8th Pay Commission DA Hike: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது முக்கியமான நேரம். ஜனவரி மாதத்தில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். டிசம்பர் 2025-க்கான CPI-IW தரவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அகவிலைப்படி (DA) குறைந்தபட்சம் 60 சதவீதமாக உயரும் என்பது தெளிவாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 2026-ல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், டிஏ உயர்வு ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும். மேலும் ஜனவரி முதலான நிலுவைத் தொகையும் வழங்கப்படும்.
டிசம்பரில் மாறாமல் இருந்த AICPI-IW
டிசம்பர் 2025-ல் AICPI-IW (2016 = 100) குறியீடு 148.2 என்ற அளவில் நிலையாக இருந்ததால், 12 மாத சராசரியின் அடிப்படையில் கணக்கிடப்படும் அகவிலைப்படி 60 சதவீதத்தைத் தாண்டியது.
Dearness Allowance: அகவிலைப்படி கணக்கீடு
அகவிலைப்படி என்பது யூகத்தின் அடிப்படையில் அல்லாமல், ஒரு நிலையான சூத்திரத்தின்படி கணக்கிடப்படுகிறது. தொழிலாளர் துறை ஒவ்வொரு மாதமும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டை (CPI-IW) வெளியிடுகிறது. 7வது ஊதியக் குழுவின் கீழ் இந்த குறியீடே அகவிலைப்படியைத் தீர்மானிப்பதற்கான அடிப்படையாக உள்ளது.
டிசம்பர் 2025-க்கான குறியீடு 148.2 ஆக இருந்தது. இது மாறாமல் நவம்பர் மாதத் தரவுகளை ஒத்திருந்தது. இருப்பினும், நவம்பர் மாதத்திலேயே அகவிலைப்படி 59.94 சதவீதத்தை எட்டியிருந்ததால், டிசம்பர் மாதத்திற்கான புள்ளிவிவரம் வெளியானவுடன் அது 60 சதவீதத்தைத் தாண்டியது (60.35%). அரசு எப்போதும் அகவிலைப்படியை முழு எண்ணாகவே கணக்கிடுகிறது. அகையால் இப்போது 60.35% என்பது 60% அகவிலைப்படியாக ரவுண்ட் ஆஃப் செய்யப்படும்.
டிசம்பர் 2025-க்கான CPI-IW புள்ளிவிவரங்கள் கூறுவது என்ன?
டிசம்பர் 2025-ல் CPI-IW:
- 148.2 புள்ளிகளில் நிலையாக இருந்தது
- ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 3.13% ஆக இருந்தது
- பணவீக்கம் டிசம்பர் 2024-ஐ விடக் குறைவாக உள்ளது (அப்போது 3.53% ஆக இருந்தது).
அதாவது, பணவீக்கம் கடுமையாக உயரவில்லை. ஆனால் கடந்த 12 மாதங்களின் சராசரி மிகவும் அதிகமாக இருந்ததால், அகவிலைப்படி 60%-ஐத் தாண்டியது.
ஜூலை 2025 முதல் டிசம்பர் 2025 வரையிலான மாதங்களுக்கான CPI-IW மற்றும் அகவிலைப்படி போக்குகள்:
ஜூலை 2025: CPI-IW 146.5, அகவிலைப்படி 58.52%
ஆகஸ்ட் 2025: CPI-IW 147.1, அகவிலைப்படி 58.94%
செப்டம்பர் 2025: CPI-IW, அகவிலைப்படி 59.31%
அக்டோபர் 2025: CPI-IW, அகவிலைப்படி 59.60%
நவம்பர் 2025: CPI-IW 148.2, அகவிலைப்படி 59.94%
டிசம்பர் 2025: 148.2, அகவிலைப்படி 60.35% (செயல்பாட்டுக்குரியது)
இந்த வகையில் டிசம்பர் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்ட உடனேயே ஜனவரி 2026 -இல் 2% அதிகரிப்பு உறுதி செய்யப்பட்டது.
மார்ச் மாதம் அறிவிப்பு, ஜனவரி முதல் அமல்: காரணம் என்ன?
இது அகவிலைப்படி தொடர்பான அரசின் வழக்கமான நடைமுறையாகும்:
- அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும்.
- ஆனால் அரையாண்டுகளின் இறுதி CPI-IW புள்ளிவிவரங்கள் (டிசம்பர்/ஜூன்) வெளியிடப்பட்ட பிறகுதான் இவை இறுதி செய்யப்படும்.
- அரசு அமைச்சரவைக்கு ஒரு முன்மொழிவைக் கொண்டு வந்து மார்ச்/செப்டம்பரில் அதை அறிவிக்கும்.
DA Hike Timeline: டிஏ உயர்வுக்கான கால அட்டவணை இப்படி இருக்கும்
நடைமுறைக்கு வரும் தேதி: ஜனவரி 1, 2026
அறிவிப்பு: மார்ச் 2026
பயன்: ஜனவரி-பிப்ரவரி மாதங்களுக்கான அரியர் தொகை கிடைக்கும்
Salary Hike, Pension Hike: சம்பள உயர்வு, ஓய்வூதிய உயர்வு எப்படி இருக்கும்?
அகவிலைப்படி உயர்வு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.
ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.50,000 என வைத்துக்கொள்வோம். அவரது சம்பள உயர்வு கணக்கீடு இப்படி இருக்கும்.
அடிப்படைச் சம்பளம் ₹50,000
58% அகவிலைப்படி = ₹29,000
60% அகவிலைப்படி = ₹30,000
இந்த வகையில் அந்த ஊழியருக்கு மாதத்திற்கு ₹1,000 அதிகமாக கிடைக்கும்.
ஓய்வூதியதாரர்களுக்கு:
ஒரு ஓய்வூதியதாரரின் அடிப்படை ஓய்வூதியம் ரூ.50,000 என வைத்துக்கொள்வோம். அவரது சம்பள உயர்வு கணக்கீடு இப்படி இருக்கும்.
- ₹30,000 அடிப்படை ஓய்வூதியம்
- அகவிலைப்படி உயர்வால் மாதத்திற்கு ₹600-₹700 வரை ஓய்வூதியம் அதிகரிக்கக்கூடும்.
இந்தத் தொகை சிறியதாகத் தோன்றலாம், ஆனால் இது லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஒட்டுமொத்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அகவிலைப்படி உயர்வு: முக்கிய அம்சங்கள்
- அகவிலைப்படி CPI-IW-ஐ அடிப்படையாகக் கொண்டது.
- டிசம்பர் 2025 CPI-IW 148.2
- இதன் அடிப்படையில் அகவிலைப்படி 60% இறுதி செய்யப்பட்டும் என நம்பப்படுகின்றது.
- ஜனவரி 1, 2026 முதல் அமல்
- மார்ச் 2026-ல் அரசாங்க அறிவிப்பு வரும்
- ஜனவரி முதல் டிஏ உயர்வு அரியர் தொகை கிடைக்கும்.
இந்த அகவிலைப்படி உயர்வின் முக்கியத்துவம் என்ன?
- 7வது ஊதியக் குழுவின் கீழ் 60% அகவிலைப்படி என்பது உளவியல் ரீதியாக நம்பிக்கை அளிக்கும் நிலை.
- கடைசியாக, 50%-ஐத் தாண்டிய பிறகு வீட்டு வாடகைப்படி (HRA) கட்டமைப்பு மாற்றப்பட்டது.
- 60%-க்கு மேல், எதிர்கால ஊதிய மறுசீரமைப்பு பற்றிய விவாதங்கள் தீவிரமடைகின்றன.
- இதன் பொருள், இந்த அகவிலைப்படி உயர்வானது எதிர்கால சம்பளக் கொள்கைகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் நிலுவைத் தொகை அதிகரிக்கும்.
- ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் அதிகரிக்கும்.
- 8வது ஊதியக் குழு கணக்கீடுகளுக்கு இது அடிப்படைத் தரவுகளாக மாறும்.
மேலும் படிக்க | PM Kisan 22வது தவணை பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வருகிறதா? முக்கிய அப்டேட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









