தப்பட்டபோது அகவிலைப்படி 53 சதவீதத்திலிருந்து அடிப்படை சம்பளத்தில் 55 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது அகவிலைப்படி 3% அதிகரித்து மொத்த அகவிலைப்படி 58% ஆக அதிகரித்துள்ளது. இது பணவீக்கத்தை சமாளிக்க அரசாங்கம் தொடர்ந்து எடுக்கும் முயற்சிகளை பிரதிபலிக்கிறது.
- டிஏ மற்றும் டிஆர் திருத்தங்களால் கருவூலத்தில் ஏற்படும் வருடாந்திர நிதி தாக்கம் ரூ.9,448.35 கோடியாக இருக்கும் என்று அரசு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
- இந்த உயர்வு சுமார் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும்.
ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் ஆண்டுதோறும் இரண்டு முறை செயல்படுத்தப்படும் இந்த டிஏ/டிஆர் உயர்வுகள், தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்பட்ட அகில இந்திய தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI-IW) பயன்படுத்தி தீர்மானிக்கப்படுகின்றன.
இன்று அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்டாலும், டிஏ உயர்வுக்கான நன்மைகள் ஜூலை முதல் கிடைக்கும். அதாவது ஜூலை முதல் 3% அகவிலைப்படி உயர்வுக்கான அரியர் தொகை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். பணவீக்கத்தில் ஏற்படும் நிதி நெருக்கடியை தவிர்க்க இந்த உயர்வு மிக உதவியாக இருக்கும்.
அகவிலைப்படி 3% அதிகரித்ததை தொடர்ந்து பல்வேறு லெவல்களில் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.
|
பணியாளர் லெவல் |
தற்போதைய அடிப்படை சம்பளம் | தற்போதைய DA (55%) | புதிய DA (58%) | மாதாந்திர சலுகை | ஆண்டு சலுகை |
| லெவல் 1 (குறைந்தபட்சம்) | ₹18,000 | ₹9,900 | ₹10,440 | ₹540 | ₹6,480 |
| லெவல் 3 | ₹21,700 | ₹11,935 | ₹12,586 | ₹651 | ₹7,812 |
| லெவல் 6 | ₹35,400 | ₹19,470 | ₹20,532 | ₹1,062 | ₹12,744 |
| லெவல் 7 | ₹44,900 | ₹24,695 | ₹26,042 | ₹1,347 | ₹16,164 |
| அதிகபட்சம் (அமைச்சரவை செயலாளர்) | ₹2,50,000 | ₹1,37,500 | ₹1,45,000 | ₹7,500 | ₹90,000 |
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ