)
DA Hike Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. ஜூலை 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய பேச்சுகள் வேகம் பிடித்துள்ள இந்த வேளையில், ஜனவரி 2026 -க்கான அகவிலைப்படி உயர்வு குறித்த குறிப்புகள் வரத் தொடங்கியுள்ளன.
ஜூலை 2025க்கான அகவிலைப்படி உயர்வு 3 சதவீதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக அதிகரிக்கும். இந்த மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில் அரசாங்கம் இதற்கான அறிவிப்பை வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது. இது பண்டிகை காலத்தில் ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.
மறுபுறம், ஜனவரி 2026 முதல் அமலுக்கு வர வேண்டிய ஆகவிலைப்படி உயர்வுக்கான குறிப்புகள் வரத் தொடங்கியுள்ளன. ஆனால், ஜனவரி 2026 முதல் 8வது ஊதியக்குழு அமலுக்கு வர வேண்டும். அப்படிப்பட்ட நிலையில், ஜனவரி 2026 -க்கான அகவிலைப்படி உயர்வு எப்படி கணக்கிடப்படும்? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
8வது உதியக்குழுவில் அகவிலைப்படி கணக்கீட்டில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் கருதுகிறார்கள். அந்த நிலையில், வழக்கம் போல ஜூலை 2025 முதல் டிசம்பர் 2025 வரையிலான AICPI தரவுகளின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வு கணக்கிடப்படும்.
எனினும், புதிய ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன் அகவிலைபப்டி பூஜ்ஜியம் ஆக்கப்படும். அதுவரை உள்ள அகவிலைப்படி தொகை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும். ஆனால், 8வது ஊதியக்குழுவின் செயல்முறையில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக அது 2026 ஆம் ஆண்டின் மத்தியில் அல்லது 2027 ஆம் ஆண்டு தொடக்கத்தில்தான் அமலுக்கு வரும் என கூறப்படுகின்றது. அதுவரை வழக்கம் போல அகவிலைப்படி உயர்வுகள் நடக்கும் என்றும், 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன், ஜனவரி முதலான அகவிலைப்படி உயர்வுகள் தனியாக கணக்கிடப்பட்டு அவை பூஜ்ஜியத்துடன் சேர்கப்படும். ஜனவரி வரை இருந்த அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும் என கூறப்படுகின்றது.
உதாரணமாக,
- ஜூலை 2025 -க்கான டிஏ உயர்வு 3% என்றும், ஜூலையில் மொத்த அகவிலைப்படி 58% ஆக அதிகரிக்கிறது என்றும் வைத்துக்கொள்வோம்.
- ஜனவரி 2025, ஜூலை 2026, ஜனவரி 2027 ஆகிய 3 முறையும் டிஏ 3% அதிகரித்து ஜனவரியில் மொத்த அகவிலைப்படி 67% ஆக உள்ளது என வைத்துக்கொள்வோம்.
- 8வது ஊதியக்குழு அமலுக்கு வரும்போது ஜனவரியில் இருந்த 62% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்பட்டு, மீதமுள்ள 5% அகவிலைப்படியிலிருந்து கணக்கீடு தொடரும்.
- எனினும், இது நிபுணர்களின் கணிப்புதான். அரசாங்கம் இன்னும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
இதற்கிடையில், தொழிலாளர் பணியகம் ஜூலை 2025க்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (CPI-IW) ஆகஸ்ட் 29, 2025 அன்று வெளியிட்டது. ஜூலை மாதத்திற்கான குறியீடு 1.5 புள்ளிகள் அதிகரித்து 146.5 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை ஜனவரி 2026 முதல் செலுத்த வேண்டிய அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை நிர்ணயிக்கும் செயல்முறையின் தொடக்கமாகும். அகவிலைப்படியின் இறுதி விகிதம் அடுத்த 5 மாதங்களுக்கான CPI-IW ஐப் பொறுத்தது.
தற்போது, ஜூலை 2025 வரையிலான கணக்கீடுகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி / அகவிலை நிவாரண விகிதம் 58% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போதைய விகிதத்தை விட 3% அதிகம். விதியின்படி, இந்த அதிகரிப்பு செப்டம்பர் 2025 இல் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வாய்ப்புள்ளது. இதன் பிறகு, நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையால் அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியிடப்படும்.
ஜனவரி 2026 ஆம் ஆண்டின் அகவிலைப்படி விகிதம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இது 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுடன் நேரடியாக தொடர்புடையது. புதிய ஊதிய விகிதம் அமல்படுத்தப்பட்ட பிறகு, ஜனவரி 2026 முதல் அகவிலைப்படி விகிதம் பூஜ்ஜியத்திற்கு ரீசெட் செய்யப்படும். ஆகையால், ஊழியர் அமைப்புகள் மற்றும் நிபுணர்கள் ஏற்கனவே வரவிருக்கும் மாதங்களின் குறியீடுகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
தற்போதைய பணவீக்க வேகம் தொடர்ந்தால், ஜனவரி 2026 க்குள், அகவிலைப்படி விகிதத்தில் மேலும் 3 முதல் 4% அதிகரிப்பு சாத்தியமாகும். 8வது ஊதியக் குழுவில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான அடிப்படையாக இந்த விகிதம் கருதப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ