)
PM Kisan Samman Nidhi Yojana: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 உதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக, ஒவ்வொரு தவணையிலும் தலா ரூ.2000 வீதம் அளிக்கப்படுகின்றது. இந்த தொகை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றது.
PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
இந்த முறை 20வது தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல விவசாயிகள் தங்கள் 2000 ரூபாய் சிக்கிக்கொள்ளக்கூடுமோ என்று கவலையில் உள்ளனர். எனினும், சில குறிப்பிட்ட விவசாயிகளுக்கு மட்டும் இந்த தாமதம் ஏற்படவில்லை. அனைவருக்குமே இது உள்ளது. ஜூன் 20ஆம் தேதி 20வது தவணை வழங்கப்படும் என பல இடங்களில் கூறப்பட்டு வந்ததால், விவசாயிகள் இடையே இந்த குழப்பம் ஏற்பட்டது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா
இந்த மாத இறுதிக்குள் பிஎம் கிசான் 20வது தவணை வெளியிடப்படும் என கூறப்படுகின்றது. எனினும், சில முக்கியமான வேலைகளை சரியான நேரத்தில் முடிக்காவிட்டால், இந்த தவணை சிக்கிக்கொள்ளக்கூடும்.
PM Kisan: இந்த முக்கியமான பணிகளை முடிக்கவும், இல்லையெனில் 20வது தவணை கிடைக்காது
Aadhaar Bank Linking: வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டும்.
உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக உள்ளதா என்பதையும் அது ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
e KYC: பிஎம் கிசானுக்கு e-KYC அவசியம்
e KYC செயல்முறையை செய்து முடித்த நபர்களுக்கே பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் பலன் கிடைக்கும். தகுதியுள்ள விவசாயிகள் மட்டுமே திட்டத்தின் பலனைப் பெற வேண்டும் என்ற நோக்குடன் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பயனாளி விவசாயிகள் e-KYC செய்வது எளிது. இதைச் செய்ய மூன்று எளிய வழிகள் உள்ளன.
e KYC செய்து முடிப்பதற்கான 3 எளிய வழிகள்
OTP அடிப்படையிலான e-KYC: உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும், இதனால் நீங்கள் வீட்டிலேயே e-KYC செய்யலாம்.
பயோமெட்ரிக் அடிப்படையிலான e-KYC: அருகிலுள்ள CSC மையம் அல்லது ஜன சேவா மையத்திற்குச் சென்று கைரேகை மூலம் e-KYC செய்யலாம்.
முக அங்கீகாரம்: வயதான விவசாயிகளின் வசதிக்காக முகத்தை ஸ்கேன் செய்யும் வசதியை அரசாங்கம் வழங்கியுள்ளது. இதனால் அவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் இடத்திலிருந்தே இதை செய்து முடிக்கலாம்.
Land Verification: நிலப் பதிவுகளைச் சரிபார்க்கவும்
திட்டத்தின் பலனைப் பெற, சரியான நில ஆவணங்களைச் சமர்ப்பிப்பது அவசியம். நிலம் தொடர்பான ஆவணங்களைச் சரிபார்க்க பல மாநிலங்களில் செயல்முறை நடந்து வருகிறது. உ.பி., மத்தியப் பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் இதற்காக விவசாயிகள் பதிவேடு செய்யப்படுகிறது. நிலம் தொடர்பான தேவையான தகவல்களை நீங்கள் இன்னும் புதுப்பிக்கவில்லை என்றால், உடனடியாக அதைச் செய்து முடிப்பது நல்லது. இல்லையெனில் உங்கள் அடுத்த தவணை சிக்கிக்கொள்ளக்கூடும்.
PM Kisan Portal: இந்த போர்டலில் நிலையை செக் செய்யலாம்
பிஎம் கிசான் போர்டலுக்குச் சென்று உங்கள் விண்ணப்ப நிலை மற்றும் கட்டண நிலையைச் சரிபார்க்கலாம்.
PM Kisan இன் அடுத்த தவணை எப்போது வரும்?
PM Kisan Samman Nidhi Yojana இன் 20வது தவணை ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், e-KYC, ஆதார் சீடிங்க் அல்லது நில சரிபார்ப்பை இன்னும் செய்யாத விவசாயிகள் இந்த முக்கியமான பணியை விரைவில் முடிக்க வேண்டும். மேலும், விண்ணப்பத்தில் ஏதேனும் தவறு இருந்தால், அதாவது, பெயர், ஆதார் அல்லது வங்கிக் கணக்குத் தகவல் தவறாக இருந்தால், உடனடியாக அதைச் சரிசெய்யவும். இதனால் ரூ.2000 தவணை அவர்களின் கணக்கில் சரியான நேரத்தில் வந்து சேருவதை உறுதி செய்துகொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ