)
DA Hike, 7th Pay Commission: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அக்டோபர் மாதம் 1ஆம் தேதியில் இருந்தே தொடர்ந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. தீபாவளியை முன்னிட்டு போனஸ், அகவிலைப்படி உயர்வு ஆகிய அறிவிப்புகள் வெளியாகின. தற்போது 8வது ஊதியக்குழு குறித்தும் அப்டேட்கள் வந்துள்ளன. இதனால் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் குஷியில் இருக்கிறார்கள் எனலாம்.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி, அகவிலைப்படி நிவாரணம் ஆகியவற்றை 3 சதவீதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, 55% ஆக இருந்த அகவிலைப்படி, இந்த அறிவிப்புக்கு பின் 58% ஆக அதிகரித்துவிட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை மாதம் முதல் கணக்கிடப்பட்டு, அரியர் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பீகார், ராஜஸ்தான், அருணாச்சலப் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, உத்தர பிரதேசம், அஸ்ஸாம், உத்தரகாண்ட், ஆந்திரா, ஹரியானா உள்ளிட்ட மாநில அரசுகள் தங்களின் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணத்தை அதிகரித்து உத்தரவிட்டன. மத்திய அரசின் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களை போன்று மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களும் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், கோவா அரசும் அதன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3% உயர்த்தப்படும் என நேற்று (அக். 28) அறிவிக்கப்ட்டது. அக்டோபர் 6 தேதியிட்ட மத்திய அரசின் குறிப்பாணையை ஏற்று கோவா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஊழியர்களின் சம்பளத்தில் அகவிலைப்படி 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஜூலை 1ஆம் தேதியில் இருந்து கணக்கிடப்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 30 தேதியிட்ட உத்தரவின்படி, ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் மானிய உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை முதல் அக்டோபர் வரையிலான நிலுவைத் தொகையுடன் சேர்த்து, இந்த உயர்த்தப்பட்ட சம்பளத்தை ஊழியர்கள் இந்த நவம்பர் மாதத்தில் இருந்து பெறுவார்கள் என்று கோவா நிதித்துறை துணைச் செயலாளர் நரேஷ் கவுட் தெரிவித்துள்ளார்,
இது ஒருபுறம் இருக்க, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான 8வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை நேற்று (அக். 28) ஒப்புதல் அளித்தது. 8வது ஊதியக்குழுவின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய், உறுப்பினராக பேராசிரியர் புலக் கோஷ், உறுப்பினர்-செயலாளராக பங்கஜ் ஜெயின் ஆகியோர் கடந்த ஜனவரியில் மத்திய அரசு அறிவித்தது. இந்த குழு ஏறத்தாழ 50 லட்ச மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் எனலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ