)
DA Hike Latest News: சுமார் 1 கோடி ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் எதிர்பாத்து காத்திருந்த முக்கிய செய்தி கிடைத்துவிட்டது. மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கூடிய விரைவில் அதிகரிக்கவுள்ளது. இது ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA Hike பற்றி வந்த முக்கிய அப்டேட்
- மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி குறித்து ஒரு பெரிய புதுப்பிப்பு வந்துள்ளது.
- ஜூலை-டிசம்பர் மாதத்திற்கான அகவிலைப்படி தீபாவளியை ஒட்டி அறிவிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- அதாவது, இந்த ஆண்டுக்கான தீபாவளி பரிசு பற்றிய அறிகுறிகள் இப்போதே தெரியத்தொடங்கியுள்ளன.
- ஜூலை 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அகவிலைப்படி எப்போது அதிகரிக்கும்?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தீபாவளிக்கு முன் நல்ல செய்தியைப் பெறக்கூடும். ஜூலை-டிசம்பர் 2025க்கான அகவிலைப்படி உயர்வு தீபாவளிக்கு முன் அறிவிக்கப்படலாம். 7வது ஊதியக் குழுவின் கீழ் (7th Pay Commission), மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி திருத்தப்படுகின்றது. இது நிலையான சூத்திரம் மற்றும் பணவீக்க விகிதத்தின் படி கணக்கிடப்படுகிறது.
Dearness Allowance: அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்
அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், இந்த முறை அகவிலைப்படியில் 3 சதவீதம் அதிகரிப்பு இருக்கலாம் என்பதை கணிக்க முடிகின்றது.
ஜூலை 2025 முதல் அகவிலைபடி 3% அதிகரித்தால், மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக அதிகரிக்கும். முன்னதாக ஜனவரி 2025 இல், அரசாங்கம் அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தியது. இதன் காரணமாக மொத்த அகவிலைப்படி 53 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயர்ந்தது.
CPI-IW தரவுகள் கூறுவது என்ன?
- தொழிலாளர் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, ஜூன் 2025 இன் CPI-IW 145 ஆக இருந்தது.
- ஜூலை 2024 முதல் ஜூன் 2025 வரையிலான 12 மாதங்களுக்கான சராசரி குறியீடு 143.6 ஆகும்.
- இவற்றின் அடிப்படையில், இந்த முறை அகவிலைப்படியில் 3 சதவீத உயர்வு அறிவிக்கப்படும் என்பது உறுதி.
Salary Hike: டிஏ 3% அதிகரித்தால், ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
அகவிலைப்படி அதிகரிப்பதன் தாக்கம் சம்பள உயர்வில் நேரடியாக காணப்படும். ஊழியர்களின் மாத சம்பளத்தில் பெரிய அதிகரிப்பு இருக்கும். ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும் என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். ரூ.40,000 அடிப்படை சம்பளம் கொண்ட ஊழியருக்கான சம்பள உயர்வு கணக்கீட்டை இங்கே காணலாம்.
அடிப்படை ஊதியம் - ரூ.40,000
அகவிலைப்படி (55%) - ரூ.22,000
மொத்த ஊதியம் - ரூ.62,000
புதிய அகவிலைப்படி (58%) - ரூ.23,200
மொத்த ஊதியம் - ரூ.63,200
அகவிலைப்படி அதிகரிப்பால் ஏற்படும் ஊதிய உயர்வு - (ரூ.63,200-ரூ.62,000)= மாதத்திற்கு ரூ.1,200
அகவிலைப்படி அதிகரிப்பால், பயணப்படி மற்றும் வீட்டு வாடகைப்படியும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ