)
DA Hike Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு. நாட்டில் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது, தீபாவளிக்கு முன் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலைப்படி நிவாரணம் (DR) அதிகரிப்பு குறித்த அறிவிப்பை மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இதை பற்றிய சில அப்டேட்களை இந்த பதிவில் காணலாம்.
மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியை அதிகரிக்கிறது. இந்த ஆண்டின் இரண்டாவது டிஏ உயர்வு தீபாவளிக்கு முன் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய புதுப்பிப்பின்படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி, விரைவான முடிவை எடுக்க வலியுறுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் விலைவாசியை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் அளிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி திருத்தப்படுகிறது. பொதுவாக, ஜனவரி மாத அகவிலைப்படி அதிகரிப்பு மார்ச் மாதத்திலும், ஜூலை மாத அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களிலும் அறிவிக்கப்படுகின்றன.
இப்போது ஜூலை 2025 -க்கான அகவிலைப்படி உயர்வுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பு எப்போது வந்தாலும், ஜூலை 1 முதல் இதன் நன்மைகளுக்கான அரியர் தொகை வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் தீபாவளிக்கு முன் அரசாங்கத்திடமிருந்து ஒரு முக்கிய அறிவிப்பை எதிர்பார்க்கிறார்கள்.
நிதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், மத்திய ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் DA/DR தவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் இது வழக்கமாக செப்டம்பர் கடைசி வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மூன்று மாத நிலுவைத் தொகை அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாமதம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே விரக்தியை ஏற்படுத்துவதாகவும் கடிதத்தில் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.
இது குறித்து அரசாங்கத்தால் எந்த அதிகாரப்பூர்வ புதுப்பிப்பும் வெளியிடப்படவில்லை என்றாலும், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 3% அதிகரிக்கப்படலாம் என்று பல அறிக்கைகள் கணித்துள்ளன. இது நடந்தால், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தோராயமாக 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். ஜனவரி முதல், DA மற்றும் DR 2% அதிகரித்து, 53% லிருந்து 55% ஆக அதிகரிக்கப்பட்டது. 3% புதிய அதிகரிப்பு இருந்தால், அகவிலைப்படி 58% ஆக அதிகரிக்கும்.
- இந்த முறை ஊழியர்களின் அகவிலைப்படி 3% அதிகரித்து, மொத்த அகவிலைப்படி 58% வரை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றத்திற்கு வழிவகுக்கும்.
- இதற்கான கணக்கீடு எளிதானது. ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.
- தொடக்க நிலை ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000.
- இதுவரை அவர்களுக்கு 55% என்ற விகிதத்தில் ரூ.9,900 அகவிலைப்படி கிடைத்தது.
- அகவிலைப்படி 3% அதிகரித்தால், அது 58% என்ற விகிதத்தில் கணக்கிடப்படும்.
- அந்த நிலையில், மாதத்திற்கு ரூ.540 நேரடி அதிகரிப்பு இருக்கும.
- இதனால் ஊழியர்களின் அகவிலைப்படி ரூ.10,440 ஆக அதிகரிக்கும்.
- அதன்படி, அவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6480 கூடுதல் பலன் கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ