அடுத்த அகவிலைப்படி உயர்வும் அதிரடியாய் இருக்கும்: AICPI-IW தரவுகள் தந்த குட் நியூஸ்

DA Hike Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி! ஜூலை மாத அகவிலைப்படி உயர்வை தீர்மானிக்கும் ஆரம்பகட்ட தரவுகள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 3, 2026, 10:12 AM IST
  • ஜூலை 2026 -க்கான அகவிலைப்படி திருத்தத்திற்கு அடிப்படையாக அமையவுள்ள துவக்க நிலை தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
  • இதற்கு முன் AICPI-IW தரவுகள் எந்த நிலையில் இருந்தன?
  • AICPI-IW தரவு டிஏ உயர்வை எவ்வாறு பாதிக்கும்?
அடுத்த அகவிலைப்படி உயர்வும் அதிரடியாய் இருக்கும்: AICPI-IW தரவுகள் தந்த குட் நியூஸ்

Central Government Employees DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி கிடைத்துள்ளது. ஜனவரி 2026 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில், ஜூலை 2026 -க்கான அகவிலைப்படி திருத்தத்திற்கு அடிப்படையாக அமையவுள்ள துவக்க நிலை தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Add Zee News as a Preferred Source

AICPI-IW தரவுகள் கூறுவது என்ன?

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் பணியகம், ஜனவரி 2026 மாதத்திற்கான அகில இந்திய தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI-IW) வெளியிட்டுள்ளது. இந்த குறியீட்டில் 0.4 புள்ளிகள் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி முறையே மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வுகளைக் கணக்கிட இந்தத் தரவு பயன்படுத்தப்படுகிறது.

இதற்கு முன் AICPI-IW தரவுகள் எந்த நிலையில் இருந்தன?

- ஜனவரி மாதத்தில், AICPI-IW தரவுகள் 148.6 என்ற நிலையை எட்டியுள்ளன.
- டிசம்பர் 2025 இல் இது 148.2 ஆக இருந்தது.
- முன்னதாக, இந்த பணவீக்கக் குறியீடு நவம்பரில் 0.5 புள்ளி அதிகரித்தது.
- அக்டோபரில் இது 0.4 புள்ளி அதிகரிப்பைக் கண்டது.

"ஜனவரி 2026க்கான அகில இந்திய CPI-IW 0.4 புள்ளிகள் அதிகரித்து 148.6 புள்ளிகளாக (நூற்று நாற்பத்தெட்டு புள்ளி ஆறு) உள்ளது" என்று தொழிலாளர் பணியகம் பிப்ரவரி 27, 2026 தேதியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. ஜனவரி 2026க்கான ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 3.77% ஆக இருந்தது. இந்த தரவு ஜனவரி 2025 இல் 3.10% ஆக இருந்தது என்று அந்த வெளியீடு தெரிவித்துள்ளது.

DA Hike: AICPI-IW தரவு டிஏ உயர்வை எவ்வாறு பாதிக்கும்?

ஜனவரி 2026 AICPI-IW தரவு, ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரவுள்ள டிஏ உயர்வில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 7வது ஊதியக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையில் உள்ள விதிமுறையின்படி, ஜனவரி 2026 மற்றும் அதற்குப் பிந்தைய மாதங்களுக்கான AICPI-IW தரவு, ஜூலை 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் DA உயர்வை முடிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும். இருப்பினும், இரண்டு காரணிகள் முற்றிலும் மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்:

- முதலாவதாக, 8வது ஊதியக்குழு சம்பளக் குழு சமீபத்தில் செயல்படத் தொடங்கியது. ஊதியக் குழு தனது பரிந்துரையைச் சமர்ப்பிக்க நீண்ட நேரம் எடுக்கும் என்றாலும், 8வது ஊதுயக்குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் வரை அரசாங்கம் ஒரு வருடத்தில் இரண்டு முறை DA உயர்வைத் தொடர்ந்து அறிவிக்குமா என்பது குறித்து தற்போது தெளிவு இல்லை.

- இரண்டாவதாக, 8வது ஊதியக்குழு தனது பரிந்துரைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க 18 மாதங்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இடைக்கால நிவாரணமாக 50% அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் கோரியுள்ளனர். அகவிலைப்படியுடன் அடிப்படை சம்பளத்தை இணைக்க வேண்டும் என்ற இந்தக் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், ஜனவரி 2026 மற்றும் அடுத்தடுத்த மாதங்களின் AICPI-IW தரவுகளின் அடிப்படையில் ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

Dearness Allowance: ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வு

ஜனவரி மாத டிஏ உயர்வுக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஜூலை 2025 முதல் டிசம்பர் 2025 வரையிலான AICPI-IW தரவுகளின் அடிப்படையில் ஜனவரியில் அகவிலைப்படி 2% அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது. இது மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவற்றை 60% ஆதிகரிக்கும்.

7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஆண்டுக்கு 2 முறை, முறையே அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அளிக்கப்படுகின்றன. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் டிஏ உயர்வு அமலுக்கு வருகின்றது. எனினும், இதற்கான அறிவிப்புகள் சற்று தாமதகமாக வெளியாகின்றன. 

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: அரசு ஊழியர்களுக்கு அதிகரிக்கும் குடும்ப அலகு, எகிறப்போகும் அடிப்படை சம்பளம்வ்

மேலும் படிக்க | தங்கம் விலையில் நடக்கப்போகும் தலைகீழ் மாற்றம் - நகைப்பிரியர்களுக்கான முக்கிய தகவல்வ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJவ்

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News