)
Bank Holiday December Latest News: பணப் பரிவர்த்தனை போன்ற சேவைகளுக்காக நாம் வங்கிகளுக்கு அடிக்கடி சென்று வருகிறோம். என்னதான் டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்தாலும், வங்கிளுக்கு செல்வது பிரதானமாக உள்ளது. நவம்பர் மாதம் இன்றும் 6 நாட்களில் நிறைவ பெற உள்ளது. இந்த நிலையில், டிசம்பர் மாத வங்கி விடுமுறைக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. இதனை தெரிந்து கொண்டு, நீங்கள் வங்கிகளுக்கு செல்ல திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் வங்கி விடுமுறையை பொறுத்தவரை, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கும் திருவிழா, விசேஷ தினங்களுக்கு ஏற்றவாறு வங்கிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். இதனால், ஒவ்வொரு மாநிலத்திற்கு வங்கி விடுமுறை மாறுபடுகிறது. எனவே, டிசம்பர் மாதத்திற்கு வங்கி விடுமுறை குறித்து பார்ப்போம். டிசம்பர் மாதத்தில் மொத்தம் 19 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதன்படி, டிசம்பர் 1ஆம் தேதி திங்கள்கிழமை மாநில பதவியேற்பு நாளையொட்டி அருணாச்சலப் பிரதேசத்தில் வங்கிகள் மூடப்படும். டிசம்பர் 3 ஆம் தேதி புதன்கிழமை புனித பிரான்சிஸ் சேவியர் தினத்திற்காக கோவாவில் வங்கிகள் மூடப்படும். டிசம்பர் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை பா டோகன் நெங்மிஞ்சா சங்மா தினத்திற்காக மேகலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
டிசம்பர் 18ஆம் தேதி வியாழன் கிழமை குரு காசிதாஸ் ஜெயந்தியை யொட்டி, சத்தீஸ்கரில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. சோசோ தாமின் நினைவு தினம் அன்று மேகலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. டிசம்பர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை கோவா விடுதலை தினத்திற்கு வங்கிகளுக்கு விடுமுறை, டிசம்பர் 24ஆம் தேதி புதன்கிழமை கிறிஸ்துமஸ் ஈவ் அன்று மேகலயா, மிசோரம் பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை. டிசம்பர் 25ஆம் தேதி வியாழன் கிழமை அனைத்து மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விடுமுறை அறிக்கப்படுகிறது.
டிசம்பர் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக மிசோரம், தெலங்கானா, மேகாலயாகவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. டிசம்பர் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை தியாகி உதம் சிங் பிறந்தநாளையொட்டி ஹரியானா வங்கிகளுக்கு விடுமுறை, டிசம்பர் 27ஆம் தேதி சனிக்கிழமை குரு கோவிந்த் சிங் ஜெயந்தியையொட்டி, ஹரியானா, பஞ்சாப், இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை, டிசம்பர் 31ஆம் தேதி புதன்கிழமை அன்று மிசோரம், மணிப்பூர் மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதனை தவிர, டிசம்பர் 7ஆம் தேதி ஞாயிற்றுகிழமை, டிசம்பர் 13ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, டிசம்பர் 27 நான்காவது சனிக்கிழமை, டிசம்பர் 14, 21,28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தமாக டிசம்பர் மாதத்தில் 19 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. வங்கி விடுமுறை நாட்களில், வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், UPI மற்றும் ATMகள் மூலம் சேவைகளைத் தொடர்ந்து அணுகலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ