)
DA Hike Latest News: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் தற்போது அமலில் உள்ள 7வது ஊதியக்குழுவின் கீழ், ஜூலை 2025 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு எப்போது கிடைக்கும் என்ற கேள்வியும் மக்கள் மனதில் உள்ளது. ஜூலை மாத டிஏ உயர்வு எப்போது கிடைக்கும்? ஊதியம் எவ்வளவு உயரும்? இந்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
10 ஆண்டு விதிகளின் படி, ஜனவரி 2026 முதல் 8வது ஊதியக்குழு அமலுக்கு வரவேண்டும் என்பதால், ஜூலை மாத டிஏ உயர்வு 7வது ஊதியக்குழுவின் கடைசி டிஏ உயர்வாக இருக்கும். ஆகையால், இதன் மீதான எதிர்பார்ப்பும் ஆர்வமும் அதிகரித்து வருகின்றது.
ஜனவரி, ஜூலை என ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் அதிகரிக்கப்படுகின்றது. ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வின் அறிவிப்பு பிப்ரவரி-மார்ச் மாதங்களிலும், ஜூலை மாத அகவிலைப்படி உயர்வின் அறிவிப்பு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களிலும் வெளியிடப்படுகின்றது. அகவிலைப்படி ஊழியர்களுக்கு பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்ய உதவுகிறது.
- ஜூலை முதல் அமலுக்கு வரும் அகவிலைப்படி உயர்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதாவது 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.
- இருப்பினும், 2022 ஆம் ஆண்டு ஜூலை மாத டிஏ உயர்வு செப்டம்பர் கடைசி வாரத்தில் அறிவிக்கப்பட்டது.
- ஆகையால், கடந்த கால அறிவிப்புகளைப் பார்க்கும்போது, இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு செப்டம்பர் கடைசி வாரத்தில் அல்லது அக்டோபர் மாதம் தீபாவளிக்கு அருகில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இது ஒரு எதிர்பார்ப்பு மட்டுமே என்பதையும் முறையான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு அரசாங்கத்தால் வெளியிடப்படும் என்பதையும் நினைவில் கொள்வது நல்லது.
மத்திய அமைச்சரவை வழக்கமாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் புதிய அகவிலைப்படி விகிதத்தை அங்கீகரிக்கும். இது ஜூலை முதல் பொருந்தும் என்பதால் ஜூலை முதலான அகவிலைப்படி அரியர் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும்.
தற்போது, அகவிலைப்படி 55% ஆக உள்ளது. ஜூலை மாத திருத்தத்தில் இது 3% அதிகரித்து மொத்த அகவிலைப்படி 58% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி முதல் ஜூன் வரையிலான AICPI எண்களின் அடிப்படையில் டிஏ உயர்வு தீர்மானிக்கப்படுகின்றது.
அகவிலைப்படி உயர்வு (DA) தொழிலாளர் பணியகத்தால் மாதந்தோறும் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. முந்தைய 12 மாதங்களுக்கான CPI-IW தரவை சராசரியாகக் கொண்டும், 7வது ஊதியக் குழுவின் கீழ் ஒரு குறிப்பிட்ட சூத்திரத்தைப் பயன்படுத்தியும் அரசாங்கம் DA உயர்வைக் கணக்கிடுகிறது:
அகவிலைப்படி (%) = [(CPI-IW -இன் 12 மாத சராசரி – 261.42) ÷ 261.42] × 100.
261.42 என்ற எண்ணிக்கை 7வது ஊதியக் குழுவின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை CPI-IW சராசரி (2016 அடிப்படை ஆண்டு) ஆகும்.
- அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்தால், ரூ.18,000 அடிப்படை சம்பளம் பெறும் ஊழியரின் மாத சம்பளம் ரூ.540 அதிகரிக்கும்.
- அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்தால், ரூ.9,000 ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.270 கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ